Showing posts with label சிறுவர் கவிதைகள். Show all posts
Showing posts with label சிறுவர் கவிதைகள். Show all posts

12/07/2011

வானம் கறுக்குது பார் ....


வானம் கறுக்குது பார் !
 வண்ண மயில் ஆடுது பார்! 
காற்று வீசுது பார்! 
கடலலைகள்  மோதுது பார்!


தவளை கத்துது பார்! 
தண்ணீர் சொட்டுது பார் !
மின்னல் மின்னுது பார்! 
மேகத்தில் இடி இடிக்க 
மழை வந்து கொட்டுது பார்!


தண்ணீர் பெருக்கெடுத்து 
தரை எங்கும் ஓடுது பார்! 
குப்பை கூளமெல்லாம் அதில் 
மிதந்து செல்வதைப் பார் !


முத்தன் வயலுக்கு 
வரப்பு கட்டி நிற்பதைப் பார்! 
அட்டை ஊருது பார்! 
நத்தை ஊருது பார்! 
பட்டுப் பூச்சி கொட்டுது பார் !


தம்பி குளிப்பதற்கும் 
அம்மா சமைப்பதற்கும் 
மண்ணில் உயிர் வாழ 
மரங்கள் செழிப்பதற்க்கும் 


உடுப்பு துவைப்பதற்கும் 
உண்டு களிப்பதற்கும் 
மண்ணில் மழை வேண்டி 
நீயும் மகிழ்ந்து துதி பாடு !                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/17/2011

கோமாதா பூஜை செய்வோம்.....

புல்லைத் தின்னும்
பசுவின் பாலை
பிள்ளை குடித்து வளருதடா!

இதில் உள்ள சத்து 
உடலைக் காத்து 
உயிரை வாழ வைக்குதடா! 

அன்னை போல 
எம்மைக் காக்கும் 
ஆவின் குணத்தை அறிந்தவர்கள் 

இன்றும் இதனை 
வணங்கி  இங்கே  
இதற்கும் பூஜை வைத்தனரே!

அன்னையர் தினம் போல்
இன்றயநாளை அனைவரும்
மகிழ்ந்து கொண்டாடி

இதன் ஆசிகள் பெற்று
ஆயுட் பலமும்
அமைதியுமுற்று வாழ்ந்தாரே!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/24/2011

வீட்டு மிருகங்கள்

குட்டி முயல் கூட்டுக்குள்
கொறித்துத் தின்னுது கரட்டைப் பார்!                      கொண்டைச் சேவல் கோழியுடன்
விதைகளைக் கொத்தித் தின்னும் குஞ்சுகள் பார்!

ஆட்டுக் குட்டியும் மாட்டுக் கன்றும் குழைகளை
அழகாய் மென்று தின்பதைப் பார்!
வாத்துக் கூட்டம் தண்ணிக்குள்ளே 
வடிவாய் மிதந்து செல்வதைப் பார்!

பூனைக் குட்டிகள் கூரைமேல் 
எலிக் குஞ்சைப் பிடிக்கத் தாவுது பார்! 
கொளுத்த பூனை அடுப்படியில் 
கொதித்த பாலையும் குடிக்குது பார்!

நாய்கள் போட்ட குட்டிகளுக்கு 
நல்லான் உணவு கொடுப்பதைப் பார்!
அவை வாங்கித் திண்ட சோற்றுக்கு 
வளமாய்க் காவல் காப்பதைப் பார்! 

பெட்டை நாயும் கடுவன் குட்டியும் 
புல்லைப் பித்தம் தெளியத் தின்னுது பார்! 
வண்ணக் கிளிகள் குஞ்சுகளுடனே 
வடிவாய்த் தொங்கும் கூட்டைப் பார்! 

அவை எண்ணம் போல மாம்பழத்தை 
இனிதே கொத்தித் தின்பதைப் பார்! 
வீட்டு மிருகம் இவைகள்தான் நாம் 
விரும்பி வளர்க்கும் செல்வங்கள் பார்!  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.