3/23/2014

ஆதி சிவ சங்கரனே அன்பி லுரு வானவனே



ஆதி    சிவ   சங்கரனே
    அன்பி  லுரு    வானவனே
நீதி  நிலையாமை தகுமோ -மன
    நின்மதி   தான் இங்கு வருமோ ?...
சோதியிலும்   பெருஞ் சோதியே
   சொக்க   வைக்கும் சுந்தரனே
வீதி வலம்   வர வேண்டுமையா -இடர்
   விட்டகல அருள் தாருமையா ..

கூவி     அழைக்கின்றோம் பெரும்
        கும்மி  அடிக்கின்றோம் ஏன்
ஆவி துடிக்  கையிலும் உன்றனை
     அன்பில் சிவகுக நாதன் நாதன் என்றே
தேவி பார்  பதியுடன் விழி
     தேடும்   முருகனும் விநாயகனும்
மேவி வர   வேண்டுமையா உடன்
      மெல்லத் துயர் தீர்த்தருள வாருமையா ..

சாவின்    விளிம்பினிலும்  மனம்
  சாந்தி     பெறும் வரைக்கும் 
கோவில்  குளம் தானே வாழ்க்கை இது
  கொள்கை மாறாத வேட்கை !
நாவில்    துளி விஷமும்
    நக்கித் துயர் தீர்க்கோம்
பாவில்   வந்தமரும் பரனே
   படரும் துயர் தீர்த்தருள வாருவாய் ..

வேங்கை  இனத்தவரைக் கொல்லும்
  வேட்கை  தணிக்கும் வரைத் - தென்
மாங்கை   உரைக்க மாட்டோம்
    மங்கை  ஒரு பாகமாய்
கங்கை      முடி   மேலமர்த்திச்
    சங்கை     முழங்கி வரும்  அரனே
அங்கையுள்  அனலைத் தாங்கி -எம்
    ஆருயிர்     காக்க வாரீர் ....

சிவசிவசிவ    என இங்கு ஓதிடுவோம்
    சிந்தையில்  உன் நாமம் காவிடுவோம்
நவயுக       நாயகன் நின் அருள் வேண்டி
    நாளெல்  லாமிங்கே காத்திருப்போம்
தவநிலை  கலைத்திங்கே வரவேண்டும்
    தமிழரைக்  காத்தருளும் வரம் வேண்டும்
கவசமும்  எமக்கிங்கே நீதானே
  காணக்      கண் கோடி பெறும் பெருமானே ...!!


(படங்கள் கூகிள் :நன்றி )


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. தேவி பார் பதியுடன் விழி
    தேடும் முருகனும் விநாயகனும்
    மேவி வர வேண்டுமையா உடன்
    மெல்லத் துயர் தீர்த்தருள வாருமையா ..//

    குடும்பத்துடன் வந்து துயர் தீர்க்க வர சொல்லும் கவிதை அருமை.
    தமிழ்க்கடவுள் வந்தபின் பயம் எதற்கு? துயர் விலகும் பனியாய்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. முதல் தமிழ் வாக்கு சேர்த்துவிட்டேன்.

    ReplyDelete
  3. தேவி பார் பதியுடன் விழி
    தேடும் முருகனும் விநாயகனும்
    மேவி வர வேண்டுமையா உடன்
    மெல்லத் துயர் தீர்த்தருள வாருமையா!..

    திருத்தாண்டகம் போல
    பக்தி மணம் கமழ்கின்றது..

    ReplyDelete
  4. கவசமும் எமக்கிங்கே நீதானே! //நிஜம் தான்! கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஆழ்ந்த உண்மையான பக்தியின் வெளிப்பாடே வரிகள்... அற்புதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  6. வணக்கம்!

    அம்மை அப்பன் திருவடியில்
    ஆழ்ந்து கிடந்தால் துயா்உண்டோ?
    இம்மை மறுமை இருவினையும்
    இல்லா தொழியும்! உயிரொளிரும்!
    நம்மை தேற்றி நன்னெறியை
    நாடச் செய்யும் இக்கவிதை!
    செம்மைத் தமிழின் சீா்பெற்றே
    அம்பாள் செழித்து வாழியவே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. அருமையான பாடல்... வாழ்த்துகள் சகோ.....

    த.ம. +1

    ReplyDelete
  8. பத்தி மனம் கமழும் கவிதை
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  9. //கூவி அழைக்கின்றோம் பெரும்
    கும்மி அடிக்கின்றோம் ஏன்
    ஆவி துடிக் கையிலும் உன்றனை
    அன்பில் சிவகுக நாதன் நாதன் என்றே
    தேவி பார் பதியுடன் விழி
    தேடும் முருகனும் விநாயகனும்
    மேவி வர வேண்டுமையா உடன்
    மெல்லத் துயர் தீர்த்தருள வாருமையா .//

    அற்புதமான கவி நடையில் பக்தி மணம் கமழ்கின்றது! சகோதரி! அந்தி செயலழின் தலம் வரும்போழுது சிவன் பெயர் நாவில் வாராதே ஆதலினால் மனமெ இன்றே சிவன் நாமம் சொல்லிப் பழகு! என்று பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  10. "தமிழரைக் காத்தருளும் வரம் வேண்டும்!" என்ற
    வேண்டுதலை விரும்புகிறேன்.
    சிறந்த பகிர்வு

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........