3/08/2014

மகளீர் தின நல் வாழ்த்துக்கள் (2014-அம்பாளடியாள் )
பெண்ணைப் போற்றும் இந்நாளே 
பெருமை மிக்க நன்நாளே 
கண்ணை இங்கே மறப்பாரோ 
காரிருளை ஏற்பாரோ சொல் 
மண்ணை மக்களை நினைப்பவர்கள் 
மறவார் இந்தத் திரு நாளை 
விண்ணை நோக்கி நிலவைத் தான் 
விரும்பிப் பார்பார் மகளீராய் !!

அன்னை  இல்லா  வீடேது 
அக்கா தங்கை அனைவருமே 
தன்னைத்       தந்து உழைப்பவர்கள் 
தர்மம் காக்கும் நல்லவர்கள் !
பொன்னைத்       தந்தும்      போதாது 
பொறுமை மிக்க பெண்களுக்கு
உன்னைத் தந்து உயிர் காப்பாய் 
ஊழல் மிகுந்த நாட்டினிலே...

விண்ணைத் தொட்ட பெண்ணுண்டு 
விடியல் சமைத்த பெண்ணுண்டு 
மண்ணைக் காத்த பெண்ணுண்டு !
மக்கள் நலமாய் வாழ்ந்திடவே 
எண்ணெய்     போல      விளக்கெரிய
எங்கும் நிறைந்த பராசக்தியை 
கண்ணைப் போல காத்திடுவோம்   
காலம் முழுவதும் எமக்காக ! 

சேலை கட்டு பெண்ணே உன் 
சிறப்பு என்றும் உயர்ந்து நிற்கும் 
மாலை சூடும் மணவாளன் 
மனமும் அங்கே மகிழ்ந்திருக்கும் 
பாலைப் போல     கள்ளும்   தான் 
பரந்து கிடக்கும் உலகினிலே
நூலைக் குறைத்த ஆடைகளினால்  
நுழைவான் ஏனோ யுத்தங்கள் ?! 

பெண்கள்     நாட்டின்     கண்களென 
போற்றிப் பாடும்  காலம் போய்
புண்கள்       தோன்ற    வேண்டாமே 
புலரும் பொழுதுகள் ரணமாக 
கண்கள் கண்களாய் இருப்பதற்கே   
கவர்ச்சி காட்ட வேண்டாமே!! 
எண்கள் தகர்த்த தொல்லைகளை 
ஏற்றுத் துடிக்கும் மகளீரே !

அன்னை தெரேசா போலுள்ளோர் 
அன்பில் முதிர்ந்த தெய்வங்கள் !  
உன்னை அவர் போல் நினைத்தாலே 
உள்ளம் தெளியும் தன்னாலே 
தன்னைத் தந்தும் பிறர் நலனைத் 
தக்க வைக்கும் மகளீரே 
என்னை உன்னைக் காக்க வல்ல 
எளிமை நிறைந்த சக்தியாவர் !!!!

மங்கையர் அனைவருக்கும் என் 
மனம் கனிந்த மகளீர் தின 
நல் வாழ்த்துக்கள் !

அம்பாளடியாள் 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

36 comments:

 1. மங்கையர் அனைவருக்கும் என்
  மனம் கனிந்த மகளீர் தின
  நல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .உங்களுக்கும் என்
   இனிய வாழ்த்துக்கள் .

   Delete
 2. அருமை அம்மா...

  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 3. மகளிர் தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

   Delete
 4. அன்பின் அம்பாளடியாளுக்கு , மனம் கனிந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள். எனக்குத் தோன்றுவதை சொல்கிறேன். பெண்கள் தளை அறுத்து முன்னேற வேண்டியதுதான் அவசியம் .மறுப்பதற்கில்லை பெண் சுதந்திரம் எனும் போது கூடவே அவ்ர்களது திறன்களும் வெளிப்படும்விதத்தில் இருக்கவேண்டும் அந்நிய கலாச்சாரம்தான் பெண்விடுதலைக்கு முன்னோடி என்னும் எண்ணம் தவறு. பெண்களின் கருத்துக்கள் பரவலாக அறியப் பட வேண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தமிழன் தமிழனாக இருக்கும் போது தான் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்ந்தான் இன்றோ அந்நியக் கலாச்சாரத்தில் மூழ்கித் தன் அடையாளத்தை மறந்தே செல்கின்றான் என்பது தான் உண்மை .குறிப்பாக பெண்கள் .மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .

