12/08/2013

பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்




பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்
பத்திரமாக வைத்தேனே ........
சித்திரை வந்ததும் நித்திரை ஏனடி
சிந்தையில் வந்தொரு பாட்டுப் படி ...

                                                             (  பத்தரை மாதத்துத்)

குற்றமாம் தமிழைக் கொன்றிடும் உலகில்
குற்றுயிரோடு நாம் கிடந்தால் எம்மைப்
பெற்றவள் தவிப்பாள் பெருந் துயர் கொள்வாள்
பெற்றெடுத்த தாய்மொழிக்கு ஈடேது ?......

கட்டிய சேலையும் வேட்டியும் மாறினும்
கண்ணியம் வேண்டும் எங்களுக்கு அதை
அந்நிய மொழியில் கண்டதும் உண்டோ சொல்
அருந் தவப் புதல்வர்கள் சொன்னது போல் ?..

                                                               (  பத்தரை மாதத்துத்)

கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
கற்றிட கற்றிட இன்பம் பொங்கும்
மற்றவர் போகும் பாதைகள் எதற்கு
மற்றுமோர் துயரைப் பெற்றிடவா ?....

பெற்றது போதும் பெருந்  துயர் வாட்டும்
பெண்மையைப் போற்றும் எம் நாட்டினிலே
அன்னியர் ஆட்சியும் அது தந்த வீழ்ச்சியும்
அழியவில்லையே  மன ஏட்டினிலே .....

                                                                  (  பத்தரை மாதத்துத்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

32 comments:

  1. //கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
    கற்றிட கற்றிட இன்பம் பொங்கும்//
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  2. பெற்றது போதும் பெருந் துயர் வாட்டும்
    பெண்மையைப் போற்றும் எம் நாட்டினிலே
    அன்னியர் ஆட்சியும் அது தந்த வீழ்ச்சியும்
    அழியவில்லையே மன ஏட்டினிலே .//

    எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி
    சரளமாக அருவியாக கவிதையில்
    வார்த்தைகள் வந்து கொட்டுகிறதோ
    மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. குற்றமாம் தமிழைக் கொன்றிடும் உலகில்
    குற்றுயிரோடு நாம் கிடந்தால் எம்மைப்
    பெற்றவள் தவிப்பாள் பெருந் துயர் கொள்வாள்
    பெற்றெடுத்த தாய்மொழிக்கு ஈடேது ?//

    மனதை ஈர்த்த வரிகள்....!

    ReplyDelete
  5. கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
    கற்றிட கற்றிட இன்பம் பொங்கும்
    மற்றவர் போகும் பாதைகள் எதற்கு
    மற்றுமோர் துயரைப் பெற்றிடவா ?..

    வெகு நேரம் ரசித்து மகிழ்ந்தேன்..
    தமிழின் சுவையை வார்த்தைகளில் வடித்த அற்புதம்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் .

      Delete
  6. கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
    கற்றிட கற்றிட இன்பம் பொங்கும்
    மற்றவர் போகும் பாதைகள் எதற்கு
    மற்றுமோர் துயரைப் பெற்றிடவா ?..

    வெகு நேரம் ரசித்து மகிழ்ந்தேன்..
    தமிழின் சுவையை வார்த்தைகளில் வடித்த அற்புதம்!..

    ReplyDelete
  7. தீந்தமிழின் பெருமைதனை
    அழகுற பாமாலை தொடுத்து
    எமது கண்களுக்கு விருந்தாக்கிய
    சகோதரியே..
    அருமையான கவிதை...

    ReplyDelete
  8. பத்தரை மாதத்துத் தங்கமாய் திகழும் தமிழ் மொழி ..!

    ReplyDelete
  9. கவிதையுடன் தலைப்பும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  10. தாயும் மொழியும் மண்ணும்
    கண்ணெனப் போற்றும் தேன்கவிதை!

    அத்தனை வரிகளும் உண்மையானவை!
    அற்புதம்! உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  11. சிறப்பான வரிகள்.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  12. வரிகள் மனதை மிகவும் கவர்ந்தன... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  13. அற்புதம்...
    சிறப்பான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  14. தங்கத் தமிழினில் அழகிய ஆக்கம் அளித்துள்ள

    பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்

    பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். ;)

    ReplyDelete
    Replies
    1. கோபாலகிருஸ்ணன் ஐயா தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் போதாது எங்கே எனது மாங்கனிச் சாறு ?..:)))மிக்க நன்றி ஐயா மனதார பாராட்டி வாழ்த்தியமைக்கு .

      Delete
  15. அற்புதமான கவிதை. அழகிய வரிகள், மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா மனமுவந்து பாராட்டிய இப் பாராடிற்கு .

      Delete
  16. தமிழ் தேன் சுவைதான்.... அழகிய சொல்லாட்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete

  17. வணக்கம்!

    கற்றவா் போற்றக் கனிந்த கவிதையைப்
    பற்றுடன் உண்டேன் பசித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  18. பெற்றது போதும் பெருந் துயர் வாட்டும்
    பெண்மையைப் போற்றும் எம் நாட்டினிலே
    அன்னியர் ஆட்சியும் அது தந்த வீழ்ச்சியும்
    அழியவில்லையே மன ஏட்டினிலே .....

    அன்னியர் ஆட்சி அழியும் விரைவில்!
    எண்ணிய படியே எய்துப குறைவில்

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........