11/29/2012

வெறும் புகழ்தான் இங்கு வாழ்க்கையா



கவிதை மழையில் நனையும்போது
உறையும் பனியும் சுடுகிறதா !!!!.......
இந்த விதியை மாற்ற முயலும்போது
உன் மதியில் சஞ்சலம் எழுகிறதா......

பிறர் அருமை பெருமை தெரிந்திருந்தால்
அன்பைச் சிதைக்க மாட்டாயே உன்
வலிமை கொண்ட எழுத்தினாலே
நல் வாழ்வை அழிக்க மாட்டாயே .....

கருவில் இருந்து தெருவில் வந்து
களங்கம் உற்ற பின்னாலும்  இந்த
உயிரைக் குடிக்கத் தூது எதற்கு இனி
ஊன் உடலும் இதனை ஏற்காதே !!...

அமைதிப் பூங்கா நடுவினிலே அன்று
அக்கினிக் குண்டை ஏன் எறிந்தாய்!.....
உன் நிழலைக் கூடக் காணா மனிதரும்
நின்மதி இழந்து தவிப்பதர்க்கா !!!!...........

கருணை உண்டா உன் இதயத்திலே
களங்கம் சொல்லிப் போகின்றாயே
இன்று எரிமலையைப்போல சிதைந்த மனம்
இனியும் அமைதி கொள்ளாதே ....................

வறுமைக் கோடும் வதைக்கா மனதை
சில  வார்த்தை என்றும் அழித்துவிடும்
பிறர் உணர்வைக் கொன்று பெருகும் புகளில்
அப்படி என்ன ஓர் இன்பம் வந்து விடும் !!!!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2012

துயிலும் இல்லம் நோக்கி






துயர் படிந்த பாதை எங்கும் மெழுகானார்!
உள்ளத் தூய்மையினால் எமக்கிங்கே உயிரானார்!
பகைவருக்கும்   பணியாத ஒளியானார்!
எம் பாசம் மிகு மாவீரத் திலகங்கள்!


ஒரு கொடியில் பூத்த மலர் மணம் மாறுமா!
ஓங்கு தமிழ்க் குலத்தினது மொழி மாறுமா!
வறுமையிலும் மாறாத பண்பு மாறுமா!
எம்மை மாற்ற எண்ணும் எண்ணம் அது நிறைவேறுமா!

நடந்து வந்த பாதை அதை நினைத்துப் பாரடா!
நம்மவரின் சடலம் இன்றி வேறு ஏதடா!
எரித்த உடல் சாம்பலாகி வானில் பறக்குதே!- இன்னும்
எரியும் உடல் இங்கிருந்து கண்ணீர் வடிக்குதே!

சிலர் நடந்த கதை முடிந்ததென்று பின்னே செல்கிறார்!
நரிகளிடம் கூலி வாங்கி வயிறை வளர்க்கிறார்!
தமிழனது உள்ளமதை வதை வதைக்கிறார் பின்
தரம் இழந்த பின்னாலும்  தமிழன் என்கிறார்!

பரந்த கடல் வெளி எங்கும் பார்த்து நிக்குறார்
பாசம் மிகு காவலராய் எங்கள் மாவீரர்! - அவர்கள் 
இழந்த இரத்தம் உறைவதற்க்குள் இந்த ஆட்டமா!
எம் இனத்தவனே உனக்கு இது நீதியாகுமா!

தவழ்ந்த தரை மறந்து நீயும் தாவிக் குதிக்கிறாய்!
ஏன் தமிழினத்தின் பெயர் கெடுக்க மேலும் அலைகிறாய்!
விரைந்து எப்போ உன் கடனைத் தீர்க்கப் போகிறாய்!
என்றும் விடியலுக்காய் வீழ்ந்தவரை வணங்கிச் செல்லடா.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/25/2012

மாவீரர் நாள் 2012




ஈழத் தாயின் மடிமீது
காரிருளைப்  போக்க வந்துதித்த
கார்த்திகைத்  தீபங்கள்  கண்முன்னே
காட்சி தரும் இந்நாள் எமக்கு பொன்நாளே !...

வானம் கண்ணீர் மழை தூவ
இவ் வையகம் போற்றும் போர் வீரர்
பாதம் தொட்டு  வணங்கிட இன்றே
படை திரண்டு வாரீர் கடல் போல......

ஏழைகள் எங்கள் வாழ்க்கை என்றும்
இருளில் கிடக்கும் நிலை கண்டு
எந்நாளும் துடித்த யீவன்களை
இந்நாளில்க்  காண வாரீர் கடல் போல.....

பாழும் மனதில் பெராசையதால்
படு பாவம் செய்த கயவர்களை
எந்நாளும் அழித்து ஒழித்திடவே
எமக்கெனப் பிறந்த போர் வீர்கள்!.....

இவர்கள் தாகம் என்ன தாகம் இது !!!!.........
என்றும் தணியாத சுதந்திர தாகம்
உடல் வீழும் வரைக்கும் தளராததால் தம்
உடலையும் விதையாய் வீழ்த்திச் சென்றனரே!!!!....

போரினில் சிறந்த போர் வீரர்கள்
இப் புவியினில் எவரெனக் கேட்டாலிங்கே
நாளை இந்த உலகம் சொல்லும்
நம்மவர்  பெயர்கள்  அல்லால் வேறேது !!!!....

