கந்தகத் தூளை விதைக்காதே நீ
காதல் என்னும் மந்திரம் ஓதிக்
காட்டுத் தீயை மூட்டாதே!
உறவுகள் போடும் பாலம் தாண்டி
உயிர்களை நீயும் அழைக்காதே!
உண்மைக் காதலர் வேஷம் போடும்
உணர்வை இங்கே வளர்க்காதே!
காதல் என்னும் நோயைக் கொல்லும்
கவிஞர்கள் பாட்டும் தோத்தாச்சு!
கல்லறை போகும் காதலர் நெஞ்சும்
கணக்கு இன்றி ஆயாச்சு!
இன்னமும் உந்தன் எல்லைக்குள்ளே
இருப்பவர் நெஞ்சும் கல்லாச்சு
மன்மதனே உன் பானம் இன்று
மனிதனைக் கொல்லும் வில்லாச்சு!
சீச்சீ..... சீச்சீ.....உன்றன் உறவால்
மனிதன் சிறப்புக் கெட்டுப் போயாச்சு
போ...போ.....போ...போ.....
போ...போ.....போ...போ.....
புன்னகைப் பூக்களைப் பறிக்காதே!
பூமியில் உயிர்களை வதைக்காதே!
சந்நிதி போகும் பக்தர்கள் நெஞ்சை
சாக்கடைக்கு அழைக்காதே!
சரித்திரம் படைக்கும் நாயகர் நெஞ்சில்
சஞ்சலத்தை விதைக்காதே!
அன்னம் தண்ணி மறந்து இங்கே
அவதியுற நீ வைக்காதே!
ஆசை ஊட்டும் வார்த்தை பேசி
அறிவை மழுங்கச் செய்யாதே!
அல்லல் படுத்தும் இன்பம் தந்து
அமைதியை என்றும் குலைக்காதே!
நின்மதி இங்கே நிரந்தரம் அற்று
நினைவை இழக்கச் செய்யாதே!
நீர்க்குமிழ் போல் மகிழ்ச்சியைத் தந்து
நித்தம் துயரில் ஆழ்த்தாதே!
உண்மைக் காதல் ஒன்றை மட்டும்
உயிர்கள் பெற்றால் போதுமடா!
பொன்னொடு ,பொருளைத் தன்வசமாக்கப்
போலிக் காதல் புரிபவதென்ன!
மன்மதனே உன் லீலை விரும்பி
வண்டைப் போல அலைபவதென்ன!
இன்னமும் எதற்கு இவர்களை வளர்த்தாய்
இருக்கும் துன்பம் போதாதோ ?
இயற்க்கை கொடுக்கும் மகிழ்ச்சியைக் கூட
நீ இடையில் பறிப்பது முறைதானா?
காதலரே கொஞ்சம் கவனம் தேவை
கண்ணை மூடிச் செல்லாதே!
காலன் வருவான் காதல் என்பான்
உன் கருத்தை உடனே தெளிக்காதே!
எண்ணம்போல முடிவெடுத்தால்
இயற்க்கைகூடத் தடுக்காதே பின்
கண்ணில் நீரை வரவழைத்து
கல்லறைப் பூக்களைக் கேட்காதீர்!
கடவுளை மேலும் பழிக்காதீர்!
No comments:
Post a Comment
வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........