7/02/2011

என் தாய்த்திரு நாட்டுக்கு சமர்ப்பணம்....

நீதி தேவதை கண்களிலே
இருள் நீக்கிவிட்டால் வரும்
தமிழ் ஈழம் -பெரும் போரினிலே
தினம் போகுது பார் அந்தப்
புண்ணிய யீவன்கள்  இது கலிகாலம்

சிங்களம் என்றொரு பேரினத்தால்
தினம் தினம் அழியுது எம்மினம்தான்
மங்களம் வாசித்த மண்ணினிலே தினம்
மக்களின் அழுகுரல் கேட்குதடா........

எம்தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு இந்த
சிங்களம் வாழ்ந்திட வழியுமுண்டோ.........

விதையெனப் புதைகுழி சென்ற வேங்கை(கள்)
விடுதலை தாகம் கொண்ட வேங்கை(கள்)
சதையதை  இழந்த மனிதரடா உங்கள்
சரித்திரம் முடித்திட வலம் வருவார்...........

உலகமும் எம் துயர் கேட்க்கவில்லை
உண்மையை ஏற்றிட யாரும் இல்லை
தமிழனின் வேதனை தீரவில்லை
தரணியில் எமக்கினி யாரும் இல்லை.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

43 comments:

 1. இதயமுள்ள பலரும்
  இறைவனின் துணையும்
  இன்றைக்கும் என்றைக்கும் உண்டு ...

  நல்ல கவிதை புதுமை பெண்ணே ...
  இப்படிக்கு
  பாரதியின் புதுமை பையன்

  ReplyDelete
 2. வேதனைக்கவிதை.
  வேர்களை தேடும்
  கிளைகளின் கவிதை
  அருமை.

  புதைந்தவரெல்லாம்
  சிதைந்தவரல்லர்!!
  விதைத்தவர்கள்
  மண்ணில்
  மனிதாபிமானம் மிக்க
  மனிதர்களை விதைத்தவர்கள்
  விதைகள்
  வீரியமாகும்
  பல விருட்சங்கள் உருவாகும்!!
  காலம் கனியும்!!
  பொறுத்திருப்போம்!

  அன்பன்
  மகேந்திரன்

  ReplyDelete
 3. வீழ்ந்த விதைகள்
  விருட்சமாகும் நாளை
  எண்ணியிருப்போம்
  எண்ணத்தில்......

  ReplyDelete
 4. இராஜராஜேஸ்வரி கூறியது...
  //வீழ்ந்த விதைகள்
  விருட்சமாகும் நாளை
  எண்ணியிருப்போம்
  எண்ணத்தில்......//

  நான் சொல்லவந்த கருத்தையே, வெகு அழகாக சொல்லிவிட்டார்கள் என் அன்புத்தோழி இராஜராஜேஸ்வரி அவர்கள்.

  அதையே நானும் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 5. மங்களம் வாசித்த மண்ணினிலே தினம்
  மக்களின் அழுகுரல் கேட்குதடா........//// வழிகள் நிறைந்த வரிகள்..

  ReplyDelete
 6. இதயமுள்ள ஒவ்வொருவரும்
  இரத்தம் சிந்தி வேதனைப்படும்படியான
  கவிதை..

  உங்கள் வேதனைகளால்
  நாங்களும் வேதனைப்படுகிறோம்
  என்றால் அது பொய்யாகாது..

  தொலைக்காட்சியில் அந்த
  துயரங்களைப் பார்த்த போதினும்
  இன்று நாள்தோறும் நினைவூட்டும்
  தங்களது கவிதையால்

  எம் தமிழர்களை
  எம் சகோதரர்களை
  எண்ணி எண்ணி வேதனைப்படுகிறோம்

  இரக்கமுண்டா கடவுளே ? என்று
  இரைச்சலிடவும் வழியில்லை..

  இரக்கமே வடிவான அந்த
  இறைவனும் அமைதி காக்கிறான்
  என்றால்..

