5/31/2014

தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்



தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்
தவமாய் அவனை என்னுள் வைத்தேன் 
சேயைப் போற்றும் அப்பனை மறந்தவர் 
செழுமை உடையவரா? ..........

அன்னை கோவில் என்றால் 
அப்பன் தெய்வமடா !......
அந்தத் தெய்வம் இல்லை என்றால் 
நீயும் இல்லையடா !....

தாயைப் போற்றும் மனமே கொஞ்சம் 
தந்தையை நினையாயோ !-அந்தத் 
தந்தையின் காலடி சொர்க்கம் என்று 
சங்கதி சொல்லாயோ !......
                                        
அன்பை ஊட்டி வளர்த்தாள் அதனால்   
அம்மா தெய்வமடா ........
அந்தத் தெய்வமும் வாழ வழிகள் வகுத்த 
அப்பா பாவமடா ......

காலை இழந்ததும் கண்ணீர் சிந்துது 
காளை மாடிங்கே!- அந்தக் 
காளை மாட்டின் கவலைகள் எல்லாம் 
அதன்  கன்றுகள் தான் இங்கே !....

பத்தே மாசம் சுமந்தவள் எம்மை
பாதியில் மறந்து விட்டாள்  நான்
பாக்கியம் செய்தவள்  அதனால் அப்பனின்
பாசத்தில் வளர்ந்து விட்டேன்! ....

அம்மா அம்மா அம்மா தெய்வம் என்றால் போதாது
சிலர் அப்பனைக் கொஞ்சம் இப்படி நினைத்தால்
தப்பேயாகாது ...................

கொட்டும் மழையில் குடையாய் வந்தவன்
குல தெய்வம் தான் இங்கே!
அந்தக் குல தெய்வம் தந்த
அறிவைக் கொஞ்சம் பார் பார் பாரிங்கே !...

பட்டப் படிப்பு நாம்  படிக்க
பனியில் அவன் உறைந்தான்
தன் பாசம் எல்லாம் கொட்டிக் கொடுத்துத்
தனியாய் ஏன் இருந்தான் ?..........!

                                             (தாயைப் போலொரு....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

26 comments:

  1. // கருவறை ஒன்றுதான்
    இங்கு இல்லை
    இருந்திருந்தால்
    கல்லறை வரைக்கும்
    சுமந்திருப்பான் //

    இதற்குமேல் அப்பனைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? சிறப்பான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா .

      Delete
  2. தாயைப் போலொரு தந்தை
    சிறப்பு மிகு கவிதை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. தந்தையின் அன்பை மிக அழகாக எடுத்துரைத்தீர்கள் நன்று.

    ReplyDelete
  4. பாசத்தின் வெளிப்பாட்டைத் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் மனதில் நின்றது. நன்றி.

    ReplyDelete
  5. என்ன திடீர்ன்னு அப்பா துதி ?இன்று ஏதேனும் தந்தையர் தினமா ?
    த ம 3

    ReplyDelete
  6. வெளியில் தெரியாத மற்றொரு தாய்...

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் டிடி.

      Delete
  7. நெகிழ்ந்து விட்டேன்.
    அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தந்தையை போற்றும் அழகான கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. "அன்னை கோவில் என்றால்
    அப்பன் தெய்வமடா ......
    அந்தத் தெய்வம் இல்லை என்றால்
    நீயும் இல்லையடா...." என
    எழுதிய வரிகளின் உயிர்
    தந்தை என்று சொல்வோமடா!

    ReplyDelete
  10. என்னை பெருமைபடுத்தி எழுதிய கவிதை மிக மிக மிக அருமை.. பாராட்டுகள் & வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அம்பாளடியாளுக்கு இப்படி ஒரு அப்பாவா...?
      மகள் தன்னைப்பற்றி எழுதியதும் என்ன ஒரு சந்தோஷம்.....!!!!!

      Delete
    2. அப்பாவைப் பெருமை படுத்தும் அழகிய பாடல்...
      அருமை தோழி.
      த.ம. 7

      Delete
  11. படத்தோடு இணைந்து இருந்த கருத்து மிக அருமை தோழி..... உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

    ReplyDelete
  12. மிக மிக அற்புதமான கவிதை
    தாயின் தியாகம் போல
    தந்தையின் தியாகம் மிகச் சரியாகப்
    பதிவு செய்யப் படுவதில்லை
    அற்புதமான பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. என்ன அம்பாள் அப்பாக்கள் அனைவரும் செமை குஷியில் இருக்கிறார்கள். போல ம்.. ம்.. ம்..உண்மைதான் தோழி நான் பல தடவை எண்ணியுள்ளேன் இதை. அவர்கள் நமக்காக உழைத்து ஓடாய் தேய்பவர்கள். பத்து மாதம் சுமந்து விட்டு காலமெல்லாம் சொல்லிக்கொண்டு இருப்போம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சுமப்பவர்கள் அல்லவா. அவர்கள் தியாகம் பேசப்படுவதில்லை தான் நிச்சயமாக வேண்டிய கவிதை தான். நல்ல கவிதை தோழி! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  14. படத்தோடு இருக்கும் கருத்தே சொல்லி விடுகின்றது சகோதரி! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

    பெங்குவின் களில் கூட தாய் குஞ்சுகள் முட்டை இட்டததும் அதனது சத்து குறைவதால் கடலுக்குச்சென்று உணவு தேடச் செல்லும் முன் முட்டையை ஆண் பெங்க்குவினிடம் அடைகாக்கக் கொடுத்துவிட்டு கடலுக்குள் சென்றுவிடுமாம். ஆண் முட்டையை அடை காத்து குஞ்சு வெளிவரவும் தான் உணவு கூட உண்ணாது எடை குறைந்தாலும் அதைக் காத்து அம்மா திரும்ப வரும் வரை பட்டினி கிடந்து அம்ம வந்ததும் அதனிடம் ஒப்படைத்துவிட்டு தன் சத்துக் குறைவை நிறைவு செய்ய கடலுக்குச் சென்று விடுமாம்..பின்னர் அது திரும்பி குஞ்சைக் காக்கா இப்படி மாறி மாறி அம்மாவும், அப்பாவும் குஞ்சுகளை வளர்க்குமாம்......தங்கள் கவிதை இதையும் நினைவூட்டியது!

    ReplyDelete
  15. படத்திலே இருந்த வரிகள்... அப்படியே மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது......

    சிறப்பான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  16. அன்பான அப்பாவிற்கு கவிதை...அருமை...கண்களில் நீர் துளி...

    ReplyDelete
  17. To most, if not all, present day children, addicted to western culture, appa is never more than a dispensable commodity. A use and throw chinese toy.
    painful to read pathetic to swallow could be the feel under what u read, albeit this is what I see around.
    subbu thatha

    ReplyDelete
  18. ஒவ்வொரு பொண்ணக்கும் அப்பா தான் ஹீரோ:)
    அதை உணரும்விதமாய் இருக்கு உங்க கவிதை!
    படத்தில் போட்டிருக்கும் உங்க கவிதை என்னும் ஸ்பெஷல் ரூபிகா மேடம். வாழ்த்துகள்! அப்புறம் ஒரு த.ம :)

    ReplyDelete
  19. எப்போதும் அன்னையை போற்றுகிறோம் எப்போத்வாதாவது தந்தையைப் போற்றும் கவிதையும் வருவது ஆண்களுக்கு ஆறுதல்
    கவிதை அருமை

    ReplyDelete
  20. அருமையான கவிதை ... ரசித்து படித்தேன்...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........