ஆழ்கடலும் ஆழியும் ஏழிசைக்கு இசைந்தாடும்
ஏழிசையும் என்னப்பன் முருகனின் அசைவிர்ற்கு
இசைபோடும் பார்புகழும் கந்தனின் பாதம் தொழுதேற்றின்
வான்மழை போல் நின்னாவில் வந்துதிக்கும் கானமழை
கந்தனின் நல்லருளால் கல்லும் கவிபாடும்
சொல்லும் அதன் பொருளும் பெருஞ்
சோதியின் முன்னின் றொளிரும் பொன்னெனவே
பொருள் விளக்கும் கந்தன் திருப் பாதம் போற்றி போற்றி
கந்தன் திருப் பாதம் போற்றி போற்றி
ReplyDeleteமுருகா முருகா...
தமிழ்க்கடவுளின் அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்.