1/04/2014

வில்லேந்தும் விழியிரண்டில் மொழிப் பயிற்சி தான் எதற்குவில்லேந்தும் விழியிரண்டில்
மொழிப் பயிற்சிதான் எதற்கு!
கல்லாரும் கற்றவரும்
கண்டு மயங்கும் பேரழகே!

முல்லைப் பூச் சூடி விட்டேன் என்
முன் அமர்ந்த பாவை உன்னைக்
கண்ணுக்குள் வைத்த நொடி
காதல் நெஞ்சில் பொங்குதடி!

நாணத்தை விட்டுத் தள்ளு
நாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு
கானத்தை இசைக்கும் குயில் முன்
களியாட்டம் ஆடும் மயிலே!

ஊரெல்லாம் உன் பேச்சு
உனக்குள் தான் என் மூச்சு
காதோரம் சொல்வேன் கேள்
களிப்பான செய்தியொன்று

மாதவத்தால் வந்தவளே தேன்
மாங்கனி போல் சுவைப்பவளே
ஈருடலில் ஓருயிராய் நாம்
இணைந்திடத்தான் சம்மதமா ?....

ஓவியக் கவிதை (அம்பாளடியாள் )
வணக்கம் உறவுகளே ! 
இந்தக் கவிதையானது சென்ற வாரம் சகோதரரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் http://venkatnagaraj.blogspot.com/2013/12/6.html ஓவியக் கவிதை 
அழைப்பை ஏற்று நான் எழுதிய கவிதை .இதனைக் கண்டு ரசித்துப் 
பாராட்டியவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் என் மனமார்ந்த 
நன்றியினைத் தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .

                                                மிக்க நன்றி உறவுகளே !

                                     தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

24 comments:

 1. ஓவியக்கவிதை மிக அருமையான உவமைகள் கண்டு ரசித்தேன்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 2. வணக்கம்
  கவிதை படத்துக்குஅமைவாக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. ஆம் சகோதரியாரே, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்தில் தங்களின் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 4. ஓவியமும் அழகு..
  ஓவியக் கவிதையும் அழகு..
  கவித்துவமான வரிகள்!..

  ReplyDelete
 5. மாதவத்தால் வந்தவளே தேன்
  மாங்கனி போல் சுவைப்பவளே///ஆஹா.......அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 6. கானத்தை இசைக்கும் குயில் முன்
  களியாட்டம் ஆடும் மயிலாய் அழகான கவிதை ..! பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 7. என் அழைப்பினை ஏற்று கவிதை படைத்தமைக்கு மிக்க நன்றி அம்பாளடியாள். சிறப்பான கவிதை.

  ReplyDelete
 8. அகமகிழத் தந்த அருமையான கவிதை!
  அங்கும் வாழ்த்தினேன்! இங்கும் தொடர்ந்தேன்..

  இனிய வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete

 9. வணக்கம்!

  படத்திற்குப் பாப்படைத்த பண்புடைய அப்பாள்
  குடத்திற்குள் இட்டவிளக் கு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   குடத்தினில் இட்ட விளக்கையும் கொண்டாடும் அன்பிற்குத்
   தலை வணங்குகின்றேன் ஐயா !

   Delete
 10. //மாதவத்தால் வந்தவளே தேன்
  மாங்கனி போல் சுவைப்பவளே//

  அருமை அருமை. ....... அருமையோ அருமையான வரிகள். ;)))))

  ஆமாம்....... நான் என் பதிவினில் தங்களுக்கு இன்று மேங்கோ ஜூஸ் கொடுத்துள்ளேன். பருக வர ஏன் இந்த தாமதமோ? அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா என்னைப் பாராட்டுவதில் கூட எத்தனை பேரானந்தம் தங்களுக்கு !! ........மன்னிக்க வேண்டும் ஐயா இப்போது சுவிஸ் நாட்டில் விடுமுறை காலம் ஆதலால் ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் தான் :))அருமையான பகிர்வினைப் பார்த்தேன் வியந்தேன் ஆதலால் மேலும் மேலும் நன்றி சொல்லி மகிழ்கின்றேன் .மிக்க நன்றி ஐயா .

   Delete
 11. அழகான கவிதை
  சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 12. ஓவியக் கவிதை இனிமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. ஓவியத்திற்கேற்ற அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 14. ஓவியம் கண்டு வடித்த காவியம்
  வண்ணமயமாய் தோன்றிற்று

  அருமை தோழி மிக்க நன்றி ...! பாராட்டடுக்களும் வாழ்த்துக்களும்....!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........