குப்பைக்குள்தான் கிடக்கிறது
குண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !
அப்பப்பா பொழுதெல்லாம் ஆனந்தத்திலே
அவரவர்க்கு வேண்டியது கிடைத்தனாலே
தப்பாத்தான் போகிறது அரசியலும் இங்கே
தவிக்கின்ற மக்களுக்கு நீதி சொல்வதாரு!
ஒப்பற்ற விலை உயர்வு ஏழை மக்களை
ஒடுக்கித்தான் வைக்கிறது எந்நாளும் இங்கே
கற்கின்ற கல்விக்கேனும் காமராசர் போல்
கை கொடுக்கும் தெய்வம் இங்கு யாரும் இல்லையா!..
பிற்போக்கு வாதிகளாய் நாமிருப்பதால்
பின்தங்கிப் போகாதோ நன் நாட்டின் வளம்!
நற் போக்கு நமக்குள்ளே வேண்டும் என்றால்
நல்லவர்களே அரசியலில் இருந்தாக வேண்டும்
கற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
காலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!
தன் மான உணர்வு உள்ளது ஏழைகளிடத்திலே
தயங்காமல் அவர்கள் பெயரை முன் மொழியுங்கள்
எம் மானம் காப்பதற்கு உரிய தலைமைக்கு
எவன் மனிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்!