காத்திருப்பின் அவசியங்கள்
கலைந்து போனது!
கால தேவன் கைகளிலே மனம்
உறைந்து போனது!
நேற்றுவரை உன் நினைப்பு
நெஞ்சில் இருந்தது!
இன்று முதல் என் நினைப்பும்
மறந்து போனது!
ஊற்றெடுத்த ஞானமிதால்
உயிர் பிழைத்தது!
உண்மை எது பொய் எதுவென
உணர்ந்து கொண்டது!
வாட்டும் துயர்
வழி தவறி எங்கோ போனது!
வந்த சொந்தம் பொய் அதனால்
வருத்தம் தணிந்தது!
கவிதை ஒன்றே
காதலுக்குப் பொருத்தம் என்றது!
கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
கனவு பெருத்தது!
நிலவு கூட எனக்கு இதனால்
சொந்தமானது!
நித்தம் மகிழ்வு வந்து வந்து
சித்தம் குளிர்ந்தது!
கவலை ஏது! கண்ணீர் ஏது!
கவிதை இருக்க
காலம் போகும் போகும்
இன்ப ஜாலம் துரத்த!.
