3/04/2013

வெக்கித் தவித்தேன் வேதனை தீரவில்லை



வெக்கித் தவித்தேன்
வேதனை தீரவில்லை
நான் வெந்து மடிந்தேன்
உன் ஞாபகம் போகவில்லை
கட்டழகு கட்டிக் கரும்போ  உன்
கண்களிலே தவழும் நிலவோ!
முத்தமிட்ட கன்னங்களில்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
சித்தரிக்க வார்த்தை இன்றி
சிந்தனைகள் வாடுதடா!

                          (வெக்கித் தவித்தேன் )

பள்ளியறைப் பாடம் சொல்லி
என்னுயிரில் நீ கலந்தாய்
தள்ளி வைத்துத் தாளம் போட
இன்னும் என்ன வேண்டுமடா?
கல்லில் முள்ளில் தூக்கம் என்ன .
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
என்றன்  உயிர் வேகுதடா

பெண்ணின் துயர் கேட்பதாரு
பேச்சு நின்று போச்சுதடா!
உள்ளத்திலே உள்ள சோகம்
ஊமை நெஞ்சை கொல்லுதடா!
பாடல் தந்த தலைவனுக்கு
நான் பாடும் பாடல் கேட்கிறதா...
வீறாப்பு ஏன் உனக்கு இன்னும்
வேண்டாமே தப்புக் கணக்கு .......

                             (வெக்கித் தவித்தேன் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. தேரா மன்னா...
    நான் இயம்புவதும்
    கேட்டிலையோ ..
    எனதான புலம்பல்கள்
    உனக்குள் ஒலிக்கவில்லையோ..

    அழகான பாடல் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே !
      இனிமையான கருத்துக்களால் தொடர்ந்தும் என்னை
      ஊக்குவிக்கும் தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்...
      மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும் !

      Delete
  2. காதல் சொட்டும் ஏக்கக் கவிதை.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் இனிய கருத்திற்கும் .

      Delete

  3. வணக்கம்!

    வெக்கித் தவித்தேன் கவிகண்டு
    சொக்கித் தவித்தேன்! செந்தமிழை
    நக்கிச் சுவைக்கும் என்னெஞ்சம்
    நல்ல கவிதைக்கு அடிமையுறும்!
    மக்கிக் கிடக்கும் பாட்டுலகை
    மலரச் செய்யும் கவிஅம்பாள்
    கொக்கி போட்டே என்னுயிரைக்
    கொள்ளை கொண்டார் வாழ்த்துகிறேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா் - கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா !
      மனதை மலர வைக்கும் இனிய கருத்துரைகள் கண்டால்
      இன்னும் இன்னும் மனதில் சந்தம் பொங்கும் ! மிக்க நன்றி
      ஐயா அன்பான தங்கள் வாழ்த்துரைக்கு !

      Delete
  4. கட்டழகு கட்டிக் கரும்போ உன்
    கண்களிலே தவழும் நிலவோ ....
    இருமுறைச் சொல்வதால் இனிமை கூடுதோ?

    ReplyDelete
  5. இந்த பாடல் வரிகளை சுமாகமான ராகமான அமைத்து மகிழ்கிறேன்...


    அருமை

    ReplyDelete
    Replies
    1. உண்மையும் அதுதான் சகோதரரே இப் பாடல் இயற்றும் போது
      என்னுள்ளம் என்னிடம் இல்லை பல ஆயிரம் முறைகள் பாடினேன் .
      மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  6. வீறாப்பு ஏன் உனக்கு இன்னும்
    வேண்டாமே தப்புக் கணக்கு !.....
    நீரோடு பகை எதற்கு
    நீ வாழ வழியிருக்க............!!

    தன்னம்பிக்கை தரும் தங்கவரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !

      Delete
  7. ரசிக்க வைத்தது பாடல்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சோதரரே தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .

      Delete
  8. கொக்கி போட்டே இழுத்தீர்கள் எங்கள் மனதை - கவிஞர் பாரதிதாசன் சொன்னதை வழிமொழிகிறேன். எளிமையான வரிகளில் ரசிக்க வைத்த கவிதை! அருமை!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........