6/20/2013

உயிரே என் உயிரின் உயிரே...


உயிரே.....என் உயிரின் உயிரே
உணர்வும் நீயே வந்து விடு
நீயே வந்து விடு ........
இந்தத் தனிமை கொடுமை
கொடுமை இதனைக் கொன்று விடு
நீயே கொன்று விடு ...............

ஏழிசையில்  கலந்து
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ
வந்ததென்ன ...¨

அந்த உறவைக் கலைத்து நம்
உயிரைப் பிரித்து
விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன !.....
அன்பே சென்றதென்ன .....

                        (உயிரே என் உயிரின் உயிரே...)

மலர் கருகும் நேரம்
இன்றும் உனது தாகம் அதை
அறிய வேண்டும் அன்பே வா ....
ஒரு மெழுகைப்போல
 நீ உருகிப் போக
என்னுள்ளம் பதறிப் போகும்
அன்பே வா ..........

அன்பை ரசித்து மகிழ்ந்து நீ
என்னுள் இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது
அன்பே வா ...............

                              (உயிரே என் உயிரின் உயிரே...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

18 comments:

 1. மலர் சிரித்து மகிழ்ந்தது அழகாக..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 2. //அந்த உறவைக் கலைத்து நம்
  உயிரைப் பிரித்து
  விதி சதியை வளர்திங்கு சென்றதென்ன !.....//

  அருமையான வரிகள். உணர்வுப் பூர்வமாக இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 3. /// என்னுள் இருக்கும் பொழுதில் தான்
  இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது ///

  பாடல் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 4. பிரிவுத்துயர் தனை எடுத்துக் கூறும் அழகானதொரு கவிதை .......வாழ்த்துகள் தோழி !!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 5. பிரிவுத் துயரைக் கூட அழகான கவிதையாகிட்டீங்க தங்கச்சி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 6. சுகமான சோக கீதம். மிகவும் ரசித்தேன்.
  வாழ்த்துக்கள் தோழி!

  த ம.3

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 7. அழகான கீதம்... ரசித்தேன்...

  ReplyDelete
 8. அழகான உயிரின் கீதம்.

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........