  மணிவாசகரின் ஒரு வார்த்தை
  நினைவுக்கு வருகிறது ..

  ஆண்ட நீ அருள் இல்லையானால்
  ஆரிடம் நோகேன் ?
  ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
  வாழ்கிலேன் கண்டாய்
  வருக என்று அருள்புரியாயே

  என்று அவர் வேதனைப்பட்டதை
  நினைவு கூறுகிறேன்..

  ReplyDelete
 7. மாற்றமுடியாத கதையும் முற்று பெற்ற கதையும் வரலாற்றில் இல்லை.

  ReplyDelete
 8. //தமிழனின் வேதனை தீரவில்லை
  தரணியில் எமக்கினி யாரும் இல்லை.....//

  வந்தாரை வாழவைக்கும்
  தமிழ் மக்களும்
  தமிழகமும் இருக்கிறது..

  சகோதரியே அஞ்சேல் ...

  ReplyDelete
 9. >>தமிழனின் வேதனை தீரவில்லை
  தரணியில் எமக்கினி யாரும் இல்லை.....

  யாமிருக்க பயம் ஏன்? என ஏதாவது ஒரு சக்தி வர பிரார்த்திப்போம்

  ReplyDelete
 10. //விதையெனப் புதைகுழி சென்ற வேங்கை(கள்)
  விடுதலை தாகம் கொண்ட வேங்கை(கள்)
  சதையதை இழந்த மனிதரடா உங்கள்
  சரித்திரம் முடித்திட வலம் வருவார்.........../////

  வேங்கையென தமிழர்களை
  சங்கைமுழங்கி வெறி கொள்ள வைக்கும்
  வார்த்தை வரிகள்
  வீழ்வார்கள் நரிகள்

  ReplyDelete
 11. வலிநிறைந்த வரிகள்..!!

  ReplyDelete
 12. தமிழனின் வேதனை தீரவில்லை
  தரணியில் எமக்கினி யாரும் இல்லை..... ,////

  இந்த அவநம்பிக்கை வேண்டாம்.

  ReplyDelete
 13. உங்கள் மனவலி விரைவில் தீரும்.

  கடவுள் நம்பிக்கை உள்ளவரெனில் கடவுளிடம் மனமுருக கண்ணீரால் உங்கள் ப்ரார்த்தனையை வடியுங்கள்.

  உங்களுக்கு மிக நம்பிக்கையான நண்பர்களிடம் உங்கள் வேதனையைப் பகிருங்கள்.

  எந்த இன்பமும் ப்கிரும்போது இரட்டிப்பாகும்.துன்பமோ பாதியாய்க் குறையும்.

  நம்பிக்கையுடன் இருங்கள்.சுழலும் தன்மையுடையதுதான் வாழ்க்கை.எந்தச் சூழலிலும் நேர்மையான உண்மையான பாதையைக் கைவிடாதீர்கள்.

  விரைவில் உங்கள் மனவலி குணமடைய என் ப்ரார்த்தனைகளும் உண்டு சகோதரி.

  ReplyDelete
 14. இராஜராஜேஸ்வரி கூறியது...
  //வீழ்ந்த விதைகள்
  விருட்சமாகும் நாளை
  எண்ணியிருப்போம்
  எண்ணத்தில்......//

  இதையே நானும் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 15. மருந்தொன்று ஒருநாள் கிடைக்கும்
  மனவலியும் நிச்சயம் தீரும்
  காலம் விரைவில் மாறும்
  கதிர்காமக் கந்தா அருள் தாரும்!

  ReplyDelete
 16. //உலகமும் எம் துயர் கேட்க்கவில்லை //

  இது உண்மையென்று தோன்றவில்லை.தவறு செய்தவர்களை உலகம் கவனிக்கத்துவங்கியிருக்கிறது.ஆனால் மனவலி என்பது நாம் வாழும்வரை இருந்துகொண்டே இருக்கும்.இழப்பு பெரிது.

