11/30/2011

அழகென்ன அழகு..இதுதான் அழகு!....

பூ வைத்து பொட்டு வைத்து 
புன்னகை சுமந்தபடி வெண்ணிலவு 
அவள் மெல்ல மெல்ல நடந்து வர 
என் உள்ளமதில் கம்பனைக் கண்டேன் !...


இது கற்பனை இல்லையெடி பெண்ணே 
காலம் காலமாய்க் கன்னியரின் அழகைக்
கண்டு கண்டு கவிபாடிய வண்டினத்தவன்
நான் சொல்லும் ஒரு சேதி கேளு ...........


முழு ஆடை உடலதை  மறைக்க 
முகமது நிலத்தை நோக்க 
புல் சிலும்பாமல் நடக்கும் பெண்ணைப்
படைத்தவனும் கண்டு அசர்வான் !.......


இது ஏது இவ்வுலகில் இன்று 
எல்லாமே மாறிப் போச்சு !........
துணிப் பஞ்சம் வந்தால்க்கூட இனித் 
துவண்டு போகாது எம் மங்கையர் உள்ளம்!.....


தினம்தோறும் குறுகிப்போகும் 
நவ நாகரிக உடையில் -இன்று 
பிறந்தாற்போல் திரியும் பெண்கள் 
இனி எங்கு திருந்துவார்கள் சொல்!....


முகநூலில் போட்டி போட்டு 
முழுசாக உடலைக் காட்டும் 
அநியாயப்பட்ட கும்பல் 
அதுகூடப் பெருகிப் போச்சு.....!!!


சினிமாவால் தொட்ட மாயை 
தெருவெங்கும் குட்டி போட்டு
விலைமாதர் போல பெண்கள் 
தம் விருப்பம்போல் அலைகின்றார்கள்!...


ஒருவேளை புத்தி சொன்னால் 
உள் நுழையாத வார்த்தை நாலு 
அது ஏதோ இங்கிலீசாம்!.......... 
அடி போடி பைத்தியக்காரி


தெருவோரம் போகும் காளை
தீண்டாதோ உந்தன் உடலை
மெருகூட்டி நாளும் காட்டி எம் முன் 
மின்னல்போல் போகும் பெண்ணே!....


பிடிவாதம் வேண்டாம் இனியும் 
போடாதே இந்த ஆட்டம் .............
குடி மூழ்கிப் போகும் முன்னே 
முழுசாய்க் கட்டடி சேலை  பெண்ணே!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/29/2011

இவள்போல் இல்லை அவள்!...........

அன்று எட்டுப் பிள்ளைகள் பெற்ற எம் 
தாய்மார் எந்தக் கஸ்ரமும் சொல்லவில்லை
இன்று இரண்டு பிள்ளைகள் பெற்றவள் கதையை 
நின்று கேட்க முடியவில்லை ................!!!!!!


எம்மைக் கஸ்ரப்பட்டு வளர்த்த அந்தத் 
தாயின் முகத்தைப் பார்க்கையிலே 
இன்று இஸ்ரத்துக்கும் பேசும் இவளை 
ஏனோ என் மனமும் ஏற்க்கவில்லை!...


பற்றைகுள்ளே விறகு எடுக்கப்
பாம்பும் தேளும் ஓடி மறையும்!..
அதைப் பற்றவைக்க அடுப்பின் முன்னே 
பாதி உசிர் வெந்து  போகும்!...............


கொத்துக் கொத்தாய் அரிசி இடித்துக்
குழம்பும் சோறும் ஆக்கிவைத்து பின் 
புட்டுக் குத்திப் போட்டும்  தாயின் 
புன்னகைக்கு ஏது எல்லை .............!!!


கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் இதமாய் 
கை கால் பிடிக்கும் தாயின் உணர்வில் 
அன்புமட்டும்தான் தெரியும் எமக்கு 
அவள் அலுப்பு என்றும் தெரியாதே!......


இப்போ பிறசர்குக்கர் சமைத்த சாதம் 
பிறிச்சில் பல நாள்காத்திருக்கும் 
அதை எடுத்துப் போட்டு சூடு காட்டி 
குட்டுக்கக் கூட பஞ்சியாம் அட ச்சீ.......


படுத்த படுக்கையில் கிடந்துகொண்டே 
பாடாய் படுத்தும் சில பெண்களுக்கு 
இப்படி அடுத்த வார்த்தை பேசாமல் 
அடங்கிப் போகும் சில ஆண்களால்தான் 
புகுந்த வீட்டுப் பெருமை எல்லாம் இன்று 
புழுதியில் விழுந்து புரளுதையோ!...........
நரம்பில்லாதா நாக்கால் இவர்கள் 
பேசும் வார்த்தைகள் சகிக்கவில்லை!...


விருந்துகூடப் போடும் பண்பு இங்கே 
மருந்துபோல் ஆன பின்னாலும் தாயால் 
வருந்தி உழைத்த பணத்தைக் கொடுத்து 
வருத்தம் தேடும் குழந்தைகள் பார் ......!!!!


எடுப்புச் சாதம் கொடுக்கும் தீமை இதை 
இவர்கள் என்று உணரப் போறாரோ!...
எமக்கெனக் கொடுத்து வைத்த மருமாள் 
இவளை கும்புடவும்தான் முடியுமா என்றும்!...


இவள் முகத்தில் பூசும் முகப் பூச்சுக்கே
மூன்று காலமும் வேலை செய்து 
கறுத்து மெலிந்த உடலில் உயிரை இன்னும்
காக்கத் தவிக்கும் கணவனைப் பார் .........!!!


எதற்கும் ஒரு எல்லை உண்டு நாகரீகத்தால் 
இன்று எல்லை தாண்டிப் போன பெண்களால் 
 ஈன்றெடுத்த சொந்தம் கூட எமக்கு இனி 
இல்லை என்று ஆயாச்சே...............!!!!!!!!!!!!!!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/28/2011

இதையும் கொஞ்சம் பாருங்க....

