12/21/2010

கோவம்

                  
காந்தியும் கோவம் கொள்வார்
எங்கள்  கண்மணிகள்படும் துயரம் கேட்டால்  
ஏந்திய துப்பாக்கியைப் பின் இறக்கியும் வைக்கமாட்டார் 
நீதியைக் கொன்று நெடுந்துயர் பரப்பவல்ல 
சாதியை  ஏற்று இங்கே சாந்தமாய் இருப்பதற்குக் 
காந்தியும் ஏற்க்கமாட்டார்!
கருவறை கிழித்து ஆங்கே சிசுவையும்
பதம் பார்க்கும் அரக்கர்கள் முன்
புத்தரும் கோவம் கொள்வார்
புனித கர்த்தரும் கோவம் கொள்வார்
எம் பெண்ணினம்படும் சித்திரவதையை
நேரில் கண்டால் சித்தரும் கோவம் கொள்வார்
இராமனும் அவர் பக்தனும் கோவம் கொள்வார் 
யேனோ நாம்மட்டும் கோவம்கொண்டால்
நம் தலையைக் கேட்டார் அங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/17/2010

முடிச்சு


கரு அறைகள் கல்லறைகளாகி
கனிவு தரும் மனம் எரிமலையாகி
பெண்ணவள் இங்கே புதுயுகம் படைத்தால் 
ஆணே உன் ஆதிக்கம் எங்கே செல்லும்?

விடுதலையின் பாதையிலே 
வேங்கையென நிற்பவளும்பெண்ணே! 
வீரம்செறிந்த மண்ணினிலே 
மானம் ஒன்றே பெரிதென எண்ணி 
உன்னிடத்தில் மாண்டு கிடப்பவளும் பெண்ணே!

அவளைத் தீண்டிப்பெற்ற இன்பம் உனக்குப் பெரிது
அவள் தேடித்தந்த செல்வம் உனக்குப் பெரிது
அதனிலும் பெரிது தூண்டிக் கெடுப்பார் உறவு என்று
மாண்டு கிடக்கும் சில ஆண்களே!

நல்லவை,கெட்டவை தெரியாத உன் வாழ்வொடு
விதிவசத்தால் மாண்டோம் என்றொரு காரணத்தால்
மனிதரல்ல மனிதநேயம் அற்றவரெல்லாம் அறிவுரைக்க
மௌனமாக மனதொடு அழும் பிறவி!

உடலாலும் மனதாலும் ஒருபோதும் கெட்டிராத
உயிரொன்று தீயோர் வார்த்தைகளால்
தீ மூட்டிக் கூத்தாட பார்த்து ரசிப்பதுதான்
நீ போட்ட அந்த மூன்று முடிச்சுக்கு அர்த்தம் என்றால்

இதுதான் திருமணம் என்னும் உனது
ஐந்தெழுத்து மந்திரத்தின் தந்திரம் என்றால்
இதற்குத்தான் பெண்ணென்ற இயந்திரம் என்றால்
காணிக்கை எதற்கு? கன்னிக்குத் துணை எதற்கு?

மானம் கெட்டுப் போவதற்கா?
மூத்தோரே! பெண்ணைத் தானம் கொடுக்கும்
இடம் அறிந்து கொடுத்துவிடு இல்லை என்றால்
உன் பிள்ளை ஊனமென எண்ணி உன்னோடு நிறுத்திவிடு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/12/2010

யே ராசா ராசா.....

யே ராசா ராசா.....

யே  ராசா   ரசா.....
என்  நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும் 
என்னை  யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா  லேசா வந்து
என்னைத்  தொட்டு 
எங்கே  நீயும் போகிறாய்?
இது பருவம் தந்த காதல் மயக்கமோ?
உன்றன்  பார்வை என்றும்
என்னை  மயக்குமோ?
யே  ராசா  ராசா
யே ராசா  ராசா                                   
                                         (யே  ராசா ராசா.....) 
மின்னல்போலே
முன்னே வந்து
என்னைத்  தொட்டுச் 
செல்லும் உன்னைக் 
கண்ணுக்குள்ளே வைத்து
நானும் பார்க்கிறேன்
அட என்னென்னமோ  
செய்யச் சொல்லிக் கேட்கிறேன்

என்  நாணம் இங்கே 
விட்டுப் போச்சு
நாளும் தூக்கம்
கெட்டுப் போச்சு
நீயில்லாமல்
என்னன்னமோ ஆகிறேன்
அட  நீரில்லாமல்
நீச்சல் இங்கே போடுறேன்

...........................(யே  ராசா ராசா)

ஊருக்குள்ளே போகும் போது 
உன்னை மட்டும் தேடும் கண்கள் 
எங்கே எங்கே எங்கே என்று பார்க்குதே!
தினம் ஏக்கத்தாலே 
தூக்கம் கெட்டுப் போனதே
நீயும்  இன்றி நானும்  இல்லை 
நெஞ்ச்சுக்குள்ளே ஈரம் இல்லை 
என்  தாகம் தீர்க்கும் 
தண்ணி உன்னைத்    
தேடி நெஞ்சம் ஓடுதிங்கே

............................(யே  ராசா ராசா)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.