10/10/2011

மீனாட்சி அருளாலே .......

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

வாராயோ மகமாயி ...........
வந்து குறை தீராயோ மகமாயி 
நாம் ஏறாத மலையில்லை
இனி எங்களுக்கோர் துணை இல்லை ...

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

ஆறோடும் வீதி எங்கும் 
அடி ஆத்தாடி உன் முகத்தை 
நாள்தோறும் தேடுகின்றோம் 
நமக்கொரு நல்ல வழி காட்டாயோ .....

பௌர்ணமி தினத்தின்று உனக்கொரு 
பட்டுடுத்திப் பார்க்கவென்று 
பச்சை இலைபோல் மனமும் இங்கே 
உன் பக்க துணை தேடுதடி .............

நட்ட நடு ராத்திரியில் 
நல்ல சோதி ஆனவளே............
எட்டி அடி வைத்து இங்கே 
எழுந்தருளி வாருமம்மா ...........

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/06/2011

வடபழனி அம்மன் ஆலயம் ...........

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
மனம் தொழுதே தினம் தொழுதே....
அவள் மகிமைகளைச் சொல்லிடவா...
இறைவனில்லை இறைவனில்லை 
என்றவரும் தொழுதனரே ...............

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

சிலையென இருப்பவள் நிஜ அம்மனென்றோ..
எம் சிந்தையை மயக்கிடும் செல்வியன்றோ 
அழுபவர் விழிகளைத் துடைக்கின்றாள்
நல் ஆறுதல் தந்து அணைக்கின்றாள்.....

அடியவர் கூட்டம் மனம் மகிழ்ந்து 
ஆடிடப் பாடிட நான் கண்டேன் 
சிறியவர் பெரியவர் முதற்கொண்டு 
தேவியின் பாதம் தொக்கண்டேன் 

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

என் கனவினில் நினைவினில் தாயவளின் 
கரம்தொடும் உணர்வினை நான் கண்டேன் 
ஒருமுறை கண்ட விழியிரண்டும் 
பலமுறை காணத் துடிப்பதென்ன ................

சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று 
சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில் 
ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/03/2011

உருகுது உருகுது மனமிங்கே.........

உருகுது உருகுது மனமிங்கே 
வெள்ளிப் பனி போல
நனையுது நனையுது விழி இங்கே 
உன்னால்த்தான் அன்பே! 
அன்னைபோலே வந்தவளே 
அன்புருவாய் நின்றவளே 
என்னைவிட்டு எங்கு சென்றாய் 
என்னருகே வந்துவிடு 

.................................(உருகுது உருகுது .....)

சோலைக் குயில் பாடவில்லை 
 சொந்தங்களும் தூங்கவில்லை 
காலைமுதல் மாலைவரைக் 
கண்கள் இங்கே மூடவில்லை 
ஆலை இட்ட செங்கரும்பாய் 
ஆனதெடி என் மனசு


எண்திசையும் சுற்றி வந்தேன் 
எங்குமில்லை உன்னுருவம் 
வெண்ணிலவைத் தூதுவிட்டேன் 
வீதி எங்கும் தேடவிட்டேன் 
செண்பகமே செண்பகமே ஒரு 
சேதி சொல்லு காற்றிடத்தில்....


.................................................(உருகுது உருகுது ...)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.