1/11/2012

நீங்காத நினைவுகளோடு நானும்!...

கடல் கடந்து ஒரு பயணம் என் 
வலைத்தளம் என்னும் இந்தக்
கனவுலகை விட்டும் என்றும் 
கவி பாடும் இந்தக் குயிலுக்கும் 


உடன் பிறவாத உறவுகள்போல்
தினம்தோறும் உறவாடி என் 
வளர்ச்சிக்கு வித்திட்ட உங்களையும் 
அன்பு வாசகர்களையும் விட்டு 

சில மாதங்கள் பிரிய மனம் இன்றி 
ஓர் பிரியாவிடை உங்களில் 
ஒருத்தியான நான் இதோ அந்த
பிரியும் வேளை வந்துவிட்டது!.....


எங்கு சென்றாலும் மறவாது 
இதயத்தில் ஒரு புது ஊற்றாக 
ஓடோடி வந்தழைத்து என்னைக் 
கவி பாட வைத்த உங்கள் அன்பு  


நான் இல்லாது போனாலும் 
மீண்டும் திரும்பி இங்கு வந்தாலும் 
இந்நாளில் தொடர்வதுபோல் 
எந்நாளும் தொடர வேண்டியபடி 


சென்று வருகின்றேன் உறவுகளே 
நான் சென்று வருகின்றேன் தமிழ் 
இன்பக் காற்றாக உயிர் மூச்சாக 
என்றும் எங்கும் செழிப்புற வாழ்த்தியபடி!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

24 comments:

 1. அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் உறவுகளே ....

  ReplyDelete
 2. அடடா... உங்கள்மீது கூட வெறுப்புக் கொண்டு மைனஸ் ஓட்டுப் போட்டார்களா? ஆச்சரியம்தான். அழகுத் தமிழில் விடை பெற்றிருக்கிறீர்கள். மகிழ்வுடன் சென்று வாருங்கள். காத்திருப்போம் நண்பர்கள்! உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நான் இல்லாது போனாலும்
  மீண்டும் திரும்பி இங்கு வந்தாலும்
  இந்நாளில் தொடர்வதுபோல்
  எந்நாளும் தொடர வேண்டியபடி //

  உங்கள் வரவுக்கு காத்து இருப்போம்.
  திரும்பி வந்து அருமையாய் கவிதை மழை பொழிக!

  உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. உங்கள் வரவை எதிர் நோக்கும் சகோதரன் ,என்றும் எங்கள் நினைவுகள் உங்களுடன் கவி பாடும்
  கோவை சக்தி

  ReplyDelete
 5. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  ReplyDelete
 6. சீக்கிரம் திரும்பி வாருங்கள். மகிழ்ச்சியும்,மங்கலமும் உங்களதாகட்டும்.

  ReplyDelete
 7. கவிதை அருமை.இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete
 8. அழகான கவிதை உலகை விட்டு எங்க போரீங்க சீக்கிரமே திரும்ப வாங்க. காத்துகிட்டு இருக்கோம்.

  ReplyDelete
 9. விரைவில் மீண்டும் எழுத வாங்க...


  பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. We will miss you...மகிழ்வுடன் சென்று வாருங்கள்...வரவுக்கு காத்து இருப்போம்...பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. சென்று வருக சகோதரி
  வென்று வருக
  போகுமிடமெல்லாம் புகழ் மாலை சூடி விடுக.

  நீண்ட காலம் எடுக்காது விரைவில் பதிவுலகம் திரும்புங்கள்.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. //உடன் பிறவாத உறவுகள்போல்
  தினம்தோறும் உறவாடி என்
  வளர்ச்சிக்கு வித்திட்ட உங்களையும்
  அன்பு வாசகர்களையும் விட்டு //
  உண்மைதான் சகோ. உங்கள் ஆதங்கம் புரிகிறது. மீண்டு வாருங்கள்,முன்னெப்போதுமில்லா உத்வேகத்துடன்.

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. விரைவில் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 15. நிறைய எழுதும் உற்சாகத்தோடு திரும்பி வாருங்கள்! ஆவலோடு காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 16. கவி கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பே!
  விரைக! வருக! கவிதை
  தருக!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. அம்பாளடியாள் உங்களுக்கு என் பக்கம் ஒரு விருது கொடுத்திருக்கேன் வாங்க.

  ReplyDelete
 18. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்.

  http://kklogan.blogspot.com/2012/02/liebster-blog.html

  அன்புடன்
  கே.கே.லோகநாதன்

  ReplyDelete
 19. காத்துகிட்டு இருக்கோம்

  ReplyDelete
 20. அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

  ReplyDelete
 21. நீங்கள் திரும்பவும் வலைஉலகத்திற்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறோம், வழியோரம் விழி வைத்து...

  ReplyDelete
 22. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  http://tamil.dailylib.com

  To get vote button
  http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  ReplyDelete
 23. i linked this post to Tamil post

  Check it
  http://tamil.dailylib.com

  Thanks,
  Tamil post

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........