ஸ்ரீ ராமர் பாதம் தொட்டு மகிழ 
சீதை தவமாய்த் தவமிருப்பாள்
அந்தப் பேதை மனதை வர்ணிக்கப் 
புவியில் வார்த்தைகள் போதவில்லை!...


வாழும்போது உண்மை அன்பை இவர்கள் 
வாழ்க்கைத் தத்துவம் எடுத்துரைக்கும் 
அந்த ராம காவியம் பார்த்தால்ப் போதும் 
ரகளை செய்யும் மனித மனமும் திருந்தும்....!!!


ஊரும் உலகும் என்ன நினைக்கும் அந்த 
நினைப்பால் விளைந்த துயரும் புரியும் 
பாவம் புண்ணியம் அனைத்தும் விளங்கும் 
இதைப் பார்ப்பவர் மனதில் நீதி நிலைக்கும்!...


காலம் செய்யும் தவறு என்ன அதையும் 
கண்டிப்பாக உணர வைக்கும் ...........
மாலைப் பொழுதின் மயக்கம் தீரும் 
மனதில் ஒருவகை ஞானம் பிறக்கும்!...


ஏழ்மை நிலையது வந்தபோதிலும் 
அவர் தம் இதயக் கோவிலில் வீற்றிருக்கும் 
சீத்தா ராமர் அன்பிற்கிணையாய்
சிருஷ்டியில் எதுவும் இருக்கவில்லை!...


இதுவே கணவன் மனைவி உறவிற்கு 
நற் கருத்தாய் என்றும் விளங்கிட 
மனிதப் பிறவி எடுத்து வந்து இங்கு 
தெய்வம் நடத்திய அரிய நாடகம்!....


அருமை இந்தக் காவியம் அகத்தில் 
அன்பை வளர்க்கும் நல் ஓவியம்!...
மறையாது நெஞ்சில் நிலைத்திருக்கும் 
மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தோன்றும்!...


எனக்குப் பிடித்தது ராம காவியமும் 
இதற்கு இணையான சிலப்பதிகாரமும் 
எதற்கும் பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள் 
எங்கள் தவறையும் நாமே உணர்வோம்!......


அந்தக் கண்ணகி சீதை இருவரையும் எந்தன் 
கண்கள் தொழ என்றும் மறந்ததில்லை 
இன்னொரு ஜென்மம் நான் எடுத்தாலும் 
இறைவா எனக்கந்த வரத்தைக் கொடு!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2011

தீபங்கள் எரியட்டும் எண் திசையும்!....

கருவறை சுமந்த எங்கள் 
உயிர்களை இங்கே பல 
கல்லறை சுமந்து நிற்கிறதே!...
எரிகிற தீபம் திரும்பிடும் திசைகளில் 
எம் மாவீரர் முகங்கள் தெரிகிறதே!...


உருகிடும் இதயம் வடித்திடும் கண்ணீர் 
அது ஒளியதைத் தாங்கி நிற்கிறதே!..
இந்த இனியவர் பேசிடும் வார்த்தையைக்கேக்க 
ஒவ்வொரு உயிரும்  துடிக்கிறதே..............!!!!!!!


இங்கு மனமதை அடக்கி மௌனமாய் அழுதிடும் 
எங்கள் மக்கள் கூட்டம் கண்டாயோ .......
விடுதலை வேண்டிப் புதைகுழி சென்ற 
இந்தப் புனிதரை உலகம் அறியாதோ!......
சில தறுதலை எங்கள் வாழ்வினை அழித்த
சங்கதி இனியேனும் உலகுக்குத்  தெரியாதோ!...


குமுறிடும் உள்ளக் குமுறலை அடக்கக் 
குழந்தைகள்கூட மறுக்கிறதே..........!!!!
தெருவெளி எங்கும் பெரும் திரளென வந்து 
தீபங்கள் ஏந்தியே சென்ற உயிகளை உயிர்கள் 
மறுபடி பிறக்க வரமது கேட்டு மனம் அது உருகி நின்றனரே!..
கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா 
எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
எம் மனமது கொண்ட துயரினில் நின்று 
மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!............


இந்தக் கார்த்திகைப் பூக்களின் கண் மடல் திறந்து 
உந்தன் கருணை மழையைப் பொளியாயோ!....
நேற்றில்லை இன்றில்லை  அன்றுதொட்டு 
நேர்வழி சென்ற இனமிதனைக் 


காத்திட ஒரு வரம் கேட்டு தினம் 
ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை 
இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ 
இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/21/2011

இன்னும் ஏன் துன்பம் உனக்கு!......



நல்லோரும் தீயோரும் உலகில் உள்ளார் 
நாம் கொண்ட துயருக்கு இருவரும் தீர்ப்பு சொல்வார்...
எல்லோர் மனதையும் நிறையவைக்கும் 
ஒரு வாழ்வு வாழ்வதென்பது முடியாதிங்கே!....


உன்னாலே பிறருக்குத்  துன்பம் இல்லாத நல்
ஒழுக்கத்தைப் பின்பற்றினால்  போதும் அன்பே
கண்ணாலே காணாத செயல் விளம்பும் சில 
கயவர்களுக்காய் நீ என்றும் கண் கலங்காதே!...


விண் நோக்கி சூரியனையும் பழித்திடுவார் இவர்கள் 
விருப்பத்தை நிறைவேற்ற நீ ஏன் அழிவான்!......
சொன்னால் எதையோ சொல்லிவிட்டுச் செல்லட்டும் 
அந்த சுறணை அற்ற மனிதருக்காய் ஏன் வருந்துகிறாய்!... 


