10/10/2012

அப்பு வளர்த்த நாய்!... (இறுதித் தொடர் )





மஞ்சள் வெய்யில் மனதை மயக்க மகிழ்வாய் மலர்ந்தது இன்னொரு பொழுது வண்ண மலர்கள் கண்ணைச் சிமிட்ட வட்டமிடும் வண்டினங்கள் ஒரு புறம் பசும் புல்லின் மேலே பனித்துளி படர்ந்து பொட்டு வைத்த காட்சி மறுபுறம் எல்லை இல்லா இந்த இயற்க்கை அழகை இரசித்தபடியே இறைவனின் சந்நிதி நாடி இணைந்து சென்றனர் வள்ளியமையும் அவளது கணவர் (கிராம சேவகர் மக்கள் தொண்டன் ,இறை பக்தன் ,எங்கள்  தாத்தா என்று மக்கள் மனதிலும் இடம்பிடித்த) நாகலிங்க அப்புவும் .கோவில் வாசலை நெருங்கியபோதே அப்புவின் விழிகளில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க .நல்லூர் கந்தனே தன் எதிரில் வந்து காட்சி தந்ததுபோல் பக்திப் பரவசத்துடன் வழக்கம்போல அவரது தேனிலும் இனிய குரலோசையினால் கந்தன் துதி பாடியபடியே கோவிலினுள் நுழைந்தார் .மக்களும் அவரது வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வழி விடவே அந்த நல்லூர் கந்தனை தரிசித்து விட்டு மண்டபத்தில் சற்று அமர்ந்து தன் தியானத்தை முடித்துவிட்டு கண் விழித்தபோது அவரைச் சுற்றி இளைஞர்கள் அணி ஒன்று அணி திரண்டு நிற்பதைக் கண்டார் கண்டதும்

என்ன விசயம் பிள்ளையள்?.... நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேணுமோ? என்று கேட்டார் .அதற்கு அங்கு நின்ற இளைஞன் ஒருவன் இல்லைத்  தாத்தா நீங்க இவ்வளவு காலமும் இந்த கிராமத்து மக்களுக்காக ஆற்றிய தொண்டினைப் பாராட்டி உங்களைப் போன்றவர்ளுக்காக ஒரு விழா எடுக்கப் போகிறோம் அதில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றான் .விழாவா !...எங்கள் சேவையைப் பாராட்டி எங்களுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்துள்ளீர்களா ?...இதுவரை காலமும்  அப்படி ஒரு விழாவை யாரும் செய்ததை நான் கேள்விப்படவே இல்லையே  !..உங்களது இந்த நல்லெண்ணத்தைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரிய  இ ல்லையடா  பிள்ளையள் !!!........அது சரி விழாவ எப்ப தம்பி வச்சிருக்கிறியள்   ?...வாற தை மாதம் பதினைந்தாம் திகதி தாத்தா .நீங்க பத்து மணிக்கு இந்த இடத்துக்கே வந்திருங்க நாங்க வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறோம் .சரி பிள்ளையள் உங்க விருப்பம்போலவே நடக்கட்டும் .

