10/08/2012

ஏக்கம் ....


ஆழிப் பேரலையே நீ 
அடங்கிப் போனதென்ன!
வாழிய நீ வாழிய என்று எம்மை 
வாழ்த்த இங்கு யார் வருவார்!

ஏழைக் குமரிகளோ நாம்
இருக்கும் இடம் முள் வேலி!
காலில் முள்ளுத் தைத்தால் 
கண்களிலே கண்ணீர் வரும்!

எம் தோழில் முள்ளுத் தைத்தும் 
துவண்டு விழாத ரோஜா மலர்கள் 
வாழும் தகுதி அற்று இங்கு நாம் 
வாழ்ந்தென்ன பயன் நீயே  சொல்?

ஊளைச் சதை பெருக எம் 
உள்ளம் தினமும்  கருக 
நாமும் படும் துயரை 
எந்நாளும் உரைப்பதெங்கே!

காலம் பனித்துளி போல் 
கரையும்  பொழுதினிலே 
வீணாய் எம் வயதும் 
விரைந்தே பெருகியதேன்!

பாழும் எம்  குடிசை 
பணிந்தே போவதனால் 
ஆளுக்கொரு சுகத்தை 
அடையத் துடிப்பாரிங்கே!

வாலை ஆட்டும் தெரு நாய்க்கும்
வசமாய் போகும் எம் வாழ்வு
இனி நீரில் கரைந்தால் என்ன!
நெருப்பில் எரிந்தால் என்ன!

கேள்விக் குறிகளுக்கே  வெறும்
கேலிக் குறியானவர்கள் எம்மை
நீயும் அணைக்காவிடில் இக் கடலை
நாம் நீந்திக் கடப்பதெப்படி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. வழிகளை சொல்லும்
    பெண்மையின் ஏக்கம் அருமை சகோ

    ReplyDelete
  2. உருக்கமான வரிகள்... உண்மையனா வரிகள்.. அருமை..

    ReplyDelete
  3. ஏக்கம் நெருடிய வரிகள் !

    ReplyDelete
  4. கேள்விகள் முள்ளுக்கம்பிகளாய் குத்துகின்றது.

    ReplyDelete
  5. நல்ல கவிதை ஏக்கம் வரிகளில் வழிகிரது

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........