   Delete
 5. அருமை. //நூலைக் குறைத்த ஆடைகளினால்... // உண்மை.

  ReplyDelete
 6. தன்னைத் தந்தும் பிறர் நலனைத்
  தக்க வைக்கும் மகளீரே..
  என்னை உன்னைக் காக்க வல்ல
  எளிமை நிறைந்த சக்தியாவர்..

  மகளிர் தினத்தன்று - மனங்கவரும் அழகான கவிதை.
  மனம் கனிந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 7. உடுத்தும் உடையில் கண்ணியம் தேவை என்று கோடிட்டு காட்டியுள்ளது இன்றைய சூழ்நிலையில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய உண்மை !
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் புரிந்துணர்வோடு இட்ட நற்
   கருத்திற்கும் .

   Delete
 8. மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 9. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி.
  இந்த நாளுக்கேற்ற அருமையான கவிதை.

  ReplyDelete
 10. அருமையான படைப்பு! இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 11. இன்றுநாம் வாழ்த்தும் இனிதான பெண்குலத்தில்
  நன்றென வாழ்கின்ற நங்கையே - உன்போல்
  புகழினிய தாயெல்லாம் புன்னகைத்தே வாழ்வீர்
  மகிழினிய கந்தம் மணந்து !

  நெஞ்சுருகி வாழ்த்துகிறேன் நித்தியமாய் நீவாழ
  கொஞ்சும் தமிழைக் குழைத்து !

  அழகிய கவிதையும் வாழ்த்தும் சகோ
  நெஞ்சார்ந்த மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
  வாழ்க வளம்பெற்றே எந்நாளும்
  6

  ReplyDelete
  Replies
  1. கவிதைக்கு அழகிய கவிதை மலர் சூடி மனம் மகிழத் தந்த
   வாழ்த்திற்கு மிக்க நன்றி அன்புச் சகோதரா !

   Delete
 12. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 13. சகோதரி அவர்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.! (வெள்ளை நிற பின்புலத்தில் வெளிறிய பச்சை வண்ணத்தில் உள்ள எழுத்துக்களை படிக்க இயலவில்லை! கண்களை கூசச் செய்கின்றன. எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை!)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .மன்னிக்க
   வேண்டுகிறேன் சகோதரா நான் எழுதும் போது மாற்றம்
   தெரியவில்லை இனியும் நிறத்தைத் தேர்வு செய்யும் போது
   இன் நிகழ்வை மனதிற் கொண்டு பதிவிடுவேன் .தகவலுக்கு
   மிக்க நன்றி .

   Delete

 14. "பெண்ணைப் போற்றும் இந்நாளே
  பெருமை மிக்க நன்நாளே" என்று
  தொடரும் கவிதை நன்று!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 15. மிக்க நன்றி சகோதரா .

  ReplyDelete
 16. இந்நன்நாளில் மகத்தான பெண்கள் மாண்புற வாழ அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்....!
  இனிய கவிதை தந்த இன்மகளும் வாழ்க வாழ்க....!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 17. சகோதரிகள் அனைவருக்கும் எனது
  மனம் கனிந்த மகளீர் தின
  நல் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 18. படிக்க சுவையான கவிதையை படைத்திட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. நல்ல கவிதை.....

  உங்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்....

  வண்ணங்களில் கொடுத்திருப்பது, படிக்க கடினமாய் இருக்கிறது. கொஞ்சம் கவனிங்களேன்!

  ReplyDelete
 20. மகளிர்தின கவிதை மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........