பொன்னான உன் மனதைப் புழுதியிலே தினம் 
புரட்டி எடுப்பதனால் சிலருக்கு மகிழ்வு இங்கே!..
என்ன தவறு செய்தாய் என்று நீயும் மனம் நொந்தாய்..
இதைமட்டும் உணர்ந்தாலே வாழ்வில் உய்வாய்!....


பொய் போட்ட சித்திரங்கள் அழிந்துவிடும் 
மெய் என்ற மழை பொழியும் நன் நாளிலே 
கல்லாக இருந்துவிடு நீ அதுவரைக்கும் பின் 
காற்றாகப் பறந்துவிடும் உன் துபம் எல்லாம்!...


அல்லல்கள் நிறைந்திடும் இந்த வேளைதனில் 
அமைதி என்றும் தேவை என்பதை உணர்ந்திடுவீர்!..
சொல்லாதே பலரிடமும் உன் சோகம் அதைப் பின் 
சூழ்ச்சி செய்தே சிலர் உன் வாழ்வை அழித்திடுவார்!...


வன் சொல்லு சொல்வார்க்கு என்றும் வாழ்வு இல்லை 
இது வையத்தில் நாம் கண்ட உண்மை அன்பே!.......
எந்நாளும் எவர்க்கும் வரும் துன்பம் இது இதனை 
ஏற்றுக்கொண்டாலோ வாழ்வில் உய்வு இல்லை!...


குற்றமற்ற மனதிற்குத் தேவை என்றும் தைரியம்
அதனால் குறுகாதே நீ எதற்குமே மனதளவில்
செற்றுவிட்டால் போதும் என்ற நினைப்பு ஆகாது!...
இங்கிருந்து நீ சென்றபின்னும் வந்த பழி தீராது!....... 


உற்ற பகை தீர்த்திடவே நிமிர்ந்து நில் ..........
நல் உயர்வான செயல் செய்து வளர்ந்து செல் 
கற்றவரை மதித்து இங்கே நல் உதவி பெறு
அந்தக் கயவர்களின் முகத் திரையைக் கிழித்து எறி


நற் புகழை நாம் வளர்த்தோம்  எதர்க்காக...........
இந்த நானிலமும் போற்றிடுமே அதற்காக 
துச்சமென மத்தித்து உயிரைத் துறக்காதே 
தூயவரே துணிந்து நின்று வென்றிடுவீர் துரோகிகளை!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/19/2011

எதையும் ஆராய்ந்து பேசுங்க!....

ஆத்திரக்காரி   கண்ணகி என்றும் 
அவளுக்கு இங்கேன் ஒரு கோவிலென்றும் 
கேட்பவர் யாவரும் அறிந்திடுவீர் அந்தக் 
கேள்விக்குப் பதிலிங்கு தெரிந்திடுவீர் !.....


பத்தினி தெய்வம் கண்ணகியின் 
பாசமிகு கோவலன் கொலையுண்டான் 
அரச காவலனால் நீதியற்று !
அன்று கண்ணகி போட்ட சபதம் இது !..... 
இதைத் தப்பென உணரும் சான்றோரே 
உன்றன் தவறினை உணர்ந்திடு இக்கணமே !
அன்பே  உருவான  இராமனும்தான் 
அன்று தன்நிலை மறந்த காட்சி  இது !
வற்றாத அன்பிற்குப் பங்கம் வந்தால் 
வையத்தில் யாவரும் தவறிழைப்பார் -தான் 
செத்தாலும்   இந்நிலை மாறமாட்டார் 
சீதை இருபதனால்த்தான் ராமன் சாந்தி பெற்றார்!...


கற்றவர்க்கும்  கல்லாதவர்க்கும் இவ்வுலகில் 
கண்ணீரை வரவழைப்பதும் அன்பு ஒன்றே!....
இந்தக் குற்றால  அருவி எங்கள் உள்ளத்திலே 
குளிர்சியைத் தந்திட நாம் வாழ்கின்றோம் !


இது வற்றிடும் நிலைவந்தால் தாங்கிடுமோ !
இங்கு வந்ததால் தானே  இத்தனை துன்பம்!.
சுற்றமே ஏங்குது தினம் அன்பிற்காக -இதைச் 
சுகப்பட விட்டால் வம்பில்லையே!...
அறியாமை என்கின்ற  தீப்பிளம்பேந்தி
அழித்திட்டால் வருமோ வாழ்வினில் சாந்தி!.
பொதுநீதி வழங்கிடும் கூட்டமே உன்றன் 
பொருள்  மாளும் மாளாது உலகினில்  "அன்பு "!

இது நிறைகின்ற உள்ளத்தில் நின்மதி நிலைக்கும் 
நீறாகிப் போனாலோ உயிர் நெருப்பினில் தவிக்கும் ! 
மாறாத மனதுடையோர் மறக்கவும் மாட்டார் 
வேறோர் உறவுதேடி வெறுக்கவும் மாட்டார்!....

கூறாதே இனியும் குறைகளை என்றும் 
நேசித்துப்பார் உலகினில் அன்பை 
வேறேதும் வழியின்றிச் சரணடைவாய் -இதன் 
விருப்பத்தால் பலநூறு கவிதையும்  வடிப்பாய் !                                                 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/18/2011

இதனால் யாருக்கு என்ன நட்டம்!...

கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக என அந்த
வள்ளுவர் சொன்ன வாக்குகமைய 
வந்தேன் ஒரு கவிதை புனைந்திட....


நீ சுற்றம் தழுவிடு 
வந்த சொந்தம் பெருக்கிடு 
நித்தம் பழகிடும் உறவோடு 
யுத்தம் துறந்திடு .......
விட்டுக் கொடுத்திடு எதிலும் 
விழிப்பாய் இருந்திடு 
ஆசையை மட்டுப் படுத்திடு 
மனத்தைக் கொஞ்சம்  கட்டுப்படுத்திடு 


எட்டுத் திக்கும் உன் பெயரை 
என்றும் உணர்ந்திட நற் கருமம் 
அதை விட்டுச் செல்லு பூமியிலே 
நீ வீழ்ந்தும் எழுவாய் மரம்போலே!...
நித்தம் நிகழ்த்தும் செயல்கூட 
பிறர்க்கு நிழல்போல் என்றும் உதவட்டும் 


கொட்டும் மழைபோல் யாவர்க்கும் 
நாம் கொடுக்கும் பலனை மறப்போமே!...
முத்தம் தந்து சிரித்திடும் மழலை 
முகம்போல் மனத்தைக் காப்போமே!..


