3/15/2013

செய்வன திருந்தச் செய் அதையே துணிந்தும் செய்!



உப்புக் கல்லை வைரம் என்று
ஒப்புக் கொள்ளச் சொல்வார்!- அதையே
ஒப்புக்கொள்ள மறுப்போரிடத்தில்
மேலும் ஒழுக்கக்கேடாய் நடப்பார்!

சிலர் கற்றுக் கொண்ட அறிவை மறந்து
கயமை உணர்வுடன் இருப்பார்!- இந்தச்
சுற்றம் சூழல் பெரிதென நினைத்தால்
வரும் சுமைகளை இங்கே யார் சுமப்பார்!

பட்டிக் காட்டு மனிதர்கள் இவர்களைப்
பகைத்தால் துயரம் என்றே  நீயும்
கட்டுக்கடங்கிப்  போவாயானால் பின்னர்
வாழ்க்கை என்றும்  கசக்கும்!

கற்றுக் கொள்வாய்  வாழ்வில் இனியும்
எம்மைக் காக்கும் சிலரே  போதும் என்று!
விட்டுத் தள்ளு ஏனையவை எல்லாம் வீண்
விரக்தியை ஊட்டும் பதர்கள் என்று!

எதிலும் குற்றங் கண்டே  பிழைப்பவரிடத்தில்
கூர்மையாக நின்றிடுவீர்!
பயபக்தியோடும் பாசத்தோடும் பழகும்
உறவுகளை வென்றிடுவீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. unmai !

    azhakaa aaniththaramaa sollideenga ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  2. அருமையான கருத்துள்ள வரிகள்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வரவுக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  3. அருமை.. அர்த்தமுள்ள கவிதை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவுக்கும் பாராட்டிற்க்கும்

      Delete
  4. எதிலும் குற்றங் கண்டே பிழைப்பவரிடத்தில்
    கூர்மையாக நின்றாலொழிய இங்கும்
    விட்டுக் கொடுத்து நடப்பாயானால்
    உன் முயற்சிகள் யாவும் தோற்கும் !......// அருமையான வரிகள்! இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  5. கருத்துள்ள வரிகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........