7/16/2013

பிறந்தநாள் வாழ்த்து எனக்கே எனக்கா :)


அழைத்த அழைப்பிதற்கு ஓடோடி வந்த
அன்பு நெஞ்சங்களே வருக வருக ..........
இன்பத்திலும் துன்பத்திலும் கலந்திருக்கும்
இணையற்ற வலைத்தள உறவுகளே வருக வருக....
                                                   
வகை வகையாய் உணவு செய்து
வற்றாத அன்பு கலந்து
நான் பிறந்த நாளிதனில்
நன்றி சொல்லவே காத்திருந்தேன்

தேன்கொளிக்கும் கருத்து மழையைத்
தேடி வந்து பொழிந்தவர்களே
நான் கொடுக்கும் விருந்திதனை
நாள் முழுதும் சுவைத்திடுவீர் :)))






மச்சம் உண்டு சைவம் உண்டு
மனதிற்கேற்ப வகையில் உண்டு
மிச்சமின்றி உண்டுடுவீர்
மிருதுவான மனம் படைத்தவர்களே ...

அச்சம் வேண்டாம் எண்ணெய்யில்லை
அளவு கடந்த கொளுப்பும்மில்லை
இன்றுமட்டும் எனக்காகவே
இயன்றவரைக்கும்  உண்டு களிப்பீர் .....
                                               

தேனும் பாலும் கலந்து நல்ல
தித்திக்கும் பலகாரமும் உண்டு
போகும் போதும் எடுத்துச் சென்றால்
புன்னகை பூக்கும் என் மனதினில் இன்று ....



பார்த்துப் பார்த்து வாங்கி வைத்த
பலவகை இனிப்பு வகைகளும் கொஞ்சம்
ஈற்றில் சிறுவர்கள் வீட்டினில் இருந்தால்
இதையும் எனக்காக எடுத்துச் செல்லுங்கள் :)


பாக்கு வெற்றிலை  போடும் பழக்கம்
இருந்தால் இதையும் எடுத்துக் கொள்ளுங்கள்
பழங்களுண்டு தண்ணியுமுண்டு
பழரசம் வேண்டுமா கேட்டு வாங்குங்கள் .....:))



குளிர்களி வேண்டுமா தேனீர் வேண்டுமா ?..
குடிக்கத் தண்ணி ஏதேனும் வேண்டுமா?...
பாட்டுத் தொடர்ந்து கேட்க்கப் பிடிக்குதா ?..
நாஞ்சில் மனோ அண்ணா பாட்டுப் பாடுங்க :)


வாழ்த்துச் சொல்ல வந்த உறவுகளே
வந்தவரைக்கும் நன்றி சொல்லுவேன்
கூட்டம் கலையும் நேரமிப்போ
கொண்டு வந்த பரிசைப் பார்ப்போம் !!:......


ஆஹா அத்தனையும் பாடலா !!!!....
தித்திக்கும் பாடல் நூறு
தெய்வீகக் கதைகள் பாரு !!!!...
எத்திக்கில் நான் சென்றாலுமே
எட்டாத பரிசு இது !!!!...........
                                                         


டிஸ்கி : கற்பனையிலேனும் இப்படியொரு விருந்துபசாரம்
                 செய்த திருப்தி எனக்கு :) சாப்பாடு எப்படி என்று இனி
                 உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் ?...............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/14/2013

என் தெய்வம் நேரில் வந்தாலே...



என் தெய்வம் நேரில் வந்தாலே
இன்பங்கள் பொங்கும் தன்னாலே
விதி போகும் பாதை ஓரம்
விடை தேடும் கானல் நீர் நான்

உனக்காகப் பாடும் பாடல்
உயிர் வாழும் வாழும் இங்கே
எனக்கே எனக்காய் பிறந்தவள் உன்னை
எங்கே காண்பேனோ ?

மலர் போன்ற பாதம் அம்மா அதை
மறவாது என் நெஞ்சம் அம்மா
நிலையாய் இங்கே நீ வந்தாலே
நின்மதி பெறுவேனே!

திருக்கோவில் சிற்பங்கூட
சிரிக்காமல் சிரிக்கும் போது
உனக்காக ஏங்கும் உள்ளம்
ஏன் ஊமையாகாது!
                                     
உருவத்தால் குமரி என்னை
உள்ளத்தால் குழந்தை என்பாய்- உன்றன்
மடியைத் தேடி அலையும் போது
மறைந்தே சென்றாய் ஏன்?

