11/14/2010

பருவக்காற்று வீசயிலே....

                  
பருவக் காற்று வீசயிலே பலர் 
பாதைகள் இங்கே மாறுதடா 
உருவம் பார்த்து வந்த காதல் 
உயிரைக் குடிக்கப் பார்க்குதடா 
தினமும் அழுத கண்ணீரால் பல 
தீத்தக்கரைகள் ஓடுதடா!                                      
                                         
...............................................(பருவக்காற்று) 

நீரில்லாத மீனென்பார்!
நிலவில்லாத வானென்பார்!
வேரில்லாத மரம் என்பார்! 
விடியலை இழந்த பறவை என்பார்!
யாவும் துறந்த துறவியைப் போல்......
யாவும் துறந்த துறவியைப் போல்.......... 
தினம் மரண யாசகம் கேட்கும்
மனிதர்கள் பார்!
                                          (பருவக்காற்று)

விதியோ சதியோ என் சொல்வேன்! 
இதில் விதை விதைத்தவன் 
துணையையும் காணமடா!
காலம் நேரம் கூடும் போது 
காலமும் நேரமும் கூடும்போது
காதல் இங்கே மலர்கிறதே!

                               (பருவக்காற்று) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........