  ReplyDelete
 17. வேதனைகள் தீரும் நாள் சீக்கிரமே வரட்டும்...

  ReplyDelete
 18. இதயமுள்ள பலரும்
  இறைவனின் துணையும்
  இன்றைக்கும் என்றைக்கும் உண்டு ...

  நல்ல கவிதை புதுமை பெண்ணே ...
  இப்படிக்கு
  பாரதியின் புதுமை பையன்

  நன்றி பையா என் மனவலி உணர
  விரைந்து வந்தமைக்கு...........

  ReplyDelete
 19. வணக்கம் சகோ,

  எல்லோராலும் கைவிடப்பட்டவர்களாக இருக்கும், எங்களின் துயர நிலையினை, உணர்ச்சிப் பெருக்கோடு உங்களின் கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.

  ReplyDelete
 20. வேதனைக்கவிதை.
  வேர்களை தேடும்
  கிளைகளின் கவிதை
  அருமை.

  புதைந்தவரெல்லாம்
  சிதைந்தவரல்லர்!!
  விதைத்தவர்கள்
  மண்ணில்
  மனிதாபிமானம் மிக்க
  மனிதர்களை விதைத்தவர்கள்
  விதைகள்
  வீரியமாகும்
  பல விருட்சங்கள் உருவாகும்!!
  காலம் கனியும்!!
  பொறுத்திருப்போம்!

  அன்பன்
  மகேந்திரன்

  நன்றி சகோதரரே.இது என் வலிமட்டும்
  அல்ல நம் எல்லோருக்கும் பொதுவானது.
  அதனால்தான் என் உறவுகள் உங்களை
  இங்கு அழைத்தேன்.விரைந்து பதில்
  தந்தமைக்கு நன்றி......

  ReplyDelete
 21. வீழ்ந்த விதைகள்
  விருட்சமாகும் நாளை
  எண்ணியிருப்போம்
  எண்ணத்தில்......

  மனதில் உறுதிகொள்வோம்
  உறவுகளே............

  ReplyDelete
 22. இராஜராஜேஸ்வரி கூறியது...
  //வீழ்ந்த விதைகள்
  விருட்சமாகும் நாளை
  எண்ணியிருப்போம்
  எண்ணத்தில்......//

  நான் சொல்லவந்த கருத்தையே, வெகு அழகாக சொல்லிவிட்டார்கள் என் அன்புத்தோழி இராஜராஜேஸ்வரி அவர்கள்.

  அதையே நானும் வழிமொழிகிறேன்.

  நன்றி உறவுகளே நானும் இதையே
  வழிமொழிகின்றேன்............

  ReplyDelete
 23. வேதனை.

  உண்மைதான் எங்கள் தமிழ்
  இனத்துக்கே வந்த வேதனை.
  இது விரைவில் தீரவேண்டும்!....

  ReplyDelete
 24. மங்களம் வாசித்த மண்ணினிலே தினம்
  மக்களின் அழுகுரல் கேட்குதடா........//// வலிகள் நிறைந்த வரிகள்..

  இது விரைவில் தீரவேண்டும் இந்த நிலை மாறவேண்டும்............

  ReplyDelete
 25. இதயமுள்ள ஒவ்வொருவரும்
  இரத்தம் சிந்தி வேதனைப்படும்படியான
  கவிதை..

  உங்கள் வேதனைகளால்
  நாங்களும் வேதனைப்படுகிறோம்
  என்றால் அது பொய்யாகாது..

  தொலைக்காட்சியில் அந்த
  துயரங்களைப் பார்த்த போதினும்
  இன்று நாள்தோறும் நினைவூட்டும்
  தங்களது கவிதையால்

  எம் தமிழர்களை
  எம் சகோதரர்களை
  எண்ணி எண்ணி வேதனைப்படுகிறோம்

  இரக்கமுண்டா கடவுளே ? என்று
  இரைச்சலிடவும் வழியில்லை..