விடியாத இரவுக்குள்
விடை தேடும் பட்டாம் பூச்சி
முடியாது முடியாதென்று
முனங்கும் ஓசை கேட்கலியா?
                                             
                                        ( என் தெய்வம் நேரில்  )                                        
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/13/2013

பஞ்ச புராணங்களை நெஞ்சில் நிறுத்துங்கள்



அடியொத்தி வாழாத வாழ்வும் நன்றோ!!!..... 
நல்லடியார்கள் அருளிச்சென்ற பாக்கள் தன்னை
மனமொத்த வாழ்விற்கு மருந்தாகுமே அவை 
மறு ஜென்மம் எடுத்தாலும் விருந்தாகுமே 
திருஞான சம்பந்தர் அருளிச் செய்த 
தேவாரப் பதிகத்தை நாம் பாடிட 
இளகாத மனமும் தான் இளகுமிங்கே
இருள் சூழ்ந்த வானத்தில் நிலவைப் போல

ஒளியூட்டும் புராணங்கள் ஐந்தே வகை
இதை ஓதாதார் மனதிற்கே ஒல்கும் பகை
இறைஞான சக்திக்கு வித்தாய் நின்ற
அடியார் தம் அடியார்க்கும் அடியேன் நானே
வினை முற்றி நின்றாடும் வேளை தன்னில்  
ஊழ்வினையாலே வருகின்ற வலிகள் தீர
மனதாரப் பாடாத நாட்கள் இல்லை
மலர்கொன்றை அணிந்தவன் மீது ஆணையிதே

துதி பாடும் நாவுக்குத் துன்பமில்லை
துளை போட்ட (புல்லாங்)குழலுக்கு மனம் இணையாகுமே
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நின்றாடிடும்
இறைவன் தம் இதயத்தில் குடிகொள்ளவும்
பஞ்ச புராணங்கள் எப்போதும் துணையாகுமே
பகலென்ன இரவென்ன மனமே ஓது ...
பலி கொண்டுழல்கின்ற மனதை வெல்லப்
படைத்தாரே நால்வர் தம் அருளால் அன்று !!!!..

இடர் வந்த போதெல்லாம் இன்பம் ஊட்டும்
இல்லாதார் எனும் சொல்லை மாற்றிக் காட்டும்
பகை நீங்கும் பற்றேதான் வாழ்வில் உயரும்
பரந்தாமன் அருளுக்கே மனமும் ஏங்கும்
துணிவேதான் துணை என்று உணரத் தோன்றும்
துயிலாதார் வாழ்விற்கும் நல் வழியைக் காட்டும்
அறிவாற்றல் புகழெல்லாம் வந்தே சேரும்
அகத் தூய்மை புறத் தூய்மை அனைத்தும் காக்கும் .

(16  ஆம் திகதியே என் பிறந்தநாள் :) )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/12/2013

பொய்யாய் போலியாய் வாழும் மனிதர்கள் முன்னே


பொய்யாய் போலியாய்
வாழும் மனிதர்கள் முன்னே
பொறுமை இழந்து போகுதே
ஐயா உனக்கிது புரியாதா ?...!!!!
நல் ஆறுதல் நீயென்று தெரியாதா ....

வண்ணமயில் ஏறி
வந்து விடு நீயும்
எங்களுயிர்  வாடும்
கந்தனுனைத் தேடும்

மண் மணக்குதே
மண் மணக்குதே
கந்தன் உன்றன் பாதம்
மண்ணில் பதிக்கயிலே !....

எண்ணமெல்லாம் இருப்பது
கந்தன் கவசம் இதை
ஏழ்பிறப்பும் மறவாமல்
நெஞ்சில் பதிப்போம் ......

துன்பம் வரும் வேளையில்
சேர்ந்து துதிப்போம் உன்றன்
தூய திருவடி அதனால்
நன்மை அடைவோம்.....

ஔவைக்கருள் புரிந்தவனே என்றும்
ஆனை முகத்தானுக்கு இளையவனே
வள்ளி தெய்வானை மணவாளனே நாம்
வேண்டும் வரம் தந்தருள வந்தருள்வாய் நீ....

                                                   (பொய்யாய் போலியாய் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/06/2013

உயிரே...... என் உயிரின் உயிரே..........


உயிரே! என் உயிரின்  உயிரே
உணர்வும் நீயே 
வந்து விடு 
நீயே வந்து விடு 

இந்தத் தனிமை 
கொடுமை கொடுமை 
இதனைக் கொன்று விடு 
நீயே.. கொன்று விடு 
                                             உயிரே...... என்  
ஏழிசையில்  கலந்து 
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ நின்றதென்ன! 
அந்த உறவைக் கலைத்து எம் 
உயிரைப் பிரித்து 
விதி சதியை வளர்திங்கு  சென்றதென்ன! 
அன்பே சென்றதென்ன!

மலர் கருகும் நேரம் 
இன்றும்   உனது தாகம்
அதை அறிய வேண்டும் நீ தானே!
ஒரு மெழுகைப் போல 
உருகி உருகி உன்னால் இங்கு 
கவிதை வடித்தேன்
நான் தானே 
                                   
அன்பை ரசித்து மகிழ்ந்து நீ 
என்னுள்  இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது   
அன்பே வா அன்பே வா ......

நீ வரும் வழியைப் பார்த்து 
இந்த விழிகள் பூத்திருக்கும்  
என் உயின் கீதமென 
அன்பே வா  அன்பே வா  

                                       (உயிரே என் உயிரின்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.