தோழில் சுமைகள் தாங்கியபடியே
துரோகிகள் வரவை எதிர்த்து நின்று அன்று
காவல் காத்த தெய்வங்கள் இவர்களைக்
காணக் கடல்போல் திரண்டு வாரீர் ..............:(

எம் மானம் பெரிதென நினைத்தவர்கள்
தம் மனதில் துயரை வடித்தவர்கள்
ஈழத் தாய் எம் தாய் ஈன்றெடுத்த
இனிய புதல்வர்களைக் காண வாரீர்.....!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/20/2012

ரோஜா மலரே ரோஜா மலரே.....



ரோஜா மலரே ரோஜா மலரே
முள்ளில் ஏனடி விழுந்தாய் நீ...
உடல் கீறிக் கிழித்து பாயும் இரத்த
வெள்ளம் கண்டால்  தாங்காதே !....

கோலம் போடும் கண்ணே  உந்தன்
மனக் கோட்டை சிதைந்தது எதனாலே
அந்த ஆளும்கட்சி தூளாய்ப் போகும்
அடி அடிமைப் பெண்ணே  கலங்காதே !:......
                                       (ரோஜா மலரே ரோஜா.....)

வீரத்தாயின் புதல்வி அம்மா
உன்னை உலகம் அறியாது உன்னை
அறியும் காலம் வந்தால் போதும்
இங்கு  அரக்கர் மனமும் தாங்காது !.......

நீலக் கடல் என சொல்வார் உலகில்
நீருக்கிங்கே நிறம் ஏது இதைப்
பாளாய்ப் போன மனம் உணர்ந்தாலும்
சொல்லும் பழக்கம்  என்றும்  மாறாது !...

வீணாய்ப் போகும் மனிதர் பேச்சு
அவர்கள் விருப்பம் போல  இருக்கட்டும்
பெண்ணே உந்தன் உள்ளத்தழகு
அது என்றும் உயர்ந்தால்  போதுமடி ...

கோளைக்கில்லை பெருமை இங்கே
பொறுமைதானடி வெல்லும் என்று
உன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்த
ஒற்றை நாணயம் அது பதில் சொல்லும்!....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/13/2012

காதோரம் காதல் சொல்லும்


காதோரம் காதல் சொல்லும்
உன்  பாடல் கேட்டால் போதும்
உடலும் மனமும் தீயில் எரியுது
அடி பெண்ணே உன்னாலே !......
என்னை அளவும் தொழவும்
விட்டுச் சென்ற ஆணவக்காரி நீதானே !....

தெருவோரம் நான் தூங்க
என் விழி நீரில் பயிர்  வாழ
உனக்கென்ன பெண்ணே சொல் என்
உயிர் மூச்சைக் கொண்டு சென்றாயே!

கனக்கின்ற இதயத்தில் இங்கே
உனக்காகவே   நான் வடித்த
கவிதைக்குள் அர்த்தப்  பாரம் அதை
இறக்கத்தான்   துடிக்கின்றேன் நீ
எனக்காகப் பிறந்தாயோ.... போ ..போ போ ....

மலைப் பாம்பு போல் உன் ஆசை என்
மனதை  விழுங்கிச் செல்லத்தான்
தடு மாறுதே!  என் உள்ளம் இருளானதே!
விடியாத பாதைகள் விரிகின்றதே!- அதில்
போதை இன்றி நெஞ்சம் அலை மோதுதே!

கனாக் காணும் உள்ளங்கள்  உலாப் போகுதே!
நிலா கூட என்னைக் கண்டு இடம்மாறுதே!
இதுதான் உன் காதல் தந்த பாடம் இனிக்
கண்ணில் கங்கை ஓடும் .........புது ராகம்
உனைச் சேரும் அதில் சோகம் எனதாகும்
அது போதும் போதும் போதும் பெண்ணே ...

                                                             (  காதோரம் காதல்....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2012

பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்



மனம் இனிக்கப் பேசும் முல்லை
மலரே இங்கு உன்னை வாழ்த்த
வெண்ணிலவை நானளைக்கவோ ஓஓஓ ஓஓ .....
விடி வெள்ளிகளால் மாலை கோர்க்கவோ .....

மானே எந்தன் மாங்குயிலே .....
தேனே.... எந்தன் திகழொளியே ...
நீயே... எந்தன் யீவனடா ...
எந்நாளும் இங்கு நீ வாழ
என்னுயிரை நான் கொடுத்து
வாழ வைப்பேன் !¨..உன் மடியில்
நான் தவழக் காத்திருப்பேன் !.........

                                                  (   மனம் இனிக்கப் )

பூவே இளம் பூவே உந்தன்
உள்ளம் அது வெள்ளை என
இந்த ஊரும் உலகும் போற்றும்போது
உன்னால் நானும் மகிழ்வேனே ......

வீரம் வேண்டும் நெஞ்சினிலே
வெற்றி என்றும் உனதாக நல்ல
ஞானம் வேண்டும் மகனே உந்தன்
வாழ்க்கை என்றும் சிறப்பாக .....

கோலம் போடும் கண்ணாலே என்னைக்
கொள்ளையடித்துச் செல்பவனே ......
எந்நாளும் இன்பம் பொங்கிடவே
இந்நாளில் நாமும் வாழ்த்துரைப்போம்....

ஆலம் விழுது போல் உன் வாழ்வு
அன்பால் உறுதி கொள்ளட்டும்
உள்ள காலம் முழுதும் உன்பெயரை
அந்தக் காலன்கூட சொல்லி மகிழட்டும் ...

ஏழை எளிய மக்கள் எல்லாம்
இவன்போல் துணைவன்  இல்லை என்று
நாளை இந்த யுகமே போற்ற
நலமாய் வாழ வாழ்துரைப்போம் .....

                                                  (   மனம் இனிக்கப் )                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.