9/29/2012

அபி நீ இன்னுமா தூங்கவில்லை !.....



கணனித் திரையில் முகம் புதைத்து
தினமும் காணும் காட்சி கண்ணுக்கு
இயமனாய் முடியுது பாரிங்கே !!!!......
இது தொடர்ந்தால் வாழ்க்கை என்னாகும் !.....

இளமை இருக்க முதியவர்போல்
இது என்ன கண்ணுக்கு கண்ணாடி!...
சிரமம்தானே வாழ்நாளில் இதைத்
தாங்கிச் செல்லும் சிறுவர்கழுக்கு !.....

முகத்தைப் பாரு வறண்ட தோற்றம்
முற்றிலும் கண்ணில் கருவளையம்!....
எதற்கும் ஒரு அளவு இருக்கு இது என்ன
இரவு பகலாய் கணணி முன்னே!...

அடக்க மறந்தால் பிள்ளைகளை
அடக்கி வைக்கும் பல நோய்கள்
குறுக்க குறுக்க பேசுகின்றாள் பார்!....
குறைகள் ஏதும் இல்லை என்று !!!!....

கூனி இருக்க முதுகு வலியும்  பெரும்
கொடைதான் பின்னே வேறேது !...
ஊதிப் பெருகும் உடல் குறைக்க
இவளை ஓட விடு தெருவினிலே !...

நாலு பேரு பார்க்கும் போது இதெல்லாம்
நல்லாய்த் தாண்டி இருக்கும் உனக்கு !...
வேற வேலை என்ன இருக்கு ............
வீட்டில் நடக்கும் கூத்தைப் பாரு !...

பாலும் தேனும் கலந்து முகத்தில்
பத்துப் போடு இந்த வரட்சி போக
ஆளப் பாரு அலங்கோலமாய்......!
அவளைக் கொஞ்சம் தூங்கப் பழக்கு !....

போற போக்கில் புத்தகங்கள்
பூச்சிகள்  உறங்கும் நல் மாடம் ஆகும்
ஆளுக்காளு கணணி இன்றி
நாட்டை ஆழ முடியாதென்றால்

தேடிப் பார்க்க நன் நூலதனை
என்ன தேவை இருக்கு கணணி இருக்க!!!..........
போற பொழுதும்  இதனில் போகும் இன்று
பிள்ளைகள் வளரும் முறையும் இதுதானே!!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

  1. நல்ல கவிதை சகோ!

    ReplyDelete
  2. கணினிக்கு அடிமையாகும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கூறும் அழகான கவிதை.பெற்றோர் கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. உண்மையான கவிதை! கணிணி மோகம் உடல் நலனை கெடுக்கத்தான் செய்கிறது! அருமை! நன்றி!

    ReplyDelete
  4. சிந்திக்கவைக்கும் கவிதை நன்று.

    ReplyDelete
  5. கணினி அடிமைதனத்திற்கு நல்ல சுருக் கவிதை !

    போற போக்கில் புத்தகங்கள்
    பூச்சிகள் உறங்கும் நல் மாடம் ஆகும்

    " உண்மைங்க "

    ReplyDelete
  6. அனைவரும் (முக்கியமாக பெற்றோர்கள்) அறிந்து கொள்ள வேண்டிய கருத்துள்ள கவிதை...

    ReplyDelete
  7. மிக அருமை
    பிள்ளைகளின் கணினி அடிமையை அழகாக கவிதையாக வடித்து விட்டீர்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........