சத்தம் இன்றி வாழ்வினிலே என்றும் 
தத் தம் பணிகளைச் செய்வோமே 
ஒப்புக்கொரு வார்த்தை சொல்லி 
ஓர வஞ்சனை அதைச் செய்யாமல் 
மிகு துக்கம் வந்த போதினிலும் அன்பின் 
தூய்மை காத்து நிற்போமே...........


சத்தியத்தை மதித்து என்றும் 
வரும் சங்கடத்தை வென்றிடுவோம் 
மிகு குற்றம் பார்த்து ஒதுங்காமல் 
பிறர் மேன்மை கருதியும் உழைத்திடுவோம்
கற்றவித்தை அதன் பயன்கொண்டு 
இந்தக் கலியுகத்தை மாற்றிடுவோம் 


பெற்றவரும் மற்றவரும் எமைக்கண்டு 
பெருமைகொள்ளச் செய்திடுவோம் 
உற்ற துணை இன்புறவும் கொஞ்சம் 
இரக்கம் காட்டி மகிழ்ந்திடுவோம் 
நற்றமிழைப் பயின்ற வாயால் 
எங்கும் நல்ல வார்த்தை பேசிடுவோம்...


துச்சமென மதித்து உயிரைத் 
துன்புறுத்தும் பாவிகளை 
எக்கணமும் எதிர்த்து இங்கே 
எதற்கும் குரல் கொடுத்திடுவோம் 
அச்சமின்றி இவ்விடத்தில் 
அனைவருக்கும் தோள் கொடுப்போம் 
இச்சைகளைக் களைந்து தினம் 
இருட்டை விட்டே வெளிவருவோம்!.... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/14/2011

வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள்...

அடடா எதை எழுதுவேன் !..எவ்வாறு எழுதுவே !...மிகவும் பொறுப்பு 
வாய்ந்த ஆக்கத்தின் தொடரை எவ்வளவு தன்னம்பிக்கையுடன் 
தொடர இந்த அம்பாளடியாளின் வாசல்க் கதவைத் தட்டி அழைப்பு 
விடுத்தாரோ அந்த அமைதிச் சாரலின் அன்பு உள்ளத்தின் அழைப்பை 
ஏற்று என் எண்ண அலைகளில் தோன்றும் கருத்தினை உங்களுடன் 
பகிர்ந்துகொள்ள வந்திருக்கின்றேன் தவறுகள் இருந்தால் சுட்டிக் 
காட்டி மன்னியுங்கள் .(எனக்குத் தெரியும் என் வலைத்தள உறவுகள் 
எப்போதும் என்மீது தனீப்பாசம் உள்ளவர்கள் அதனை அடுத்த பதிவில் 
பார்ப்போம் !...........இப்போது 
                                மழலைகள் உலகமே மகத்தானது .(தொடர் பதிவு )
                                                                  
