3/09/2014

அன்பே உன்றன் ஞாபகம்

                                     


அன்பே உன்றன் ஞாபகம்
அன்றும் இன்றும் நெஞ்சிலே 
முன்போல் இங்கு தொடருது தொடருது 
மூன்றாம் பிறையாய் வளருத்து வளருது 

கண்கள் எழுதிய காவியத்தைக் 
கானல் நீரது அழித்திடுமா?
திங்கள் முகத்தை நான் காண 
திசைகள் எட்டையும் தொழுதிடவா?

                                         (அன்பே உன்றன்)

கண்ணே மணியே கற்கண்டே 
காதல் கிளியே ஓவியமே 
சொன்னால் போதும் ஒரு வார்த்தை 
சோகம் தீர்க்கும் மறு வார்த்தை 

உச்சி முகர்ந்தவன் நானிங்கே!
உயிராய் நின்றவள் நீ எங்கே?
கட்டி அணைத்திட வா...அன்பே 
காதல் கீதம் தான் எங்கே?

                                           (அன்பே உன்றன்)

வந்தேன் வந்தேன் மன்னவா
தந்தேன் தந்தேன் என்னை நான் 
உன் தேன் இதழில் சிந்திடும் 
செந்தேன் மழையோ சொல்லு நான்? 

கட்டிக் கரும்பா? இவள் ஓவியமா ?
காதல் பேசும் பைங்கிளியா?
எட்டிப் போனால் தான் தகுமா? 
எந்தன் ஜீவன் நீயல்லவா?

                                          (அன்பே உன்றன் )

அடடா காதல் இதுவல்லவா!
அன்பே அன்பே எனைக் கிள்ள வா..
கனவா நினைவா நான் காண்பது!
காணும் இன்பம் எனைக் கொல்லுது ...

நிலவும் வானும் ஒண்ணானது 
நினைப்பும் இங்கே ஒண்ணானது ...
உலவும் தென்றற் காற்றே நில்லு 
உலகை மறந்தோம் அங்கே சொல்லு ...
                                           
                                             (அன்பே உன்றன் )
                                                 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

26 comments:


  1. வணக்கம்!

    இனிய இசையில் இயற்றிய பாடல்
    கனிபோல் இனிக்கும் கனிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  2. காதல் ததும்பும் கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி சகோதரா .

    ReplyDelete
  4. காதல் ரசம் சொட்டுது தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி அருணா !

      Delete
  5. ஆகா...! ரசித்தேன் அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  6. காதல் மொழி மனதை இளமையாக்கி விட்டது சகோதரி! இந்த மொழியே தனிதான்...இதற்கு மொழி, சாதி, இனம், மதம் எதுவும் இல்லாத ஒரு தனி மொழி! எங்கள் ஓட்டு இந்த மொழிக்கு எப்போதும் உண்டு!

    சூப்பர்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்களைப் போன்றவர்கள் முன் வந்து
      எங்களை எல்லாம் ஊக்குவிப்பதனால் தான் இன்னும் இந்த
      மொழியோடு இணைந்து நின்று பல பாடல்களையும் இயற்றுகின்றோம் .தொடருங்கள் தொடர்ந்தும் தங்களின் பேராதரவினைத் தாருங்கள் என்று நானும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன் .மீண்டும் ஒரு முறை நன்றி சகோதரா .

      Delete
  7. எந்தப் படத்தில் இப்பாடல் வருதுக்கா!

    ReplyDelete
    Replies
    1. ராஜிம்மா இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் தங்களின்
      அன்பு அக்கா அம்பாளடியாள் இந்தக் காதல் பாட்டிற்கும் ஒரு
      சிறந்த படம் வரமளித்தால் விரைவில் பதிலும் தருவேன் :)))
      மிக்க நன்றி சகோதரி ரசித்துப் படித்த நன் மனதிற்கு .

      Delete
  8. வாவ். அற்புதமான பாடல்.. நல்ல டூயட்.. பாடிப்பார்த்தேன்.. அருமையாக மெட்டில் அமையும் பாடல்.. சூப்பர் சகோ..

    ReplyDelete
  9. "அன்பே உன்றன் ஞாபகம்" என்ற
    பாடல் என்றும் நன்று என்பேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் .

      Delete
  10. "அன்பே உன்றன் ஞாபகம்" என்ற
    பாடல் என்றும் நன்று என்பேன்.

    ReplyDelete
  11. நாவூறும் நல்வரிகள்
    இனிய பாடல்
    இனிய வாழ்த்து சகோ
    வாழ்க வளமுடன் !9

    ReplyDelete
  12. ஓசை நயம் மிகுந்த டூயெட் பாடல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  13. காதல் ரசம் ததும்பும் சிறந்த பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. சினிமா சான்ஸ் எதுவும் கிடைத்து விட்டதா ,தெய்வீகத்தில் இருந்து தெய்வீக காதல் பக்கம் பார்வை திரும்பியுள்ளதே !
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. விழிகள் இந்த வாய்ப்பினையும் தேடிக்கொண்ட தான் இருக்கின்றது சகோதரா பதில் தான் கிட்டவில்லை :))விரைவில் கிட்டும் என்றே நினைக்கின்றேன் .மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  15. காதல் ரசம் மழை போல கொட்டுது !

    ReplyDelete
  16. என்ன தோழி ! ஒரே காதல் மயமாக wow காதல் அடை மழையாய் அழகு அழகு சினிமா சான்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........