7/11/2011

நெடுந்தீவுபற்றிய சில அரிய தகவல்கள்.....


  
யாழ். குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஏறக்குறைய 32 கிலோ மீற்றருக்கு அப்பாலும் இராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவிலும் நெடுந்தீவு அமைந்துள்ளது.
இத்தீவு கிழக்கு மேற்காக 9 கிலோ மீற்றர் நீளத்தையும் வடக்குத் தெற்காக 6 கிலோ மீற்றர் அகலத்தையும் ஓர் சரிந்த இணைகர வடிவில் சுமார் 30 கிலோ மீற்றர் சுற்றளவையும் கொண்டது.
இத்தீவு தலைத் தீவு பசுத் தீவு பால் தீவு அபிஷேகத் தீவு தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழை க்கப்பட்டு வந்தன. எனினும் இப் பெயர்கள் யாவும் காரணப் பெயர்களாகவே அமைந்தன.


             இது பெருக்கு மரம் இம்மரம் பலநூறு ஆண்டுகளுக்கு 
முர்ப்பட்டதெனக் கூறுகின்றார்கள்.நெடுந்தீவில் 
இருக்கும் இந்த பெருக்குமரமே தென்னாசியாவில் 
இரண்டாவது பெரிய சுற்றளவான  மரமும் ஆகும். 

இதுதான் நெடுந்தீவு மாவலி துறைமுகம்.இதைப் பயன்படுத்தி
ஒல்லாந்தர் குதிரைகளை ஏற்றி இறக்கினார்களாம்.அதனால்த்தான்
இதற்க்கு இப்பெயர் உருவானது என்றார்கள்.அதற்கு அருகில் உள்ள
புகைப்படம் நெடுந்தீவில் காட்டுக் குதிரைகள் வசிக்கும் இடம்.
பார்பதற்கு றொம்ப  அழகா இருக்கும்.
                                           

இதுதானுங்க கல்வேலி பார்ப்பதற்கு மிக மிக அழகாக
இருக்கும்.ஒரே அளவில்  இந்த வேலிகள் கட்டியுள்ள
அந்த நுட்பத்தை என்னவென்று சொல்ல!....ஆனா
இவங்க றொம்ப உறுதியாகக் கட்டி வச்சிருக்காங்க.
இதையே வேறமாதிரி யோசிச்சுப் பாருங்க நம்ம
சண்டைக்கார வீடுகளில் இந்தமாதிரி வேலி இருந்தா
நிலைமை எப்படி இருக்கும் அதனால ஆதாரபூர்வமாய் 
இன்னொரு அதிசயம் சொல்லுறன் கேளுங்க. 
இதனுடய பாதி அங்க நிறைய இருக்குங்க.என்ன நா  சொல்லுறது
பொய் என்குறீர்களா?....இது என்ன சின்னம்?...காதல் சின்னம்தானே?..
அப்ப நா சொல்லுறதுதா ரொம்ப சரி....எனுன்னா காதல் அங்க நிறைய
இருக்குது சின்னம்மட்டும்தான் இல்ல.வேணும் எண்டா கீழ நெடுந்தீவு
வெளிச்சவீடு இருக்கு அதப் பயன்படுத்தி கப்பலையோ படகையோ
புடிச்சு நெடுந்தீவிலையே போய்ப் பாருங்க. ஒரு வேலியிலகூட
இரத்தக்கற காணமாட்டீங்க.அதவிட றொம்ப முக்கியமா ஒண்ணத்
தெரிஞ்சுகொள்ளணும் தை மாசிமாசம் நெடுந்தீவுக்கு போறத
கனவாலகூட நினைச்சுப் பாக்காதீங்க அம்புட்டுத்தா. அனுபவத்தோட
சொல்லுற. கப்பல் பனையளவு தூரம் குதிச்சு குதிச்சுத்தான் போகும்.
பெரும்பாலும் இந்த மாசங்களில அவங்களே பயணம் செயுறதில்லயாம்
நான் நெடுந்தீவுக்கு போயிற்று வந்ததில றொம்ப  றொம்ப மறக்க
முடியாத சம்பவமே இதுதான்.பலமுற மாலுமி சொர்க்கதக் காட்டினார்
ஆனா எனக்குத்தான் றொம்ப பயமா இருந்திச்சு.உயிரை கையில 
புடிச்சுக்கொண்டு ஓடியாந்திற்றன்.ஆகா ஒண்ட மறந்திற்ரன் வெடி
அரசன் கோட்டை அது ரொம்ப நல்லா இருந்திச்சு.நா குடிச்ச கூழும்
நல்லா இருந்திச்சு இப்ப நா உங்களுக்கு குடுத்த கூழ் நல்லா இருந்தா
கீழ உள்ள வெளிச்சவீட்டப் பயன்படுத்தி நெடுன்தீவப் போய்ப் பாருங்க
இதுக்கு மேல சத்தியமா எனக்கு நேடுந்தீவப்பத்தி ஒண்ணுமே தெரியாது.
ஆனா அடுத்த பதிவு அத பாக்க தவறீடாதீங்க இது றொம்ப முக்கியமானது.
                                                  
ஆகா ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல
மறந்திற்றன்.நீங்க இன்னும் நல்லா நெடுந்தீவு
பற்றி தெரிஞ்சுக்க வேணும் என்றால்
www . neduntheevu . com இதில்  welcome  to  neduntheevu
சென்று பாருங்கள். ஹி.....ஹி.....ஹி..........தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

