8/14/2012

ஜெயஹிந்த்!......


வாழ்க்கை என்னும் படகினை
வளமாய் ஓட்டிச் சென்றிட
நம்  நாட்டின் சுதந்திரம் என்பது
நலமாய் இருத்தல் வேண்டுமே !...

கூட்டம் போட்டு தினம் தினம்
கொள்ளை அடிக்கும் அரசியல்
நாட்டம் மிகுந்து போனால் அங்கு
நாட்டின் வளங்கள் செளிக்குமோ!....

பண்டைக் காலம் முதற் தொட்டு
படை எடுக்கும் வரலாறு அது
இன்றும் தொடர்ந்து வந்தாலே
நாடு இரண்டுங் கெட்டான் ஆகாதா!...

சொந்த மண்ணில் அடிமைகளாய்
சுறணை கெட்டு வாழ்வதற்கு
எந்த உயிரும் விரும்பாதே
இந்த நிலையது முதல் மாறாதா!!!....

லஞ்ச ஊழல் செய்வோரும்
சுய லாபம் கருதி வாழ்வோரும்
எந்த அரச தொழிலிலும் இனி
இருக்கும் பதவி இழந்தால்தான்
அன்று பெற்ற சுதந்திரம் இனி
அழகாய் மலரும் இந்நாளில்
துயர் வென்று பகைமை தீர்ந்தொரு
சுமூக நிலைமை தோன்றட்டும்

பஞ்சம் பட்டினி என்பதே ஒரு
பழைய கதையாய் போகட்டும்
இனி எஞ்சி உள்ள யீவன்களுக்கு செல்வம்
இரண்டு மடங்காய் பெருகட்டும் !.......

சட்டம் ஒழுங்கு நாட்டினிலே
சமத்துவமாய் தொடரட்டும்
குற்றம் குறைகள் தவிர்த்தே நல்ல
குடும்பம் போல நாடு தழைக்கட்டும்!....

பாரத மாதா மடிதனிலே இங்கு
பாவிகள் யாரும் இல்லை என்று
கூடியே நாட்டியம் ஆடிடுவோம் அந்த
குலமகள் நெற்றியில் சுதந்திர பொட்டணிவோம்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

26 comments:

  1. நாடு சாதி மத பேதம் இன்றி நாம் அனைவரும்
    மனிதர்கள் என்ற கோணத்தில் நின்று இனிய
    சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் அன்பு உறவுகளே ஜெயஹிந்த் !!...

    ReplyDelete

  2. சுதந்திர தின சிறப்புக் கவிதை அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  3. கவிதை அருமை
    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சிறப்பு கவிதை... நன்றி... (TM 2)

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  6. நல்ல கவிதை! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  7. Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  8. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா தங்கள் வரவுக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  9. அருமையான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  10. சிறப்புக் கவிதை! சிறப்பான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  11. அருமையான கவிதை! I lik it

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  12. இந்தியச் சுதந்திர தினத்துக்கேற்ற கவிதை.வாழ்த்துகள் அம்பாளடியாள் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  13. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  14. சிறப்புக்கவிதை.இனிய சுந்திரதின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான வரிகள். படங்கள் அழகு. தொடருங்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........