2/06/2011

துன்பம்....

நோயினால் வரும் துன்பம்
மருந்தினால் தீரும்
வருவாயில்லாத துன்பன்
வேலை செய்தால் தீரும்
பிள்ளைகளால் வரும் துன்பம்
புரிந்துணர்வால் தீரும்
உறவுகளின் பிரிவினால் வரும் துன்பம்
காலப் போக்கில் தீரும்
ஊரார் பேச்சினால் வரும் துன்பம்
உதறித் தள்ளினால் மட்டுமே தீரும்!
நல்லவனால் மட்டுமே துன்பப்பட  முடியும்
கூடவே திடமான சகிப்புத் தன்மையும் இருக்குமாயின்
வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பமும்
வலுவிழந்து போகும்!
துன்பம் வாழ்க்கைத் தத்துவத்தை
முழுமையாகக் கற்றுத்தரவல்ல
மிகச் சிறந்த ஆசான்!
இது சாபமல்ல
வரம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2 comments:

  1. கொஞ்சம் கூடுதலாகத்தான் உணர்ச்சிவசப்படுவீங்க போலிருக்கே..
    Jana master

    ReplyDelete
  2. நன்றி உங்கள் கருத்துக்கு.....
    முனிவருக்கு கோவம் பெருகினால்
    சாபம் கிட்டும்!...கவிஞர்களுக்கு நல்
    உணர்ச்சி பெருகினால்த்தான்
    கவிதை மழையே கொட்டும்
    இதில் என்ன ஆச்சரியம்?........

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........