6/08/2011

மனம் உவந்து ஒரு வாழ்த்து.....

தங்கக் கலசம்
இத் திங்களின் முடிமேல்
என்றும் தங்கிட  வாழ்த்துங்கள்
இசையெனும் இன்பக் கடலில்
எங்கும் தவழ்ந்திடும் சீமான் 
இனிதே வாழ வாழ்த்துங்கள்....
தந்தை புகழையும்  இம் 
மைந்தன் காத்தான் என்றே 
நாமும் மனம் மகிழ்ந்திடும் 
எம் செந்தமிழ் கற்ற நாவினால் இவரை 
சிறப்புடன் வாழ வாழ்த்துங்கள்.......//
தித்திக்கும் குரலோசை  அதிலும்
தெளிந்த நற் தமிழோசை 
திக்கெட்டும் பரவச்செய்
சீர்காழி சிவசிதம்பரம் -என்றும்போல்
இன்றும் கலைவாணியின் அருள்பெற்று
நிலையான புகளின் உச்சியில் 
இவர் தந்தைபோல் என்றென்றும் வாழ
இன்றே வாழ்த்துங்கள்¨!......
வாழ்க வாழ்க பல்லாண்டு
நல் வளமும் ,நலனும் ,புகழும் பெற்று.....  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/06/2011

நாம் உங்கள் செல்வங்கள் !.......

அம்மா வயிற்றில்  கருவாய்  இருந்து
பாப்பா நாமும்  வந்தோமே!
சும்மா இருந்த முதுகில் இப்போ
சுமையைக் கொழுவி விட்டாரே!

பாப்பா நாமும்  பறவைகள்  போல
பறந்து திரிய நினைத்தோமே!
பத்துப் பாடமும் மனதில்  பதிய 
பகலும் இரவும் துறந்தோமே !

குத்தம் குறைகள் சொல்லும் அம்மா
கோலைக் கையில் எடுத்தாலே
பிஞ்சுக் குழந்தைகள்  எங்கள் உள்ளம்  
பதை பதைத்துப்  போகாதா !

பெற்றவர் அறியாப்  பிள்ளை மனதை
மற்றவர் அறிய  மாட்டாரே!
இந்தச்  சித்திரவதையைப் பெற்றே  ஆயினும்
சிறப்புப் பட்டம் தர  நினைப்பான் ஏன்!

கற்றவர்மட்டும் வாழும் உலகினில்
இனி மற்றவர் வாழக் கூடாதா!
சுய புத்தியை வளர்த்திடும் வாழ்க்கைக்
கல்வி சுகமாய் இருக்கக் கூடாதா!

நித்தமும் எங்கள் கனவினில்கூட 
புத்தகம் வருவது முறைதானா!
இத்தனை சிறிய வயதினில் எம்மை 
இறுக்கிப் பிடிப்பது சரிதானா !

பெத்தவர் (கள்)கூட பகைவர்கள் போல
முறைத்துப் பார்ப்பது முறைதானா!
இதனால் மொத்தமாய் எங்கள்
மழலைப் பருவம் புத்தகப்பூச்சி ஆனதுவே!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.