காற்றுக்கு வேலிபோட எண்ணும்
பிறர் கூற்றுக்கு இசைந்தாடத்
தென்னங் கீற்று அல்லடா நாம்
தமிழ்தேசத்தின் விடுதலை ஊற்று!
தோற்றுவிடுமோ எம்மினம்!
தொலைந்துவிடுமோ எம்தமிழ்!
சேற்றுவயல் நாற்று நட்டு
செந்தமிழில் பாட்டிசைத்து
ஊற்றெடுத்த தமிழ் உணர்வுக்கு
ஒருபோதும் பஞ்சமில்லை!
வேற்றுமொழி நாட்டினிலும்
விரும்பித் தமிழ் கற்பவர்கள்
காட்டுகிறார் தன்திறனைக்
கணணியெல்லாம் கண்டுகளி!
நூற்றுக்கும் பலநூறு ஆண்டுகள்
பழையமொழி இம்மொழி தோற்றிடின்
தொலைந்துவிடுமே துலங்குகின்ற
நற்கலைகளெல்லாம் உலகினிலே!
முத்தமிழுக்கு இணையான இனிய
முதுமொழியும் தாம் கண்டதுண்டோ!
எப்பரம்பரை ஆண்டதிந்தத் தமழ்மொழியென
அறிந்தும் அகந்தையால் விரட்டிநீரோ!
சற்ப்பத்தைக் கழுத்திலே சரமாக
மாட்டியவன் அப்பனாக இருந்தாலும்
அவனுக்கும் பிரணவத்தின் பொருளுரைக்க
அவனுக்கும் பிரணவத்தின் பொருளுரைக்க
ஆசானாக அமர்ந்து கொண்டானே அன்று
அந்தக் கூர்வடிவேலனையும் ஆளும்
எம் தமிழோ அழிவுற்றுப் போகும்!
பித்தம் தலைக்கேறிப் பிதற்றுவார்
பிதற்றலையும் மிரட்டலையும்
புறம் தள்ளி முன்னேறிச் சென்று
அற்புதமாய் இதன் வளர்ச்சி
அகிலமெல்லாம் பரவுதுபார்
அதிவேகமாய் இன்றும்!
அதிவேகமாய் இன்றும்!
No comments:
Post a Comment
வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........