12/29/2012

2013 ராசிப்பலன் உங்களுக்கு எப்படி


தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்
தூய உள்ளம் நிலைக்க வேண்டும்
பட்ட கஸ்ரம் நீங்க வேண்டும் அந்தப்
பகவான் அருள் கிட்ட வேண்டும் ........

விட்டத்திலே இருந்து செல்வம்
விடிய விடியக் கொட்ட வேண்டும்
ஸ்ரத்துக்கு நீங்க எல்லாம்
இனிய வாழ்வு வாழ வேண்டும்

அன்பு எங்கும் நிலைக்க வேண்டும்
அடிமைத்தனம் அகல வேண்டும்
ஆயுள் பலம் பெருக வேண்டும்
மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்

நொந்த உள்ளம் சிரிக்க வேண்டும்
நோய் நொடிகள்  அகல வேண்டும்
பாலை வானத்திலும் பூ பூக்க வேண்டும்
பசுமையான உலகம் மலர வேண்டும்

சொந்த பந்தம் இணைய வேண்டும்
சோகங்களை மறக்க வேண்டும்
சண்டை எங்கும் ஒழிய வேண்டும்
சமத்துவம் எதிலும் நிலைக்க வேண்டும்

பக்தி மிகையாய் இருக்க வேண்டும்
பாரினில் நீதி தழைக்க வேண்டும்
அறிவு திடமாய் இருக்க வேண்டும்
பேராற்றலால் வெற்றி நிட்சயம் கிட்ட வேண்டும்....

இத்தனையும் எனது ஆசை இதற்கு  மேலும்
நல்லது நடந்தால் சொல்லுங்கள் உறவுகளே !.....:))))

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/18/2012

கொட்டும் முரசொலி கொட்டும்


கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும்   தாளம் தட்டும்!.
கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும் தாளம் தட்டும்!....

அந்தக் காலம் வரும் நேரம்
எந்தன் யீவன் இங்கே காத்திருக்கும்.....

                               (கொட்டும் முரசொலி ....)
மொட்டும் மலராகும்
தேய் பிறையும் முழு நிலவாகும்
நாம் கற்கும் தமிழ் என்றும்
இன்பம் பொங்கும் தேன் மழையாகும்

விட்டுக் கொடுப்பேனோ
என் தாயே உன்னை  நானும்
மட்டுப் படுத்தாமல் தினம்
மலை போல் இங்கு வளர்ப்பேனே !......

                                    (  கொட்டும் முரசொலி )

விட்டுப் பிரிந்தோமே எம்
தாயே உன் தேகம் !...........
கட்டுக்கடங்காமல் வரும்
துயர் என்றும் எம்மை வாட்டும்

முத்துத் தமிழ் மொழிபோல் இங்கு
மொழியே இல்லை என்பேன் !................
உன்னைக் கற்றுத் தருவோர் முன்
அன்பாய்க் காலில் நான் விழுவேனே

                                           (  கொட்டும் முரசொலி )
சுற்றிக் கடல் நடுவில் ஓர்
சொர்க்கம் என்   தாய் நீதானே !...
உன்னைக் கட்டித் தழுவாமல்
கரு முகில் போல் ஆனேனே !.......

கொட்டும் பனி மலையில் வாடும்
சிட்டுக் குருவி என் சோகம் அது
விட்டுப் பிரியாமல் தினம்
வாட்டும் போதெல்லாம் எந்தன்
உயிரில் எழுதிடும் பாடல் கேட்டு

                                                   (  கொட்டும் முரசொலி ) 

                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2012

முற்றுப் புள்ளியே ......



முற்றுப் புள்ளியே!- அடி
முற்றுப் புள்ளியே உன்னை 
முத்தமிட்ட குற்றத்துக்கு 
இந்தக் கதியா?

கட்டில் சுகமும் இனி 
மெத்தக் கசக்கும் நீ 
கற்றுத் தந்த பாடம் அது 
நெஞ்சில்க்  கிடக்கு 

                  (முற்றுப் புள்ளியே..)

விட்டில்ப் பூச்சி போல் 
உன்னைச் சுற்றி வந்தேனே 
நீயும் வெக்கப் பட்டு நிற்பது போல் 
என்னைச்  சுட்டெரித்தாயே!

உன் பட்டு உடல் மேல் 
என்றும் மோகம் இல்லடி என்
அன்பைப் பட்டியல் இட்டால் 
இங்கு யாவும் பொய்யடி...

கற்றுத் தரவா? நீ என் உயிர்க் 
காதல் தீபம் அல்லவா!
உன்னை விட்டுப் பிரிந்தால் 
இங்கு வாழ்க்கை ஏதடி!

வெண்ணிலவே  உன் நினைவில்  
நானிருக்கும் போதினிலே 
பொன் பொருளை நாடவில்லை
உன் அன்பை மட்டும் தேடுகின்றேன்

பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !....
பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !...........

மண்ணுக்குள்ளே போகும் முன்பே 
என்னைக் காண வா வா ...
                                (முற்றுப் புள்ளியே..)                     


