6/20/2013

உயிரே என் உயிரின் உயிரே...


உயிரே.....என் உயிரின் உயிரே
உணர்வும் நீயே வந்து விடு
நீயே வந்து விடு ........
இந்தத் தனிமை கொடுமை
கொடுமை இதனைக் கொன்று விடு
நீயே கொன்று விடு ...............

ஏழிசையில்  கலந்து
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ
வந்ததென்ன ...¨

அந்த உறவைக் கலைத்து நம்
உயிரைப் பிரித்து
விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன !.....
அன்பே சென்றதென்ன .....

                        (உயிரே என் உயிரின் உயிரே...)

மலர் கருகும் நேரம்
இன்றும் உனது தாகம் அதை
அறிய வேண்டும் அன்பே வா ....
ஒரு மெழுகைப்போல
 நீ உருகிப் போக
என்னுள்ளம் பதறிப் போகும்
அன்பே வா ..........

அன்பை ரசித்து மகிழ்ந்து நீ
என்னுள் இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது
அன்பே வா ...............

                              (உயிரே என் உயிரின் உயிரே...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2013

சிவ சிவ என்றிட சிந்தையும் மகிழ்ந்திடும்


எண்ணிக் கழிக்கும் நாட்களுக்கிடையில்
இத்தனை துன்பம் ஏன் இறைவா ?.....!!!!!
இந்த மண்ணில் பிறந்த உயிகளுக்கெல்லாம்
மகிழ்ச்சியை என்றும் தா இறைவா .......

தண்ணிப் பஞ்சம் தாவரப் பஞ்சம்
தரையை வாட்டி வதைப்பதனால்
உயிர்களைக் கொல்லும் வெப்பம் உலகம் எங்கும்
உக்கிரமாதைத் தடுத்தருள்வாய்...........

வெள்ளிப் பனி மலை உருகிக் கடலை
தரையைத் தாவி வந்தென்றும்
உயிர்களை அள்ளிக் கொலை வெறி
ஆடும் ஆட்டம் அடங்கிட இங்கே அருள்புரிவாய்

மண்ணில் நல் வளம் மகிழ்வாய் பொங்கிட
மா தவத்தைத் துறந்து நீ வருவாய் என்றும்
கண்ணின் மணியென கருணைக் கடலென நற்
கருத்தில் உறைந்த பக்தருக்காய் 

பொன்னும் பொருளும் வேண்டாம் உலகில்
புழுவாய்த் துடிக்கும் உயிர்களுக்கு என்றும்
அன்னந் தண்ணி இரண்டும் அருளி
அகம் மகிழ வைப்பாய் இறைவா நீ !!........ 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.