பழைய நினைப்புத்தான் மாமா
எனக்கு பழைய நினைப்புத்தான்
பாட்டி சொன்ன கதையைக்கூட
நான் இன்னும் மறக்கவே இல்ல!....
வலைய விரிக்குற நீயோ எனக்கு
வலைய விரிக்குற.....................!!!!¨
வயசுப்பெண்ணா நினைச்சுக்கிட்டு
றொம்பத்தான் வலைய விரிக்குற!.....
சின்னவயசில திருமணம்தான்
செஞ்சுக்கலாமா மாமா செஞ்சுக்கலாமா..
அப்புறம் சிக்கல்வந்து பிரிஞ்சுப்புட்டா
மனசு தாங்குமா மாமா மனசு தாங்குமா.......
கல்விக்கூடம் செல்லும் வயசில்
கர்ப்பம்தாங்கினால் நானும்
களத்துமேட்டில் உன்னுடன்தான்
காலம் தள்ளனும் மாமா காலம்தள்ளணும்
என்ன இந்த உலகத்திலே இருக்குதென்றேதான்
ஏறெடுத்தும் பார்க்காத வாழ்க்கை வாழணும்
இதனால் நம் சந்ததிகள் அத்தனையும் சங்கடப்படும்
இந்த சனத்தொகையைப் பெருக்கிக்கிடா போதுமா மாமா..
பாரதியின் புதுமைப் பெண் பாட்டிலேதானா
மாமா வெறும் பாட்டிலேதானா!...... உனக்கும்
பக்குவமா சொன்னா இதக் கேட்டுக்கோ மாமா
அட நீயாவது இதைக் கேட்டுக்கோ மாமா.........!!!
வயிறுமட்டும் நிறஞ்சால் இங்கே போதுமா மாமா...
நாம் வந்ததற்கும் ஒண்ணு ரெண்டு கத்துக்கலாமே
அறிவுப்பசி எடுத்து நானும் ஓடுகின்றபோ நீயோ
அதன் நடுவில் வந்து நின்று வலையை விரிக்குறாய்.....!!!
கருவிபோல வாழ எனக்கு இஸ்ரமே இல்ல
மாமா எதில் எனக்கு இஸ்ரமே இல்லை.............//
இந்தக் கஸ்ரம் நஸ்ரம் புரிசுக்காம நீதான்
வலைய விரிக்குற எனக்கு இங்க வலைய விரிக்குற...!!!
சொந்தம் பந்தம் பாத்துக்கிட்டா போதுமா மாமா உனக்கு
அந்த சொத்துப்பத்து வேணுமுன்னா நீயே வச்சுக்கோ மாமா
தூத்துக்குடி பட்டினத்தில் நானும் கல்வி பயிலனும் அந்த
துறைமுகத்தில் என்னை நீயும் இறக்கிவிடு மாமா.........:)