உறங்கும் போதும் உன் நாமம்
விழிக்கும் போதும் உன் நாமம்
எமக்குத் தெரிந்தது அதுவொன்றே
நாம் என்ன செய்வோம் இறைவா சொல் !..
மறக்க முயன்றால் முடியாது
மனதின் சுமைகளும் குறையாது
நாம் தொடுக்கும் காரியம் அத்தனையும்
துலங்கும் உன்றன் அருளாலே!...........
விரித்த சடை முடியோனே
நால் வேதமும் போற்றும் நாயகனே
துடிக்கும் மனமிதை அறிவாயோ
மேவிடும் துயர்களைப் போக்க வருவாயோ
சிவ சிவ சிவ என்று சிந்திப்போம்
சிந்தையில் நல்லதை நாம் நினைப்போம்
அவனருளாலே வரும் நன்மைகளை
அவனியில் என்றும் நாமடைவோம்
தேவர்கள் படும் துயர் தீர்த்தவனை
எம்மைத் தேடியே நன்மைகள் அருள்பவனை
எந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....