தென்றலைப்போல் திங்களைப்போல் எங்களை வருடும் உங்களை
வாழ வைக்கும் வழிகளை அம்மா நானும் சொல்லப் போகின்றேன் 
அழகிய மலர்ச் செண்டுகள் இவர்கள் அமுத விழி பார்த்தால் மனதில் 
ஆயிரம் இன்ப அருவிகள் கொட்டும் .இந்தப் பட்டாம் பூச்சிகளின் 
எண்ணம் ஓர் அழகிய சித்திரக் கூடம் .இதில் கற்க நிறைய நல்ல அற்புதமான விசயங்கள் உண்டு .குற்றமற்ற இந்த உள்ளங்களால் 
என்றும் யுத்தங்கள் நிகழ்வதில்லை .ஆனாலும் இவர்கள் வளர்ந்து 
வரும்போது எவ்வாறு வர வேண்டும் என்பதை எமது வாழ்க்கையின் 
நடைமுறைகள்தான் தீர்மானிக்கின்றன .
                               உதாரணத்திற்கு நேற்று உங்கள் உறவுகளுடன் நீங்கள் 
போட்ட சண்டை அல்லது தவறான வார்த்தைப் பிரயோகம் அல்லது 
சைகைகள் இவற்றை உங்கள் குழந்தை எவ்வாறு கிரகித்து அழகாய்ப் 
படம் பிடித்துள்ளான் என்பதை அவன் செய்து காட்டும்போது அந்த இடத்தில் உங்களை உடன் நினைவுக்கு அழையுங்கள் அதில் உங்கள் 
குட்டி பிம்பம் தோன்றி மறையும் !.....அதுமட்டும் அல்ல நீங்கள் செய்த 
அழகிய விசயமும் தெரியும் இதில் உங்கள் பிள்ளைக்கு தேவை எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் ."
           குழலினிது யாழ் இனிது என்பார் தம் மக்கள் மழலைச் சொல் 
கேளாதவர்கள் "!......ஆகா........எத்தனை மகத்தான உண்மை இது !............
அற்புதமான இந்த உணர்வை இன்றைய வளர்ந்துவரும் எமது 
சமூகத்தினரில் எத்தனைபேர்தான் பொறுமையாகக் கேட்டும் 
ரசித்தும் வந்துள்ளனர் ?..சொல்லப்போனால் இந்தப் பாக்கியத்தை 
அந்தக் குழந்தயை வளர்க்கும் ஆயாகூடப் பெற்று இருப்பாள் .பாவம் இங்கும் எத்தனை குழந்தைகளுக்கு நல்ல ஆயாக்கள் தம் அம்மா போல் கிடைத்திருப்பார்கள் ?இந்த இடத்தில்த்தான் பிள்ளைகள் பெரும்பாலும் 
பெற்றோர்களின் அன்பை அரவணைப்பை இழக்கின்றனர் !........
            அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வேலைநாள் போக .கிடைக்கும் 
ஓய்வு நாளில் வீட்டைச் சுத்தம் செய்யவும் ,வரும் விருந்தினரைக் 
கவனிக்கவும் ,விழாக்களுக்கு சென்றுவரவும் ,உறவினரை சந்திக்
கவும் கொடுக்கல் வாங்கல் பார்க்கவும் ,தொடர் சீரியல் பார்க்கவும் 
தொலை பேசி அழைப்பு ,அதனால் வரும் யுத்தங்கள் விவாதங்கள்  தீர்க்கவும் நேரம் சரியாக இருக்கும் .இதற்குள் பிள்ளைகளின் படிப்பு விசயத்தையும்கூட பார்ப்பதானால் பாசம் பொழிய வருகின்றதோ இல்லையோ கோவம் அதிகமாக வரும் .வரும் கோவம் அதுவும் கட்டுக்கடங்காமல் போனால் அடிதான் போடச் சொல்லும் .இப்படி 
அடித்ததும் எங்கள் பிஞ்சுகள் மனதில் இவ்வாறுதான் எண்ணம் 
எழும் .அதை எல்லாப் பிள்ளைகளும் இவன்போல் சட்டென 
வெளிக்காட்ட மாட்டார்கள் .என்றோ ஓர்நாள் இதன் தாகத்தை 
வைத்து ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டினால் எம்மால் தாங்க 
முடியாது இல்லையா .அதனால் பெற்றோர்களாகிய நாம்தான் 
கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் .அத்துடன் எம் 
பெற்றோர்களிடம் வளர்ந்துவரும் போட்டி மனப்பாண்மை அதன் 
விளைவாக சில பெற்றோர்கள் பிள்ளைகளை தயார்ப்படுத்தும் விதம் 
பார்பதற்க்கே மிகக் கொடுமையாக இருக்கும் .உதாரணத்திற்கு யாரோ 
ஒரு பிள்ளை நடனம் பழகுகின்றான் ,சங்கீதம் ,வயலின் ,கணணி ,
கறாத்தே பழகுகின்றான் என்றால் என் பிள்ளையும் அவன்போல் 
நிறையப் பழக வேண்டும் என்று முடிவெடுத்து ஓட ஓட விரட்டி அதை 
பயிலத் தொடக்கிவிட்டு பின் எல்லாவற்றையும்  அந்தப்பிள்ளையால் 
தொடர முடியாமல்ப் போக அரைகுறையில் நிப்பாட்டி விடுவார்கள் .
இந்தமாதிரிப் பெற்றோர்கள் நிட்சயம் ஒன்றைத் தெரிந்துகொள்ள  
வேண்டும் .
               இயற்கையாக  எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓர் திறமை 
கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம்  
ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க 
முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு 
கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து 
திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .
அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல் மிக 
மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை 
புரிய முடியாது .அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் மெல்ல மெல்லத்தான் வளர்த்தெடுக்க வேண்டும் .அதை விட்டுவிட்டு அடித்து 
துன்புறுத்தி கற்பித்துவந்தால் பிள்ளைக்கு அதனால் அதிகம் வெறுப்பும் 
பய உணர்வும் தொத்திக்கொள்ளும் .உங்களுக்கும் விரைவில் 
பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு விடும் .நான் அறிந்து இங்கு 
வெளிநாடுகளில் எமது பெற்றோர்கள் படும் துன்பம் சொல்லி 
வேலை இல்லை .ஒன்று அவர்களுக்கென போதிய அனுபவம் 
இல்லாமை .கூடவே போட்டி மனப்பாண்மை இவ்விரண்டு விசயமும் மனதைக் குடைந்ததும் பேசாமல் நம் நாட்டுக்கு போய்விட
வேண்டும் என்பார்கள் .எங்கு போனாலும் பிள்ளைகளின் விசயத்தில் பொறுமை அதிகம் வேண்டும் என்பதை எல்லாப் பெற்றோரும் 
புரிந்துகொள்ள வேண்டும் .
                        அத்துடன் அதிக பிள்ளைகள் உள்ள இடத்தில் எப்போதும்
ஒரு குழப்பம் இருக்கும் அதாவது அண்ணன் வாங்கிய மார்க் தம்பி 
வாங்க மாட்டன் இந்த இடத்தில் பெற்றோர்கள் மூத்தவனைத் தலை 
மீது தூக்கிவைத்து ஆடினால் இளையவன் மனம் நோகும் இது மாறி 
யும் நிகழும் .பிள்ளைகளுக்கு மத்தியில் நாம் இவ்வாறு பாகுபாடு 
காட்டிவந்தால் எதிர்காலத்தில் பிள்ளைகள் மனம் இதனால் மிகவும் 
பாதிப்பிற்கு உள்ளாகும் .பின் நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் 
கேட்க்க மாட்டார்கள் என்ற நிலை வந்துவிடும் .அதனால் நாம்தான் 
மிக அவதானமாக செயல்பட வேண்டும் .என்றும் அடம்பிடிக்கும் பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள் .முடிந்தவரை 
அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள் .
                      பிள்ளைகளை ஏசும்போதும் கண்டிக்கும்போதும் உங்கள் 
தனிப்பட்ட பிரச்சனைகளை மனதில்க்கொண்டு செயல்படாதீர்கள் .
பெற்றோர்கள் உங்களுக்குள் வாக்குவாதம் முற்றும்போது எப்போதும் 
பிள்ளைகளை அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள் .உறவினர்களுடன் 
உங்களுக்கு உள்ள புரிந்துணர்வு அற்ற குழப்பத்தை வளர்ந்துவரும் 
உங்கள் பிள்ளைகளிற்கு தவறான முறையில் ஒப்பிக்காதீர்கள் .
முடிந்தவரை பிள்ளைகளை உங்கள் தீய பழக்கங்களில் இருந்து 
அதாவது கெட்ட வார்த்தை பேசுதல் ,சண்டை இடுதல் ,பிறரைத் 
தூற்றுதல் ,பொய் உரைத்தல் ,வன்சொல் பேசுதல் போன்றவற்றில் 
இருந்து அவர்களை  நல்லபடியாக வாழ வழி செய்யுங்கள் .இதுதான் 
உங்கள் பிள்ளையை நாளை இந்த சமூகம் மதிக்கத் தக்க நல்ல 
இடத்திற்கு இட்டுச் செல்லும் .அத்துடன் அவசர உலகில் நாம் எமது 
பிள்ளைகளுக்கு காட்டும் எல்லாவித அக்கறையோடும் அவர்கள் 
கேட்க்கும் கேள்விகளுக்கு மிக பொறுப்புடன் எங்கள் பதிலைக் 
கொடுத்துவந்தால் நிட்சயம் அந்தப் பிள்ளையின் அறிவு வளர்ச்சிக்கு 
அது மிகவும் உறுதுணையாக நிற்கும் .
                     குழந்தைகள் விரும்பும் பட்சத்தில் எம்மோடு இணைந்து 
சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்கும் நாம் அனுமதி வழங்கல்
என்பதும் வரவேற்கத் தக்கது .அத்துடன் சுத்தம் பேணுதல் ,சுயமாக 
தன் கடமையைத் தானே செய்யப் பயிற்றுவித்தல் ,பிள்ளைகளுடன் 
சேர்ந்து விளையாடப் பயிற்றுவித்தல் வயதானவர்களுடன் அன்பைப் 
பேணக் கற்றுக் கொடுத்தல் என்பதும் எம் தலையாய கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .
                                                              நீங்கள் அதிகம் வசதி படைத்தவர்கள் 
ஆயின் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் கேட்டதும் உடன் எதையும் 
வேண்டிக் கொடுக்காதீர்கள் .பிள்ளைகள் அடம் பிடித்தால் நாம் 
உடன் எதையாவது வேண்டிக் கொடுப்பதன்மூலம் எங்கள் பிரச்சனை 
தீர்ந்து விடலாம் .ஆனால் அந்தப் பிள்ளைக்கு இதனால் வருங்கால 
வாழ்வில் பொறுப்புணர்வு அற்ற செயல் அதிகமாக கஸ்ரத்தைக் 
கொடுக்கும் .இருக்கும்போது  கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் பின் 
இல்லாத காலத்திலும் அந்தப் பிள்ளையால் உங்களுக்கு என்றும் 
அனுசரணை யாக நடந்துகொள்ள முடியும் .முடிவில் ஒன்றை மட்டும் 
அறுதியும் உருதியுமாகச் சொல்கின்றேன் .பிள்ளைகளை நாம் எம் 
தன்நலன் கருதாமல் அவர்களின் எதிகால நலன் கருதி மிக மிக 
பொறுப்புடனும் வளர்ப்போமானால் அந்தப் பிள்ளைகளே நாளை 
எம் பெயரையும் காப்பாற்றும் என்பதில் ஐயம் இல்லை .கவிதை 
அடுத்த தொடரில் இடம்பெறும் .மிக்க நன்றி உறவுகளே வாழ்த்துக்கள் 
உலகில் உள்ள அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் இன்றைய 
நன்னாள் உங்கள் வாழ்வின் சிறப்பான பொன்னாளாக மலரட்டும் .
அத்துடன் இந்தத் தொடர்பதிவை தொடர அழைத்த அன்பு 
உள்ளத்துக்கு என் மனமார்ந் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக .

