8/21/2013

கழுகுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை !!



கழுகினைப்  போல் காத்திருந்து
கண்களிரண்டும் பூத்திருந்து
அருந்தும் இரத்தம் ஒன்றே சொர்க்கம்
என அறிந்தவர்க்கு ஏது துக்கம் !

வலையில் வீழும் குஞ்சினத்தில்
வண்ண நிறம் அது எதற்கு!
எலும்பும் சதையும் போதுமிங்கே
எச்சில் ஊறத் தின்பதற்கு!

கொழு கொளுத்த கழுகினைத்தான்
கொத்தித் தின்ன யாருமில்லை!
பரிதவிக்கும் இனத்தைப் பார்த்து மேலும்
பரிகசிக்குது இது என்ன  கூத்து!

அறிவிழந்த கழுகுக்கென்றும்
அடுத்தடுத் துன்பம் வந்தால்
தெரிந்து கொள்ளும் எங்கள் துயரைத்
தெரிவிப்பவர் யார் தான் இங்கே!

மது மயக்கம் மனதை மயக்க
மதியிழந்து செய்த செயலால்
கொதி கொதித்துப் போனது உள்ளம் இந்தக்
கொலைக்களம்தான் மாறுவதெப்போ!

அருவருப்பாய் பெண்ணினத்தை
அகம் மகிழ்ந்து வர்ணிப்போரைத்
தொழுவத்திலே கட்டி வைத்துத்
தோலுரிக்க வேண்டுமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.