பூவொன்று மலர்ந்ததென்று ஒரு
பூந் தோட்டமே சிரிக்குது இங்கே
வாவென்று அழைத்து எம்மோடு
வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள் உறவுகளே !!
தங்கப் பாதம் தவண்டு வரத்
தரணி எங்கும் பூப் பூக்கும்
எங்கள் அரும்பு நலமாக
எல்லா வளமும் பெற வேண்டும் !
மங்காப் புகழும் கீர்த்தியும்
மரு மகளே உனக்கு அவள் அருள்வாள்!
பொங்கும் புன்னகை எந்நாளும்
பொலியப் பெற்ற சரஸ்வதியே !
அங்கம் ரோஜா இதழே தான் இதை
அன்பாய் அணைத்திட நாமுள்ளோம்
எந்தன் மருமகள் உன் வரவால்
எங்கள் வீடே சிரிக்கிறது .......
வண்ணக் கனவு மலர்ந்திங்கே
வசந்த வாசலைத் திறக்கிறது இனி
எம் எண்ணம் எல்லாம் நிறைந்திருக்கும்
எங்கள் வீட்டு எழில் அரசியே நீ வாழியவே........
இனிப்பான இதயத்தால்
இனியன சொல்லி வாழ்த்துங்கள் உறவுகளே !!
என்னை "அத்தை" என்று அழைத்திட ஒரு
செல்ல மருமகள் பிறந்திருக்கிறாள்
அவளை வாழ்த்த வந்த அன்பு நெஞ்சங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .......