பள்ளிப் பருவத்திலே
புத்தகங்கள் சுமந்தாள்
பருவ வயதினிலே
கற்பனைகள் சுமந்தாள்
கன்னியான போது
கனவுகள் சுமந்தாள்
கல்யாணம் ஆனதும்
கருவினைச் சுமந்தாள்
தாயுமான போது தன்
கடமையினைச் சுமந்தாள்
தலை விதி மாறியதனால்
தனக்குள் வேதனை சுமந்தாள்
பெண்ணெனப் பிறந்ததனால்
பழியினைச் சுமந்தாள்
பெண் பேசாது இருந்ததனால்
தனக்குத் தானே சுமையானாள்!
புத்தகங்கள் சுமந்தாள்
பருவ வயதினிலே
கற்பனைகள் சுமந்தாள்
கன்னியான போது
கனவுகள் சுமந்தாள்
கல்யாணம் ஆனதும்
கருவினைச் சுமந்தாள்
தாயுமான போது தன்
கடமையினைச் சுமந்தாள்
தலை விதி மாறியதனால்
தனக்குள் வேதனை சுமந்தாள்
பெண்ணெனப் பிறந்ததனால்
பழியினைச் சுமந்தாள்
பெண் பேசாது இருந்ததனால்
தனக்குத் தானே சுமையானாள்!
பெண்ணெனப் பிறந்ததனால்
ReplyDeleteபழியினைச் சுமக்கும்
விதியினை மாற்றிடுவோம்.
மிக்க நன்றி!.........
ReplyDeleteபெண்ணே நீ பேசு !
ReplyDeleteஅறிவுடன் பேசு அழகுடன் பேசு
அன்புடன் பேசு அளவுடன் பேசு
ஆத்மதிருப்தியாய் பேசு
அகம்கொண்ட சுமை அகலுமேயுனை !!
வாழ்த்துக்கள் .. பெண்களை சுமையென ஒரு உண்மையான ஆண் நினைக்க மாட்டான் :-)
ReplyDeleteமிக்க நன்றி கருத்திட்டமைக்கு....
ReplyDelete