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/12/2011

எம் கேள்விக்குப் பதில் என்ன......

அகிறிணையா  நீ!..........
உயர்திணையா !......
அனைத்தும் அறிந்த மனிதா 
சொல் ...சொல் ...சொல் .......!!


ஆயிரம் ஆண்டுகள் 
வாழ்ந்திடும் எண்ணம் 
அது ஏனோ உனக்குள் 
சொல் ...சொல் ...சொல் ....!!!


மனதினில் ஒன்று 
வெளியினில் ஒன்று தினம்
நீ ஆடிடும் நாடகம் அது எதற்கோ  
சொல் .....சொல் ...சொல் ......!!!


இயந்திரம் போல் தினம் 
நீ உழைத்திடும் பணத்தையும் 
இருப்பினில் வைத்திடத் துடிப்பதும் ஏனோ 
சொல் ........சொல் .......சொல் ........!!!


அடுத்தவர் குடிதனைக் 
கெடுப்பதில் நாட்டம் 
அடிக்கடி காட்டுவாய் அது ஏனோ 
சொல் ....சொல் .........சொல் .......!!!


வருந்திடும் மனிதரை 
உணர்ந்திட மறுத்து நீ மேலும் 
வதைத்திடத் துடிப்பதும் ஏனோ 
சொல் .......சொல் .......சொல் .......!!!


கவலைகள் இன்றி நீ உன் 
கருத்தினைத் திணித்திங்கு
தலைமையை ஏற்றிடத் துடிப்பதும் ஏனோ 
சொல் ......சொல் ........சொல் .......!!!


வெறும் புரளியும் பொய்யும் 
பேசிடும் நாவால் என்றும் 
கலகங்கள் மூட்டிட நினைப்பதும் ஏனோ 
சொல் ......சொல் ........சொல் ..........!!!


