7/15/2014

எண்ணமெல்லாம் நிறைந்த சிவனே போற்றி போற்றி



இயல்பு   நிலை மாறாமல்
    ஈசன்   அடியைப் பற்ற வேண்டும்
முயலும் வரை  முயன்று நானும்
   மும்    மூர்த்தி  புகழ் பாட வேண்டும்
கயல்   விழிகள்  ஏங்காமல் இங்கு
   காத்  தருள்வாய்  எம் பிரானே
வயல்  வெளியில்  வரப்பினைப் போல்
  வார்த்தை   என்றும் உயர்வு பெற  !

எண்ணத்தில் உன்னை வைத்து
  ஏற்றமுற  வடித்த நற் பா -தேன்
கிண்ணமெனத் தோன்றிடவே எம்
   சிந்தையிலே வந்த மர்வாய்
வண்ணத்தில்  சிறந்த வண்ணம்
    வாழ்வ    னைத்தும் வந்துதிக்க
விண்ணவரும் போற்றும் வகை
    வார்த்தைகளைத் தந் தருள்வாய்

காரைக்கால்  அம்மையைப் போல்
   களிப்புடனே நாம் வாழ
தேரைக்கும்  வாழ்வளிக்கும் நின்
   திருவடியே சொர்க்க மென்பேன்.!.
நீரைப்போல் நிலத்தைப் போல்
   நீங்காத     வரமளிப்பாய்  இறைவா -ஜென்மக்
கூரைக்குள் அவதரித்த எமை என்றும்
   வேரைப்  போல் காத்தருள்வாய்...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. தென்னாடுடைய சிவன் உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.
    கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அனைவருக்கும் எல்லா அருளும் கிடைக்கட்டும் அம்மா...

    ReplyDelete
  4. தென்னாடுடைய சிவனை போற்றி அருமையான கவிதை சகோதரி.

    ReplyDelete
  5. வணக்கம் தோழி!

    வார்த்தைகள் உண்டோ வரைந்தபா பாராட்ட!
    ஈர்க்கிறதே எம்மை இழுத்து!

    மிகமிக அருமை!
    அவனருள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. சகோதரி! தங்கள் கவிதையைப் படித்தவுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்ல நினைத்ததை ராய செல்லப்பா அவர்களும், கும்மாச்சி அவர்களும் சொல்லிவிட்டார்கள்!

    நம்பிக் கெட்டவர் எவரைய்யா உமை நாயகனை.....அந்த இறைவனை! அருமையான கவிதை! அந்த எல்லாம் வல்ல ஈசன் தங்களைக் காத்தருள்வாராக!

    மிகவும் ரசித்தோம்!

    ReplyDelete
  7. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! உங்கள் கவிதை எந்நாளும் சிவனே போற்றி!
    த.ம.8

    ReplyDelete
  8. தேரைக்கும் வாழ்வளிக்கும் நின்
    திருவடியே சொர்க்க மென்பேன்.!//

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஈசன் அடி போற்றும் எளிமையான வரிகள்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........