2/13/2011

இதை நீ அறிவாயோ.......


மலர் விழி மூட மறுக்கிறதே
என் மனமுனைத் தேடி அலைகிறதே
தினம் ஒரு கவிதை வடிக்கிறதே
ன்னைத் தீண்டிட இன்பம் துடிக்கிறதே!

பொழுதுகள் விடியத்  தாமதம் ஏன்?
என் புன்னகை எங்கோ தொலைகிறதே
விடியலைத் தேடி விழிக்கையிலே
இதயம் பட பட என இங்கு அடிக்கிறதே!

அலைகடல்போல் மனம் மோதையிலே
அடிக்கடி துயரம் பெருகிறதே!
விதி அது உன்னைச் சேராமல்  தடுக்கிறதே! 
வாழ்க்கை விடுகதையாகத் தொடர்கிறதே! 

கனவிலும் நினைவிலும் உன் முகத்தைக்
கண்கள் கண்டிடப்  பலமுறை   உழல்கிறதே!
தொலைவினில் உன் முகம் தெரிகிறதே 
பேச்சுத் தொடுத்திட வார்த்தைகள் குறைகிறதே! 

என் மூச்சுக் காற்றே நீயெங்கே!-மனம் 
உன் நிலையதை  அறியத் துடிக்கிறதே!
காணாத பொழுதெல்லாம் 
காதல் கண்வழி நீராய்க்  கரைகிறதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1 comment:

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........