அகமது ஏற்ற துணையதை விலக்கி
அடுத்தவர் வாழ்வில் நுழைந்திடும் உனக்கு 
மணமது முடிக்கும் ஆசைகள் எதற்கோ 
சொல் ............சொல் ........சொல் ...........!!!


அரசியல் வாழ்க்கையில்  என்றும் 
அடித்திடும் பணத்தினில் உனக்கென 
மாளிகைகள் அமைத்திடத் தவிப்பதும் ஏனோ 
சொல் .......சொல் ............சொல் ............!!!


பயமது அற்று இறைவன் 
படைத்ததை அழித்திங்கு 
உனதுயிர் வளர்த்திடத் தவிப்பதும் ஏனோ 
சொல் .............சொல் .....சொல் ...........!!!


படித்ததை மறந்து பண்பது தவறி
இருப்பதை இல்லை என்று 
வாதிடும் குணங்கள் அது எதற்கோ 
சொல் .........சொல் ..............சொல் ......!!!


அடுத்தவர் வளர்ச்சியை அன்பைப்
பொறுத்திட மனம் இன்றித் 
துடிப்புடன் இழிச்செயல் புரிவதும் ஏனோ 
சொல் ..........சொல் ...........சொல் .......!!!


அடிக்கொரு கேள்வி என் 
மனதினில் உண்டிங்கே உன்னால் 
அதற்குமோர் பதில் சொல்ல முடிந்தால் 
சொல் ............சொல் ...........சொல் .......!!!  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/09/2011

யாருக்காவது இது புரிகிறதா..........

உண்மையே நீ தினம் 
ஊமையாதென்ன!....
இதை உணராத நெஞ்சத்தால் 
உன்னால் துயர் வந்ததென்ன...!!!

வெண்மைதான் உன் நிறம் என்று 
வெளுத்தும் காட்ட முடியாமல் 
பொய்யின் கறைபட்டுப் பொதுவில் 
நீதி செத்துப் போவதென்ன........!!!!!!!

அன்னமிட்ட கைகள்கூட 
அருவருப்பாய்ப் பார்க்கும் வண்ணம் 
பொய் படர்ந்து பூமியெங்கும் 
உன்னைப் புதைகுழியில் இட்டதென்ன!....

இன்னல் மிகும் உலகில் இன்று 
நீயோ இருட்டறையில் அடைபட்டதென்ன!..
சொல்லச் சொல்லக் கேட்க்காமல் 
பிறர் உன்னைச் சோதித்து நகைப்பதென்ன!....

ஐயகோ ...சத்தியம் சாக்கடையில் வீழ்வதோ.... 
அந்தப் புத்தனையும் காந்தியையும் 
பெருமைகொள்ளவைத்த நன்னெறியே 
இத்தனை தாமதம் ஏனோ எழுந்துவா.....

கத்தரிக்குது மனம் தினம் உயிரை 
நீ காப்பதேப்போ இந்தப் பூவுலகை!...
நித்தம் நித்தம் துயர் பெருகுது உன்னால் 
நீர்க்குமுளிபோல் வார்த்தை அடங்குதே!...

இரட்டை வேசம் போடும் அரக்கர்களால் 
இருதயம் இங்கே பட படக்கிறதே.......!!!!!!!
எதற்கும் சாட்சி அற்றுப்போய் எங்கும் 
மனம் ஏளனப்பட்டு நிற்கின்றதே!...........

சுரக்கும் நற் சிந்தனைகள் எல்லாம் 
சுற்றிச் சுற்றிக் கேள்வி கேட்கிறதே!....
நடந்து செல்லும் பாதை உணராமல் 
நாளும் மனம் எங்கோ அலைகிறதே!....

எதற்கோ இத்தனை தண்டனை!.....
ஏழ்பிறப்பும் உணரவைக்கும் 
எம்பெருமான் ஆடும் நாடகத்தில் இது 
பூர்வயென்ம பலனோ புரியவில்லையே.....!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/06/2011

புழுவாய்த் துடிக்குது மனசு .......

அன்னை இல்லைத் ...........
தந்தை இல்லை என்னை 
ஆதரிக்க ஓர் உறவுமில்லை 
உன்னிடம்மட்டும் தஞ்சம் கோரி 
ஓடோடி வந்தேனம்மா !........

இன்னும் ஏற்க மனம் இல்லையோ.....!!!
இறைவன் கட்டளை வரவில்லையோ....
என்ன இது வாழ்க்கை அம்மா அந்த 
இறைவன் போடும் நாடகத்தில் 

கல்நெஞ்சம் படைத்தவர்களோ 
களியாட்டம் போடுகின்றார்.......
கருணையை மதித்தவர்கள் 
கண்ணிழந்து வாடுகின்றார்!.....

புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் 
புழுவாகத் துடிக்க இங்கே 
கண்ணெடுத்தும் பாராமல் 
அந்தக் கடவுள் என்ன செய்கின்றார்!....

தோத்துத் தோத்துத் தோல்வியால் 
துவண்டுபோன நெஞ்சங்கள் 
வாத்து ஊத்திய கண்ணீரால் 
வங்கக் கடலே நீயும் நிறைந்தாய்.....

காத்துக் கிடந்து நல் வாழ்வுக்காய் 
தன் காலம் முடிந்து போகுதென்று 
நேற்றுவரை பல உறவுகள் எங்கும் 
நின்ற கோலம் யாரும் அறியாரோ....!!!

மாற்றம் ஒன்றே மாற்றம் அற்றதாய் 
பலர் மனதில் நின்று துயர் தீட்டிடும்போது 
இந்த சீற்றம் தணியவேனும் எம்முன்னே 
அந்த சிதம்பரத்தானும் இறங்கிவரானோ...!!! 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/02/2011

எதுக்குத்தான் இந்த அவசரம்!.....

மஞ்சத்தில்க் கொஞ்சி விளையாடப் பல 
மங்கையர்கள் வேண்டுமென்றால் 
அந்த மாங்கல்யம்தான் எதற்கு.......!!!¨
மனதில்த் துயரை என்றும் பெருக்கிடவா!.....