27 comments:

  1. ஒரு தெரியாத தீவு பற்றி தெரிந்துக்கொண்டேன்..
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. அருமை! நானும் சென்றிருந்தேன் ஒருமுறை! படத்தில் பார்க்கும்போது இன்னொருமுறை செல்ல ஆவலாயிருக்கு! :-)

    ReplyDelete
  3. நல்லபதிவு குறிகட்டுவான் போகும் போதெல்லாம் ஊடாகப் போன அனுபவம் மட்டும்தான் இருக்கு அந்த கோயில் இன்னும் கண்ணுக்குள் அதன்பின் முக்கிய இரானுவ ஈனச்செயல் நெஞ்சில் முள்ளாக நெடுந்தீவு பதியப்பட்டுவிட்டது.

    ReplyDelete
  4. நெடுந்தீவைப் பற்றி அன்பு ஆசான் தம்பிஐயா தேவதாஸ் ஒரு நூல் அருமையாக எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  5. நெடுந்தீவு அந்தகள்ளு இன்னும் சுவைதான்.

    ReplyDelete
  6. போகலாமா, வேண்டாமா? முடிவாச் சொல்லுங்க!

    ReplyDelete
  7. நெடுந்தீவு போனா குதிரைகள் பார்க்கலாம் ))

    ReplyDelete
  8. தெரியாத தீவு பற்றி தெரிந்துக்கொண்டேன்..
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  9. நெடுந்தீவு போகணும் என்ற ஆசை வந்து விட்டது

    ReplyDelete
  10. அடுத்த தடவை தனுஷ்கோடி வரும்போது நீந்தி வருகிறேன் ......பட்.....உயிரோடு விடுவாங்களா

    ReplyDelete
  11. ஒரு தெரியாத தீவு பற்றி தெரிந்துக்கொண்டேன்..
    பகிர்வுக்கு நன்றி..

    நன்றி சகோ தங்களின் வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  12. அருமை! நானும் சென்றிருந்தேன் ஒருமுறை! படத்தில் பார்க்கும்போது இன்னொருமுறை செல்ல ஆவலாயிருக்கு! :-)

    நன்றி சகோ தங்களின் வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  13. நல்லபதிவு குறிகட்டுவான் போகும் போதெல்லாம் ஊடாகப் போன அனுபவம் மட்டும்தான் இருக்கு அந்த கோயில் இன்னும் கண்ணுக்குள் அதன்பின் முக்கிய இரானுவ ஈனச்செயல் நெஞ்சில் முள்ளாக நெடுந்தீவு பதியப்பட்டுவிட்டது.

    நன்றி சகோ தங்களின் வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  14. நெடுந்தீவைப் பற்றி அன்பு ஆசான் தம்பிஐயா தேவதாஸ் ஒரு நூல் அருமையாக எழுதியிருக்கிறார்.

    நன்றி அதை இங்கே நினைவுபடுத்தியமைக்கு.

    ReplyDelete
  15. நெடுந்தீவு அந்தகள்ளு இன்னும் சுவைதான்.

    ஆகா இது உங்களுடைய மறக்க முடியாத

    அனுபவமா?.........

    ReplyDelete
  16. போகலாமா, வேண்டாமா? முடிவாச் சொல்லுங்க!

    ஐப்பசி வெயில் வரும்போது போங்கள் அருமையான
    நேரம்.

    ReplyDelete
  17. நெடுந்தீவு போனா குதிரைகள் பார்க்கலாம் ))

    ஆகா!....இப்படித்தான் இருக்க வேண்டும்.

    குதிர உங்களப் பாக்காமல் இருந்தால் சரி

    ஹி....ஹி.....ஹி...........

    ReplyDelete
  18. நெடுந்தீவு போகணும் என்ற ஆசை வந்து விட்டது

    உடனும் புறப்படுங்கள்...............

    ReplyDelete
  19. அடுத்த தடவை தனுஷ்கோடி வரும்போது நீந்தி வருகிறேன் ......பட்.....உயிரோடு விடுவாங்களா

    இது மனதை வாட்டும் துன்பம்.இந்தக் காலம் விரைவில்

    மாறும் என்று நம்புவோம் சகோதரரே.........

    ReplyDelete
  20. நெடுந்தீவு பற்றிய அருமையான பதிவு சகோதரி

    பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்

    ReplyDelete
  21. அட நம்ம நெடுந்தீவா??அவ்வ்வ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  22. நெடுந்தீவு பற்றிய அருமையான பதிவு சகோதரி

    மிக்க நன்றி சகோதரரே.............

    ReplyDelete
  23. அட நம்ம நெடுந்தீவா??அவ்வ்வ்வவ்வ்வ்வ்

    அடடா நீங்கள் நெடுந்தீவா!...........

    ReplyDelete
  24. நெடுந்திவு பற்றி அருமையான அனுபவப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  25. தீவைப்பற்றி அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நெடுந்திவு பற்றி அருமையான அனுபவப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    நன்றி சகோதரி வரவுக்கும் வாழ்த்துக்கும்............

    ReplyDelete
  27. தீவைப்பற்றி அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள்


    மிக்க நன்றி சகோதரரே.........

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........