4/30/2015

மே தினமே வா அருகே !

                                             


நாட்டு மக்கள் நலமாய் வாழ
                         நடத்தும் யுத்தத்தில்
கூட்டுச் சேர்ந்து உதவ வேண்டும்
                         குழப்பம் தானின்றி !
காட்டில்  குள்ள நரிக ளோடும் 
                          கடந்த காலத்தில்  
போட்ட யுத்தம் அடைந்த வெற்றி
                        பொலியச்  செய்..நாளே !

கால மெல்லாம் உழைக்கும் மக்கள்
                          கவலை கொள்கின்றார் !
ஆல கால விசத்தைப் போன்றோர்
                           அடக்கி ஆள்கின்றார் !
ஓல மிட்டும்  எமது வம்சம்
                            ஒடுங்கிப் போகாமல்
பாலம் போல இருந்து காப்பாய்
                             படரும்  பொன்நாளே !

பாரில் மக்கள் அடையும் துக்கம்
                          பலதைக் காண்கின்றோம் !
நேரில் நின்று எதிர்த்துக் கேட்டும்
                         நெருப்பைத் தான்தின்றோம்!
தேரில் செல்லும்  பலரும் இங்கே
                          தெளிவாய்க்  கற்றுள்ளார் ! 
ஊரில் உள்ள உழைக்கும் மக்கள்
                           உணர்வைத் தான்கொல்ல !

பஞ்சம் மட்டும் மடிந்தால் போதும்
                                பலத்த சந்தோசம்
நெஞ்சில் வந்து உறையும் மக்கள்
                                நெடுநாள் ஆசைபோல்!
கொஞ்சம் இந்தக் கவலை தீர
                                கொடுத்து வை..நாளே !
அஞ்சும் மக்கள் அவலம் தீர்க்க
                               அருண்ட பொன்நாளே !

குட்டக் குட்ட குனிந்த மக்கள்
                             குலத்தை அந்நாளில்
எட்டுத் திக்கும் நிமிர்ந்து பார்க்க
                              எழுச்சி தந்தாயே !
பொட்டும் பூவும் சுமந்த பெண்போல்
                             பொழுதே நீ..வந்தால்
வெட்டும் கொத்தும் மடிந்து மண்ணில்
                             வெளிச்சம் தோன்றாதோ !

அன்று மக்கள் அவலம் தீர்த்த
                              அழகு நன்நாளே !
இன்று உள்ள நிலைமை கண்டும்
                              இளகு பொன்நாளே !
தொன்று தொட்டு நரக வாழ்வைத்
                              தொடரச்   செய்வோரை
என்றும் போற்றும் இனிய மேய்போல் 
                               எதிர்த்தும் வெல்வோமே !


      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

 1. சோகம் சொட்ட ஏக்கம் நிறைந்த வரிகள்! வருமே விடிவும் ஒருநாள்!

  ReplyDelete
 2. பொன்னாள் பிறக்கட்டும்... பிறக்கும்...

  ReplyDelete
 3. எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள் மே தினத்தில். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை நேரத்தை ஆதிக்க சக்திகள் சீர்குலைக்க முயற்சி செய்வது கண்டனத்திற்கு உரியது !

  ReplyDelete
 5. விடியல் விரைவில் மலரும்... கவிதை அருமையாக இருக்கிறது சகோ.

  தம 5

  ReplyDelete
 6. "பொட்டும் பூவும் சுமந்த பெண்போல்
  பொழுதே நீ..வந்தால்
  வெட்டும் கொத்தும் மடிந்து மண்ணில்
  வெளிச்சம் தோன்றாதோ!" என்பதே
  இன்றைய தேவையும் கூட

  ReplyDelete
 7. வணக்கம்
  அம்மா
  கவிதை மிக அருமையாக உள்ளது
  இனிய மே தின வாழ்த்துக்கள். த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. மேதின வாழ்த்தை மெருகூட்டும் நல்விருத்தம்
  ஓதி மகிழ்ந்தேன் உளத்து !

  வலையுலக நட்புகள் அனைவருக்கும் இனிய மேதின நல்வாழ்த்துக்கள்
  தங்கள் ஆழாமான கருத்துள்ள விருத்தத்தில் அகமகிழ்ந்து நிற்கின்றேன் சகோ அருமை அருமை தொடர இனிய வாழ்த்து !
  தம 18

  ReplyDelete
 9. உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையை உணரவைத்த நாள் அல்லவா ? அருமைக் கவிதை

  ReplyDelete
 10. அருமை! மேதின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அருமையான கவிதை வாழ்த்துகள்
  தமிழ் மணம் 10

  ReplyDelete
 12. உழைக்கும் வர்கத்தினருக்கு அவர்களைப் போற்றும் விதத்தில் கருத்துள்ள அருமையான ஒரு கவிதை!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........