6/09/2014

சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே



சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே!
சொக்குப் பொடி போடும் இந்தக் கண்ணை நம்புதே!
என்றன்  உயிர் என்னிடத்தில் சண்டையிடுதே!
எங்கு சென்ற போதினிலும் முந்திக்கொள்ழுதே!

கண்ணழகைக் காட்டிக் காட்டி
காதல் வலை விரித்தாயே!
பெண்ணழகைப் பார்த்துப் பார்த்து
போதையிலே சிரித்தேனே!

காதல் இன்று என்ன ஆச்சு? -வெறும்
கானல் நீராய்ப் போயே போச்சு!
ஆசை அது என்ன ஆச்சு?
அத்தனையும் பொய்யாய் போச்சு!

ஊரை விட்டுப் போனாலும்
உன் நினைப்புப் போகலியே
பாறையில நீர் கசிய
பக்குவத்தை விதைத்தவளே!

ஆலமரமாய் இருந்தேனே
அன்பால் துரும்பானேனே!
யார் அழுதால் உனக்கு என்ன?
அழுதவரை மறந்து விடு!

குற்றமது பார்த்துப் பார்த்து என்னைக்
குப்பையிலே போட்டவளே
சத்தியமாய் உன் நினைப்பில்
சாகும் வரை  நானிருப்பேன் ....

                                                    (   சொந்த பந்தம்... )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

  1. வணக்கம்
    அம்மா

    ஒவ்வொரு வரியிலும் சோகம் உடுருவியுள்ளது படிக்கும் போது மனதை கனக்கவைத்து விட்டது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்

    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமை...

    திரைத்துறைக்கு பாட்டு எழுதலாம் அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பதிவுக்குப் பொருத்தமான படம்.

    ReplyDelete
  5. சோகம் நிரம்பிய காதல்!!! வரிகள் அருமை! DD சொல்லுவதை நாங்களும் வழி மொழிகின்றோம்! சகோதரி!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. போட்டாச்சம்மா போட்டாச்சு சிவாஜி தலையில 6 போட்டாச்சு

    ReplyDelete
  7. அழகான பாடல். மெட்டமைத்துப் பாடினால் சிறப்பாக அமையும்.

    ReplyDelete
  8. நன்றாகவே உள்ளது தோழி ! திரத் துறைக்கு எழுத ரெடி தானே ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. கண்ணழகைக் காட்டி வலை விரிப்பதும் பெண்ணழகைக் கண்டு போதையில் சிரிப்பதுமே காதல் என்று நம்பி ஏமாந்த காளையின் சோக கீதம் நன்றாகவே உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. மிக மிக அருமை
    சோகத்தைப் பெருக்குவதில்
    படமும் கவிதையும் போட்டி போடுகின்றன
    அற்புதமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  11. வணக்கம்!

    புத்தமுதை ஏந்திப் பொலிகின்ற இப்பாட்டில்
    சத்தியமாய் மின்னும் தமிழ்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  12. நிதம் நான் காணும் கண் அது வந்து போனது முன்னால்...
    அருமை..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........