குட்டி முயல் கூட்டுக்குள்
கொறித்துத் தின்னுது கரட்டைப் பார்! கொண்டைச் சேவல் கோழியுடன்
விதைகளைக் கொத்தித் தின்னும் குஞ்சுகள் பார்!
ஆட்டுக் குட்டியும் மாட்டுக் கன்றும் குழைகளை
அழகாய் மென்று தின்பதைப் பார்!
வாத்துக் கூட்டம் தண்ணிக்குள்ளே
வடிவாய் மிதந்து செல்வதைப் பார்!
பூனைக் குட்டிகள் கூரைமேல்
எலிக் குஞ்சைப் பிடிக்கத் தாவுது பார்!
கொளுத்த பூனை அடுப்படியில்
கொதித்த பாலையும் குடிக்குது பார்!
நாய்கள் போட்ட குட்டிகளுக்கு
நல்லான் உணவு கொடுப்பதைப் பார்!
அவை வாங்கித் திண்ட சோற்றுக்கு
வளமாய்க் காவல் காப்பதைப் பார்!
பெட்டை நாயும் கடுவன் குட்டியும்
புல்லைப் பித்தம் தெளியத் தின்னுது பார்!
வண்ணக் கிளிகள் குஞ்சுகளுடனே
வடிவாய்த் தொங்கும் கூட்டைப் பார்!
அவை எண்ணம் போல மாம்பழத்தை
இனிதே கொத்தித் தின்பதைப் பார்!
வீட்டு மிருகம் இவைகள்தான் நாம்
விரும்பி வளர்க்கும் செல்வங்கள் பார்!
குழந்தைகளுக்கு ஏற்ற இனிமையான பாடல்.
ReplyDeleteபிள்ளைக் கவிதை பார்க்கும் போது குழந்தைக் கவிஞர் வித்தகர் வேந்தனாரின் பிள்ளைப் பாடல்கள் நினைவுக்கு வருகிறது. நன்று !
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!......ஒரு படைப்பாளிக்கு தங்களைப் போன்றவர்களின்
ReplyDeleteவாழ்த்துக்களும் கருத்துரைகளுமே என்றும் ஊக்கத்தையும் ஆக்கத்
திறனையும் அள்ளி வழங்குகின்றது. இப்பணி தொடரட்டும்
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.............
இனிய கவிதை. அருமை. பாரட்டுக்கள்.
ReplyDeleteநல்ல பாடல் .. அம்பாளடியாள்..
ReplyDeleteநல்ல பாடல் .. அம்பாளடியாள்..
ReplyDelete