2/21/2014

தமிழ் மொழியே என் தாய் மொழியே வாழிய நீ ....

























கண்ணே!  மணியே!  விழியொளியே! 
கவிதை தந்த  தேன்மொழியே! 
பெண்ணே   முத்தமிழ்க்    காவியமே! 
பெருமை நிறைந்த தாய்மொழியே! 
விண்ணே    வியக்க     விரைகின்றாய் 
விழுதாய் எம்மைச் சுமக்கின்றாய்!
உண்ணேன் உறங்கேன் உனைமறந்து 
உயிராய் விளங்கும் செம்மொழியே!

எண்ணும் எழுத்தும் கண்ணெனவே 
ஏற்றுக் கொண்டவர் வாழ்கின்றார்! 
மண்ணும்    மொழியும்     பெரிதெனவே 
மதித்தே வாழ்ந்தவர் உயர்கின்றார் 
பண்ணும் பரதமும் போலிங்கே 
பயில இனிக்கும்  தாய்மொழிதான்! 
புண்ணும் ஆறிடும் இந்நாளில் 
புதுமைத் தமிழுக்கு இணையேது!

எங்கும் எதிலும் தாய்மொழியை 
ஏற்றுக் கொண்டே பணி செய்வோம்  
தங்கும் மனத்தில் இன்பங்கள் 
தமிழைக் கற்கும் போதெல்லாம் 
அங்கம் எமது அங்கமென 
ஆக்கம் ஊக்கம் தந்திடுவோம்!
கங்கை காவிரி போல் மனத்தைக்  
காக்கும் தூய்மை உணர்வு தந்து!

மறவர் குலத்தின் அடையாளம் 
மங்காதிங்கே  மலைப்பூட்டும்!
புலவர்கள்  ஆற்றிய தொண்டதனால்   
புதுமை சேரும் எந்நாளும்!
குறள்தரும் துணிவே  போதும் இந்தக் 
குவலயம் வாழ்வு வளம் பெறுமே!
ஒருவர் இருவர் அல்ல இந்த 
உலகே பயன்பெறும் வாழ்வனைத்தும்!

இன்னும்   என்ன    வேண்டுமிங்கே 
இதயம் இனிக்கும் தமிழ் கற்பீர்!
பொன்னும் பொருளும் ஆசைகளும் 
புவியில் அழியும் செல்வங்கள் 
மின்னும் தமிழே உயிராகும் 
மிரளும் மனத்தின் துணிவாகும்
நன்னும்      துயரைக்   களைந்தென்றும் 
நாவில் தமிழைக்    காத்திடுவோம்!¨
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. பொன்னும் பொருளும் ஆசைகளும்
    புவியில் அழியும் செல்வங்கள்
    மின்னும் தமிழே உயிராகும்
    மிரளும் மனத்தின் துணிவாகும்
    நன்னும் துயரைக் களைந்தென்றும்
    நாவில் தமிழைக் காத்திடுவோம்// சிறப்பாய் சொன்னீர்கள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா .

      Delete
  2. "நன்னும் துயரைக் களைந்தென்றும்
    நாவில் தமிழைக் காத்திடுவோம்" என்ற
    ஈற்றடிகளை - நாம்
    உள்ளத்தில் இருத்தித் தமிழைப் பேணுவோம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  3. ”அனைத்துலக தாய் மொழி தின வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. "//மின்னும் தமிழே உயிராகும்
    மிரளும் மனத்தின் துணிவாகும்
    நன்னும் துயரைக் களைந்தென்றும்
    நாவில் தமிழைக் காத்திடுவோம்//"

    என்ன ஒரு அருமையான வரிகள்.
    சகோதரி, தங்களின் எண்ணத்தில் தமிழ், எந்த அளவிற்கு ஆட்சி புரிந்திருக்கிறாள் என்பதற்கு இந்த கவிதையே ஒரு உதாரணம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. /// மண்ணும் மொழியும் பெரிதெனவே
    மதித்தே வாழ்ந்தவர் உயர்கின்றார் ///

    பல சிறப்பான வரிகள் அம்மா... இன்றைய நாளுக்கேற்ற கவிதை என்றும் தேவை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ”அனைத்துலக தாய் மொழி தினத்தில் பொருத்தமான கவிதை ,வாழ்த்துக்கள் !
    த ம 3

    ReplyDelete
  7. தாய்மொழியின் பெருமைதனை உயர்த்திப் பிடிக்கிற அழகுக் கவிதை! இன்றைய தினம மட்டுமல்ல... எல்லா தினங்களும் எமக்கு தாய்த்தமிழ் தினங்கள்தாமே!

    ReplyDelete
  8. என்னுயிர் தமிழை விண்ணுக்கு தாங்கி பிடிக்கும் கவிதை !

    ReplyDelete
  9. தமிழ்பால் குடித்து வளரந்தவரோ நீங்கள்....தமிழ் உங்களிடம் இப்படி புகுந்து விளையாடுகிறது. அருமை tha.ma 5

    ReplyDelete
  10. சிறப்பான வரிகள் சகோதரியாரே

    ReplyDelete
  11. தாய் மொழி தினத்திற்குப் பொருத்தமாய் சிறப்பான கவிதை....

    த.ம. +1

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........