5/26/2013

மறக்க முடியாத நினைவு


மறக்க முடியாத நினைவு இதை
மறந்து தானாக வேண்டும்
பிரிக்க முடியாத உறவு இதைப்
பிரிந்து தானாக வேண்டும் என
எடுக்கும் முடிவால்
இதயம் வலிக்கும்
இதையும் அறிவார் யாரோ!
பொருள் கொடுத்து வாங்கு
பணம் கொடுத்து வாங்கு என்றும்
உயிரை வாங்காதே!

                         ( மறக்க முடியாத நினைவு..)

மனதின் நினைவை
அழிக்கும் போது
மலர்கள் தாங்காது!
உயிர் துடிக்கும் துடிப்பில்
உனது நினைப்பும் பெருகும் ஓயாது!

அழுது புலம்பும்
இதயம் அதற்க்கு
அமைதி இருக்காது
அது எடுக்கும் முடிவில்
துயரம் இருக்கும்
எதையும் நினைக்காது !

                        ( மறக்க முடியாத நினைவு)
கடலின் ஆழம்
உனக்குத் தெரியும்
உன் கணக்குப் பிழைக்காது!
அட இவளின் மனதை உணரத் தெரிந்தால்
இதுவும் நடக்காது!

உயிர் உயிரை வதைக்கும்
கொடிய நோயே
காதல் தான் இங்கே
இந்த விதியின் சதியை
உலகம் உணர்ந்தால்
மோதல் ஏனிங்கே ?
                             
                       ( மறக்க முடியாத நினைவு)
                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/19/2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா !


மலரிலும் மெல்லிய
மனமிது தழைத்திட
நற் குணநலன் பெற்றிங்கு என்
குலமகள் வாழ்ந்திட
கலைகளைப் பயின்றிட நற்
கடமைகள் புரிந்திட
அறிவுசார் செல்வமும்
அன்பொடு தன்னடக்கமும்
தெளிவுறப் பெற்ற ஞானமும்
சிந்தையில் நல்லுணர்வும்
தித்திக்கும் வாழ்வதனில்
திசை எட்டும் போற்றும் வண்ணம்
எத்திக்கிலும் இடரின்றி


இவள் வாழ்வு நலன் பெறவே
வாழ்த்துங்கள் உறவுகளே
அந்த வாழ்த்தொன்றே போதுமிங்கே !!தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.