என்னங்க யாரிந்தப் பிள்ளையள் ?...இளைஞர் அணியாம் பிள்ள என்னப் போல சமூக சேவை செய்த முதியோர்களைக் கௌரவிச்சு ஏதோ விழா எடுக்கக் கூப்பிட்டாங்கள் சரி நானும் வாறன் எண்டு சொல்லி அனுப்பீற்ரன் ஏன் பிள்ள இதைப்பற்றி நீ என்ன நினைக்கிற ?...நல்ல விசயம் தானுங்க .இந்த நிகழ்சியை பார்க்க வாற சின்னஞ்ச் சிறுசுக மனதிலையும்  நாளைக்கு நாம வளர்ந்தும் இப்புடி நாலு பேர் பாராட்டுற மாதிரி  நாலு நல்லத செய்ய வேணும் எண்டு ஒரு எண்ணம் இந்த வயசிலயே வரும் இல்லையா சொல்லுங்க ?..சரியாச் சொன்ன நான் என்னத்த நினைச்சனோ அதையேதான் நீயும் நினச்சிருக்குற !...இல்லையா பின்ன!.. .இத்தன வருசமா உங்களோட குடித்தனம் பண்ணின எனக்கு எப்புடி இதுமட்டும் புரியாமல் போகும் .அது சரி உன்ன நான் பெண் பார்க்க வந்த உடனுமே தீர்மானிச்சு போட்டனே நீதான் என்ர பொஞ்சாதி எண்டு .வள்ளியம்ம உனக்கொண்டு தெரியுமா!.. ஒரு ஆணும் பெண்ணும் கலியாணம் செய்து கொள்ளுறது வேற ஒண்டுக்கும் இல்லடி. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு கொண்டு சந்தோசமாய் வாழுறதுக்குத் தான். அந்த வகையில நான் புண்ணியம் செய்திருக்க வேணுமடி உன்ன என் பொண்டாட்டியா அடைஞ்சதுக்கு .நான் மட்டும் என்னவாம் உங்களை அடைய புண்ணியம் செய்ய இல்லையோ சாமி ?....அடி கழுத நக்கலா பண்ணுற ஹா ...ஹா ...ஹா.....போதும் போதும் சிரிச்சது .நடவுங்க வீட்டுக்கு போகலாம் ......என்னங்க விளையாடினது போதும் எழும்புங்க வீட்ட போகலாம் ......என்னங்க!... என்னங்க!!!!!!:.... என்னங்க ஆச்சு உங்களுக்கு ????????............!!!!! என்னங்க !!!!!........
                                                         

  அம்மா !.....ஐயா !.....எழுந்திருங்க !!!!!..........பூசாரி ஐயா ......இங்க ஓடி வாங்கையா !!!..........இங்க பாருங்கையா !!!!....இந்த அம்மாவுக்கும்  ஐயாவுக்கும் என்னமோ நடந்திற்று பாருங்கையா !!!!.......அழாதப்பா அவங்களுக்கு ஒண்டுமே ஆகயில்ல .எந்தப் பெருமானுக்கு இந்த அம்மாவும் ஐயாவும் அவங்கட காலம் பூராவும் சேவை செய்ய வேணும் எண்டு நினைச்சாங்களோ அந்தப் பெருமானுடைய சந்நிதானத்திலையே இந்தப் புண்ணிய யீவன்கழுக்கு அவன் அடைக்கலம் கொடுத்திற்றான் நீ அழாதடா குழந்த!!...என்று சொல்லிக்கொண்டே இதுவரை  காலமும்  கையில் கொடுத்த தீர்த்தத்தை அவர்கள் உடல் முழுவதும் நனையும்படியாக கண்ணில் இருந்து வாத்து ஊத்தியபடியே ஊரைக் கூட்டி இருவரது உடலையும் தகனம் செய்து வைத்தார் பூசாரி. தன் எஜமான் ஐயாவும் எஜமானி அம்மாவும் இறந்து போன துக்கத்தைத்  தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த வாயில்லாத்த  யீவன் அந்தக் கோவிலைச் சுற்றி சுற்றி அங்கும் இங்குமாக ஓடிய படியே  அது விட்ட கண்ணீர், அது பட்ட துன்பம் பெத்த பிள்ளைகள்கூட இவ்வளவு தூரம் துன்பப் பட மாட்டார்கள் என்பது போல்  உணர்ந்த மக்கள் இது அப்பு வளர்த்த நாய், அப்பு வளர்த்த நாய் என்று கோவிலுக்கு வரும்போதெல்லாம் அந்த நாய் மீது தங்கள் அன்பையும் தனிப்பட்ட கவனத்தையும் எடுத்துக்கொண்டனர். அந்த நாயும் அவர்கள் இறந்த அந்த இடத்திலேயே இன்னும் அவர்களின்  நினைவுகள் சுமந்தபடி தன் வாழ்நாளைக் கழித்து வருகின்றது !!!!.......
                                     
