கண்ணீர் விட்டும் கலங்கி நின்றோம் கண்ணே பாரம்மா...
கண்ணே பாரம்மா.... கண்ணகித் தாயம்மா....
கண்ணே பாரம்மா.... கண்ணகித் தாயம்மா....
(அம்மா அம்மா கண்ணகியம்மா)
கருமாரி உருமாறி கவலைகள் தீர்ப்பவள் நீ..........
கண்கொண்ட்டும் காணோமே கல்லாயானாயோ....
கஸ்ரம் தீர்ப்பாயோ.... எம் கவலைகள் பார்ப்பாயோ....
கண்ணகித் தாயம்மா..... எம் கண்ணே நீயம்மா.....
(அம்மா அம்மா கண்ணகியம்மா)
விரித்த சடைமுடி தொடுத்து முடிக்கும் முன் எடுத்த சபதம் முடித்தவளே.
தரை நடுங்க நடு கடல் எழும்ப நடனம் ஆடி மதுரையை எரித்தவளே ..
சங்கு சக்கரம் அம்பும்,வில்லும் சகலதும் தாங்கியே விழிகளிலே...
அன்பு பெரிதென ஆர்ப்பரித்து மனம் அகிலம் நடுங்க நின்றவளே...
காப்பிய நாயகியே...... கண்ணகித் தாயம்மா........
போற்றியே தொளுதேற்றும்....பக்த்தர்கள் குறை தீர்ப்பாய்.....
(அம்மா அம்மா கண்ணகியம்மா)
தினம் தோறும்.... சுமை தாங்கும்.... உள்ளம் சருகாகும்....
உன்னை நாளும்... துதித்தேதான்... எண்ணம் நிறைவேறும்
எமதெண்ணம் நிறைவேறும்........
(அம்மா அம்மா கண்ணகியம்மா)