2/15/2011

பெண்ணே பேசு...

பள்ளிப் பருவத்திலே
புத்தகங்கள் சுமந்தாள்
பருவ  வயதினிலே 
கற்பனைகள் சுமந்தாள் 

கன்னியான  போது
கனவுகள் சுமந்தாள் 
கல்யாணம் ஆனதும் 
கருவினைச் சுமந்தாள் 

தாயுமான  போது தன் 
கடமையினைச் சுமந்தாள் 
தலை விதி மாறியதனால் 
தனக்குள் வேதனை சுமந்தாள் 

பெண்ணெனப் பிறந்ததனால் 
பழியினைச் சுமந்தாள் 
பெண் பேசாது இருந்ததனால் 
தனக்குத் தானே சுமையானாள்!    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

 1. பெண்ணெனப் பிறந்ததனால்
  பழியினைச் சுமக்கும்
  விதியினை மாற்றிடுவோம்.

  ReplyDelete
 2. பெண்ணே நீ பேசு !
  அறிவுடன் பேசு அழகுடன் பேசு
  அன்புடன் பேசு அளவுடன் பேசு
  ஆத்மதிருப்தியாய் பேசு
  அகம்கொண்ட சுமை அகலுமேயுனை !!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் .. பெண்களை சுமையென ஒரு உண்மையான ஆண் நினைக்க மாட்டான் :-)

  ReplyDelete
 4. மிக்க நன்றி கருத்திட்டமைக்கு....

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........