               இந்தக் கதையில் வந்த பெயர்கள் 
சம்பவங்கள் யாவுமே வெறும் கற்பனைகள்தான் 

                                                                             நன்றி வணக்கம் உறவுகளே .

                                                 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

  1. kadaisila kankalanga vachite innaku tamil type work pannale sry

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா இனிய கருத்திற்கு .

      Delete
  2. முதல் பகுதி படித்தேன்..அதற்குள் இறுதிப் பகுதியா?..இருங்க வாசிச்சிட்டு வந்துடுறேன்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதிகளையும் விரைவில் படித்து
      முடித்து விட்டு உங்கள் கருத்தினைச் சொல்லுங்கள்
      சகோ .உங்கள் கருத்தினை நானும் எதிர்பார்த்துக் கொண்டு
      இருப்பேன் .மிக்க நன்றி ஊக்குவிப்பிற்கு .

      Delete
  3. நல்ல கிராமத்து கதை ,வாழ்த்துக்கள்!


    உண்மைவிரும்பி.
    மும்பை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே உங்கள் வரவிற்கும்
      வாழ்த்திற்கும் .

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும்
      கருத்திற்கும் .

      Delete
  5. உண்மையிலேயே கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்திய வரிகள் முடிவில் லயித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி .இதில் கணவன் மனைவி
      எப்படி வாழ்ந்தால் நல்லது என்பதை மட்டும் அல்ல
      அவர்களுடைய அன்பும் பண்பும் ஒரு வாயில்லா
      யீவனை எவ்வளவு தூரம் அழ வைத்ததோ அதை விடவும்
      மக்கள் மனதில் அந்த தம்பதியினரின் வளர்ப்பில் வளர்ந்த
      நாய்க்கே இத்தனை மரியாதை என்றால் .இதுவே அவர்கள்
      வளர்த்த பிள்ளைகளாக இருந்தால் இன்னும் எவ்வளவு மரியாதை
      கிட்டியிருக்கும் .பெற்றவர்களுக்கும் அவர்களால் வளர்க்கபட்ட
      பிள்ளைகளுக்கும்?....... !!!!

      Delete

  6. அன்பின் இனிய சகோதரி!இதுவரை தங்களின் கவிதைகளை மட்டுமே படித்து வந்த எனக்கு, இன்றுதான் இக்கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அருமையான எழுத்தும் நடையும் கண்டு, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். மேலும் இதுபோன்ற கதைகளையும் தாங்கள் எழுதவேண்டும் என்பதே என்ஆசை!முடிவும் சொன்ன விதமும் மனதைத் தொட்டது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா தங்களைப் போன்றவர்களின் நல்லாசி
      கிட்டிய பின் சொல்லவா வேண்டும் இந்த ஒரு
      கதை என்ன ஓராயிரம் கதைகள் எழுதிவிடலாமே !....
      தங்கள் விருப்பப்படி இந்த அம்பாளடியாளும் தொடர்ந்து
      முடிந்தவரை கதைகளையும் எழுதுகின்றேன் ஐயா .
      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் கருத்தினைக் கண்டத்தில்
      இன்று என் மனம் .நன்றி ஐயா வரவுக்கும் இனிய கருத்திற்கும் .

      Delete
  7. கடைசில கண்கலங்க வச்சுட்டீங்க....

    ReplyDelete
    Replies
    1. அடடா !...கவலை வேண்டாம் சகோதரி .அடுத்த ஆக்கங்களின்
      ஊடாக தங்களை மகிழ்விக்க முயற்சிக்கின்றேன் .மிக்க நன்றி
      சகோதரி வரவுக்கும் கருத்திற்கும் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........