எண்ணற்ற துயரம் வந்து
என் நெஞ்சை கொல்கிறதே!
புண் பட்ட உள்ளத்திலே
பூகம்பம் எழுகிறதே!
இதை அடக்க வழியைத் தான் தேடுகிறேன்- நான்
இருந்தும் ஊமையாய் வாடுகின்றேன்!
கனவு சிதைவதைக் காணுகின்றேன் எதிர்
கால முடிவைத் தான் தேடுகிறேன்!
பறவை என்றால் சிறகுகள் வேண்டும்
பேசிப் பழக உறவுகள் வேண்டும்
நிலைமை இங்கு வேறானதே என்
நினைப்பும் இதனால் நீறானதே!
கலகம் நிறைந்த பூமியிலே
காணும் யாவும் பொய்யானதே
உலகம் இதைத் தான் விரும்புதடா
ஊமை நாடகம் ஆடுதடா!
இறந்தவர் தொகையை எண்ணி எண்ணி
இருப்பதை விடவும் மரணம் மேல்
சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
சிந்தையில் எட்டுதா பாரிங்கே!
ஒருதலைப் பட்சத் தீர்வு இதனால்
ஒழிந்திடும் அழகிய தீவு!
உயிர்களைக் காப்பது இனி யாரு ?
எல்லாம் உணர்ந்தவரே பதில் கூறு ?
( எண்ணற்ற துயரம் வந்து..)
இலங்கைத் தமிழனின் நெஞ்சங்களில் உள்ள குமுறலை , கவிதையாய் படம் பிடித்து காட்டி விட்டீர்கள் !
ReplyDeleteத ம 1
தங்கள் தாயகத்துக் குழந்தைகளின் கண்ணீர் கவிதையில் வடிகின்றது!
ReplyDelete//உயிர்களைக் காப்பது இனி யாரு ?..
எல்லாம் உணர்ந்தவரே பதில் கூறு ?...//
பதில்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் சகோதரியாரே!
"கலகம் நிறைந்த பூமியிலே
ReplyDeleteகாணும் யாவும் பொய்யானதே
உலகம் இதைத் தான் விரும்புதடா
ஊமை நாடகம் ஆடுதடா..." என்ற
அடிகளில் ஈழவர் நிலை தெரிகிறதே!
காலம் ஒரு நாள் மாறும்
ReplyDeleteகவலைகள் யாவும் தீரும்
தம 3
புண்பட்ட மனதின்
ReplyDeleteஎண்னற்ற வேதனைகள்!...
கவிதை மனத்தையும் கண்களை நீரும் நிறைத்தன...
அருமை!
குமுறல் உங்கள் கவிதையில்....
ReplyDeleteத.ம. +1
சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
ReplyDeleteசிந்தையில் எட்டுதா பாரிங்கே .....
= தேடத் தான் வேண்டும்.
நெகிழ வைக்கிறது. வாழ்த்துகள்.
உண்மை வரிகளில்...
ReplyDeleteபறவை என்றால் சிறகுகள் வேண்டும்
ReplyDeleteபேசிப் பழக உறவுகள் வேண்டும்//
உண்மை.புண்பட்ட நெஞ்சில் எழும் நினைவுகள் கவிதையாக
மனது வேதனைப் படுகிறது.
இறைவன் நல்ல வழி காட்ட வேண்டும்.
வலி மிகுந்த கவிதை...காலம் மாறும் சகோதரி
ReplyDeleteஒருதலைப் பட்சத் தீர்வு இதானால்
ReplyDeleteஒழிந்திடும் அழகிய தீவு ......
உயிர்களைக் காப்பது இனி யாரு ?..
எல்லாம் உணர்ந்தவரே பதில் கூறு ?...
ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு அந்த நிலை தான் நமக்கும் போல என்ன செய்வது.மிக நன்று வாழ்த்துக்கள் தோழி..!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
காலம் ஒரு நாள் மாறும்
பாடிய சிந்து ஒருநாள் மீண்டும் ஒலிக்கும் அம்மா
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேதனைகளை வெளிப்படுத்தும் கவிதை. நல்லதோர் முடிவினை எதிர்பார்ப்போம்.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
தாய் நாட்டு மக்களின் வேதனையை தெள்ளிய தமிழில் பாடிவிட்டீர்கள்! விரைவில் உங்கள் நாட்டின் வேதனை அகலட்டும்!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
எண்ணற்ற துன்பத்தை ஏந்தும் கவிகண்டு
புண்பட்டுப் போகும் புலன்
படிப்பவரும் உணர்ச்சிக் கொள்ளும் வண்ணம்
ReplyDeleteபடைத்த கவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 11
ReplyDelete