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/12/2012

பாரதியார் பாடல்கள் தந்த துணிவே என் கவிதைகள்



"பாரதி "என்றொரு வரி உன்
பெயரதை எழுதினால் போதும் 
மீதியை நான் உரைப்பான் ஏன்!..
ஒவ்வொரு வீதியும் உன் கதை சொல்லும்!....

நீதியை நிலை நாட்டிட எங்கும் 
நீ தீயென வலம் வந்தாய் !........
எம் ஆருயிர் உள்ள வரைக்கும் 
யார் இதை இங்கு மறப்பார் !!!!.....

சாதிகள் இரண்டென உரைத்தாய் 
அவரவர் சங்கடம் தீர்த்திட விரைந்தாய் 
உன் பாவினால் நன்மைகள் புரிந்தாய் 
எப் பாமரரும்  மனம் குளிர நீ வளர்ந்தாய்!.....

பூமகள் பாதம் பணிந்திடும் பக்தன் 
உன் ஞாபகம் ஒன்றே போதும் 
இங்கு தேன் மழை போல் சந்தம் 
எம் நாவினிலும் வந்து நின்றாடும் !....

நான் வணங்கிடும் பாரதியே ........
நீ மலர்ந்த பொன்னாள் அதனில் தான்  
வீரமும் விவேகமும் மலர்ந்தது என்று 
நான்முகன் இங்கொரு காரணம் சொல்லானோ!!.... 

பாவலர் உள்ளத்தின் படிக்கட்டு 
நீ இல்லையேல் எமக்கேது புது மெட்டு
நான் வரைந்தது கவிதை என்றால் இதையும் 
நீ கொடுத்ததன் துணிவுதான்  என்பேன் !!!!!.............

வா மகனே வா என்று உன்னை இங்கு 
வாரியே அணைத்திடத்  தமிழ்த் தாய் இன்றும் 
பூமியில் தவமாய்த் தவம் இருக்கின்றாள் 
பிறந்து வா நீயும் எம்முடன் நிரந்தரமாய் வாழ!!!!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12-12-12-ரஜனி - பிறந்த நாளும் ஓர் அற்புதம்!!.....



திக்கெட்டும் வாழ்த்தொலிகள் இன்று
திகைத்துத்தான் போகிறது மனம்........!!
பக்கத்திலும் நெருங்க முடியாத புகழின்  உச்சி
எது இருந்தும் பரவசம் கொள்ளாத ரஜனி!!!!.....

ஆக்கத்தில் சிறந்த மனிதன் அவன்
தூக்கத்திலும் ஓர் ஏக்கம் இருக்கும்
பார்க்கின்ற கண்கள் பரவசம் கொள்ள
பரந்த வெளியில் சிறந்த வழியில்
அடைந்த புகழ் இது!!!!...

மாற்றங்கள் நூறு வந்தாலும் இங்கு
மாறாத உன் புகழைப் போற்றுவோர்
போற்றாது போவாரா  சொல் இப் பூவுலகில்
நீ பிறந்த நாள் அதுவும் புதுமையானதே!!!!....

வியந்து பார்க்க நடிப்பில்  திறனை
விளையாட்டாக செய்து முடிக்கும்
நடிகன் உனக்கு ரசிகர்கள் பல கோடி இருந்தும்
எந்த மயக்கமும் அற்றதே உன் மனதின் எல்லை!!!!....

என் வாழ்த்துக்குக்  காரணமும் இது ஒன்றே
உன்னை வாழ வைக்கும் இறைவனுக்கும்
நன்றி சொல்வேன் இன்பத் தமிழில் என்றும் பேசி
எங்கள் மனதைக் கொள்ளையடிப்பவனே !....

எந்த நோயும் உந்தன் அருகில்
வந்து துயர் தந்திடாது
முந்தும் நூறு வயசை உன் உடல்
முழு சுகம் பெற்றிட வேண்டும் .....


அன்பினாலும் நற் பண்பினாலும்
உயர்ந்து நிற்கும் நடிப்பின் சிகரம் உனக்கு
எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/10/2012

swiss lotto விழுந்தால் எப்படி இருக்கும்.....


ஐந்து கோடியும் வேண்டாம் அம்மா
பத்துக் கோடியும் வேண்டாம் அம்மா
ஒரு கோடி வீழ்ந்தால் போதும் இந்த
உலகில் உன்னை நான் மறவேன்!!!....

தொண்டு செய்து காலம் கழிப்பேன்
துலங்க வைத்து உன்னை ரசிப்பேன்
கஞ்சி ஊத்தி மனம் குளிர வைப்பேன் என்
காலமெல்லாம் உன்னை நினைத்திருப்பேன்!....

என்ன ஒரு வேண்டுதல் !!!!................
இவர்கள்  போல் பலர் எங்குமே  உள்ளார்
சொந்த நலன் கருதித் தினமும்
கேட்க்கும் வரம்  நிறைவேறுமா !!!!!.......

கொடுத்தால் அது சாமி என்பார்
கூட இருந்தும் பாட்டுப் படிப்பார்
அடுத்தவர் நலனை நினைக்காதவர்க்கு
ஆண்டவன் மீதும் ஆத்திரம் இருக்கும்!....