சங்கெடுத்து முழங்கினாலும் இங்கே 
அந்தச் சங்கடங்கள் தீரப் போவதில்லை 
பெண் கொடுக்கும் பெற்றோரே உனக்குத்தான் 
இதில் பொறுமை மிகத் தேவை என்பேன்....

கண்கெட்ட பின்னால் நமஸ்க்காரம் அது 
கன்னித் தன்மை இழந்தபின்னால் எதற்கு!...
கைவிட்டுப் போனவனும் வாழ்வான் அங்கே 
கண்ணீரில் நீந்தும் பலன்தான் எம் பெண்களுக்கு....

இதனால் மண் தொட்டு வணக்கும் உன் குடி 
மானம் கெட்டுப்போகாதபடி என்றும் 
பெண்ணுக்கு வரனைத் தேடு முறைப்படி அது 
போருந்தாதுபோனால் விட்டு விடு அவள் தலைவிதிப்படி..

துணையொன்று தேடிக் கொடுத்துவிட்டு 
இனி அதுபோதும் அவளுக்கென்று ஓர் 
அணைபோட்டு நீங்கள் ஒதுங்கிவிட்டால் அங்கே 
அவள்படும் அவஸ்த்தையை யார்தான் தணிப்பார்!....

மனம் விட்டுப் பேச ஒரு வாழ்க்கைத் துணைதேடி 
அந்த மணவாழ்க்கை நரகம் என்றான பின் 
தன் துணைவிட்டுப் பிரிந்த பெண்ணை என்றும் 
துரத்தித் திரியும் எம் சமூகத்தை நினைத்துப் பார்!....

நிலவுக்குப் பயந்து பரதேசம் ஓடினாலும் இங்கு 
நிலவுபோல்த் தொடரும் துயரில் நின்று தப்ப 
மரணத்தைத் தேடி அலையும் மனதோடு வாழும்
இப்படி ஒரு மாங்கல்ய பாக்கியம் தேவையா இனியும்!....

கடமையை முடிக்கவென்று நம் உறவுகள் 
கண்ணை மூடிக்கொண்டு அவசரமாய் எங்கும் 
வரநல்ல தேடுகின்றார் தம் பெண்களுக்கு 
வலுவான சாபமேன்றே நான் அதை உரைப்பேன் .....

உறவுக்குள் நுளையுபோது எவரும் மிகு 
ஒழுக்கமாகத்தான் தெரிவார் எதிலும் 
உறவுக்குள் நுழைந்த பின்தான் அவர் 
ஒழுக்கம் என்னவென்று புரியும் உலகில் 

எவர் சொல்லும் வார்த்தையைக் கேட்டும் 
ஏமாந்து போகாமல் நீங்கள்தான் மனம் விட்டுப் பேசி 
நல்லதோர் மணவாளனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் 
பணத்திற்கு போட்டியிடும் சந்தையில் மட்டும் 
பணம் கொடுத்து வாங்க நினைக்காதே வாழ்வை என்றும்.

இதனால்க் குணங்கெட்டவன் வந்து புகுந்துவிட்டால் 
நற் குடியும் மூழ்கிப் போகும் அடியோடு...என் செய்வாய் !....
மனம் நல்ல மனமா பாரு மரியாதை தெரிந்திருந்தால் சேரு
வளமான வாழ்விற்கு என்றும் நற் குணம் ஒன்றே பெரிதெனத் தேடு.
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2011

வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க .....




வட்டிக்குக் கடன் எடுத்து 
வந்தவரைக்கும் ஆட்டம்போட்டுக் 
குட்டிச் சுவராய்ப் போனவனும் 
கொண்டாடினான் பூப்புனித நீராட்டு விழா!.....

இதில் மந்தையிலே  ஆட்டைப்போல 
மச மசவென்று திண்டவர்கள் பின் 
சொன்னவார்த்தை கேட்டால் சாமி அதை 
எனக்குத்  திரும்பிச்சொல்லக்கூட  முடியவில்லை!....

என்னதான் நம் கலாச்சாரம் என்றாலும் 
இத்தனை பெரும் எடுப்புத் தேவையா!...........
குத்தவச்ச பொண்ணுக்குக்கூட இதனால் 
மிகுந்த மனக்குழப்பம் வெளிநாடுகளிலே.....

சொல்லச் சொல்லக் கேக்காமல் 
சொடினைகளும் மணவறைகளும்
என்னய்யா நடக்குதிங்கே ஏட்டிக்குப் போட்டியாய்!...
எல்லாமே சினிமாவில் போல்.............!!!!!

போற போக்கில தென்னோலையும் வாளையும் 
செயற்கை முறையிலே செய்து வித்து 
வியாபாரி பிளைத்துக்கொள்வான் வேண்டியவன் 
காட்டுற கூத்துல பொண்ணுங்க 
வீட்டை விட்டே வெளியேறும்!...

ஏற்கனவே நடக்குற தப்புக்கு 
எளிதில் விளக்கம் சொல்ல முடியாமல் 
பள்ளிக்கூடம் எங்கும் நம் பிள்ளைகள் 
படும் அவஸ்த்தை அது ஒன்று  போதாதா !..... 

வெள்ளைக்காறன் பொண்ணுங்க இங்கு 
வயசுக்கு வந்தாலும் தெரியாதுங்க இதேயே 
சொல்லிக்காட்டி விளம்பரம் போட்டால் 
இருக்கும் இடைஞ்சல் இன்னும் பெருகாதா...!!!

பின் முல்லைப் பூவில் வண்டைக் கண்டேன் 
மூடி மறைக்க நான் மறந்தேன் என்ன இது நாடு என்று 
எவர்தான் இங்கு துயர்ப்பட்டாலும் வராது 
போன மானம்  திரும்பி வரவே வராது!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.