பாத்திரம் அறிந்து பிச்சை இடவும்
படைத்தவன் அவனுக்கு நன்கு தெரியும்
பல சாத்திரம் கற்று முடித்தவராயினும்
பக்குவம் இழந்தவர் ஏதும் அற்றவரே!!!!....

உட் பொருள் அறியாத் தத்துவம் போல்
உலகினில் தெய்வம் இருந்தாலும்
அதன் அற்புத சக்தி வேறாகும் அதை
அறிந்தவர் உள்ளம் வெண் மதியாகும்!!!!!......

நிற்பதும் நடப்பதும் அவன் செயல் என
நினையா மனதுடன் போட்டி என்ன!!!!! .....
எப்பொழுதும் எமைக் காத்திட வல்ல
இறைவன் இருக்கின்றான்  என வணங்கு!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/09/2012

காசு காசு காசு எங்க இருந்து அள்ளுறதாம்!....


உறைபனியில் உணர்வுகளைத் துறந்து தினமும்
மனிதரல்ல இயந்திரம்போல் உழைத்தும் என்ன
வரும் துயரை நீக்க ஒரு வழியில்லாமல் இங்கே
வருந்துகின்ற நாதியற்ற அகதிகள் எமக்கு !!!!.......

நடு நடுங்க உடல் விறைக்க இன்னுமொரு
நரகலோக வாழ்வும் உண்டோ இதைவிடவும்!!!!....
விரல்களுக்குள் ஊசிகளால் குத்துவது போல் இந்த
வேதனைகள் தாங்கி நிற்க முடியவில்லையே !...

செலவழித்து உடை வாங்கிப் போட்டுக்கொள்ளவும்
சீரழிந்த தமிழனுக்கு வேறு வழியும் உண்டோ....
உறவுகளின் கண்ணீரைப் பார்த்துப் பார்த்தே
உழைத்த பணம் உண்டியலைத் துடைத்துச் செல்லும் போது!..

விரகம் என்ன தாபம் என்ன எல்லாம் போய்விடும் 
மன விரக்தி மட்டும் நெஞ்சுக்குள்ளே நின்றாடிடும்
உலர்ந்த தரை உணர்சிகளைக் காட்டக் கொஞ்சம் இங்கே
உனக்கும் சுடும் என்ன செய்ய வாழ்க்கை இதுதான்!....

பரந்த கடல் தாண்டி வந்து அப் பாவிகளாய்
பர பரப்பில் மூழ்கும் இந்த நாடுகளில்
தின(மு)ம் குறித்த நேரம் அதற்குள் வேலைத்தளம்
செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என அவதியுறுவர்!...

இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.....

உழைத்த பணம் வில்லுக் கட்டச் சரியாய்ப் போகுது
இந்த ஊருக்குள்ளும் கள்ளப் புத்தி உள்ளோர் வாழ்கிறார்!...
பொதுப்படையாய்ப் பார்க்கும் போது உண்மை புரியாது
புறப்பட்டு வா உன் புலனைத் திருத்திச் செல்லலாம்!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/04/2012

பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்....


பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்
தேன் துளி விட்டுச் செல்லும் தேனீக்கள்
யார் இதை அழித்திட நினைத்தாரோ ...அந்த
வாசகர் நெஞ்சம் என்றும் வீண்தானே !...........

காகித ஓடம் நான் தொடுத்தேன் அம்மா......
கங்கையில் கண்ணீரைச் சேர்த்து விட்டேன்
பூமகள் பாதம் சேர்ந்திட வேண்டும்
புண்ணிய நதியே வந்துதவு!!! .................¨

                             ( பா மரம் பட்டுப் போகும் )
நீதியின் கண்கள் மூடியதாலே
நெஞ்சினில் தீப்பொறி பட்டதென்ன .....
பாவிகள் போகும் பாதையில் மட்டும்
சிலர் பாரிய முட்களை நட்டதென்ன !!!....

கோவிலில் இருக்கும் சிற்பத்தை எவரும்
தெருக் கோடியில் போட்டு உடைப்பாரா .....
கேள்விகள் எழுந்தால் கேலியாய்ப் பதிலைக்
கேட்பவர்க்கெல்லாம் உரைப்பாரோ !....

ஆயிரம் ஆயிரம் வேதனை  நெஞ்சினில்
யார் இதன் காரணம் அறிவாரோ .............
கூவிடும் குயிலின் குரவளை அதனில்
இனியும் கூரிய கத்தியை வைப்பாரோ !!!......

                           (   பா மரம் பட்டுப் போகும் ....)

நீதியே  கண்களை நீ  திறவாயோ ........
நீ மழையாய் இங்கு பொழியாயோ ...
ஓர் துளி ஈரம் பட்டாலும் போதும்
உள்ளத்தில் அமைதி தங்கிவிடும்

பாரினில் துயரம் பெருகிடும் பொழுதில்
பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்
தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
தீந்தமிழோடெம்மை  வாழ விடு ........

                        (   பா மரம் பட்டுப் போகும் ....)


                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.