  இரக்கமே வடிவான அந்த
  இறைவனும் அமைதி காக்கிறான்
  என்றால்..

  மணிவாசகரின் ஒரு வார்த்தை
  நினைவுக்கு வருகிறது ..

  ஆண்ட நீ அருள் இல்லையானால்
  ஆரிடம் நோகேன் ?
  ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
  வாழ்கிலேன் கண்டாய்
  வருக என்று அருள்புரியாயே

  என்று அவர் வேதனைப்பட்டதை
  நினைவு கூறுகிறேன்..

  சரியாகச் சொன்னீர்கள் எங்கள்
  மனவலியைச் சொல்லி சொல்லி
  களைத்துவிட்டோம்.இந்த வலிதீர
  வரம் ஒன்று விரைவாய்க் கிடைக்க
  வேண்டும்....

  ReplyDelete
 26. மாற்றமுடியாத கதையும் முற்று பெற்ற கதையும் வரலாற்றில் இல்லை.

  நன்றி வரவுக்கும் பகிர்வுக்கும்.....

  ReplyDelete
 27. //தமிழனின் வேதனை தீரவில்லை
  தரணியில் எமக்கினி யாரும் இல்லை.....//

  வந்தாரை வாழவைக்கும்
  தமிழ் மக்களும்
  தமிழகமும் இருக்கிறது..

  சகோதரியே அஞ்சேல் ...

  இதுகூட எங்கள் நாடு எங்கள்
  மக்கள்தான்.பலமுறை தீக்குளித்தே
  நிரூபித்துவிட்டனர்.

  ReplyDelete
 28. >>தமிழனின் வேதனை தீரவில்லை
  தரணியில் எமக்கினி யாரும் இல்லை.....

  யாமிருக்க பயம் ஏன்? என ஏதாவது ஒரு சக்தி வர பிரார்த்திப்போம்

  நன்றி அவ்வாறே பிரார்த்திப்போம்........

  ReplyDelete
 29. //விதையெனப் புதைகுழி சென்ற வேங்கை(கள்)
  விடுதலை தாகம் கொண்ட வேங்கை(கள்)
  சதையதை இழந்த மனிதரடா உங்கள்
  சரித்திரம் முடித்திட வலம் வருவார்.........../////

  வேங்கையென தமிழர்களை
  சங்கைமுழங்கி வெறி கொள்ள வைக்கும்
  வார்த்தை வரிகள்
  வீழ்வார்கள் நரிகள்

  நிட்சயம் வீழவேண்டும்!...........

  ReplyDelete
 30. வலிநிறைந்த வரிகள்..!!

  எங்கள் உறவுகளின் மன
  வலிகள் இவை............

  ReplyDelete
 31. தமிழனின் வேதனை தீரவில்லை
  தரணியில் எமக்கினி யாரும் இல்லை..... ,////

  இந்த அவநம்பிக்கை வேண்டாம்.

  பலமுறை நம்பி நம்பி ஏமாந்த எம்
  உறவுகளின் உணர்வு இது.அதனால்த்தான்
  பொதுவாக எல்லோருக்கும் சேர்த்து
  ஆறுதல் என்னும் அருமருந்து தேடி
  என் உறவுகளை இங்கு அழைத்தேன்..
  கொடுங்கள் கொடுங்கள் நான் கேட்ட
  அந்த அருமருந்து அனைவரினது
  மனதிற்கும் ஆறுதல் அளிக்கட்டும்......

  ReplyDelete
 32. உங்கள் மனவலி விரைவில் தீரும்.

  கடவுள் நம்பிக்கை உள்ளவரெனில் கடவுளிடம் மனமுருக கண்ணீரால் உங்கள் ப்ரார்த்தனையை வடியுங்கள்.

  உங்களுக்கு மிக நம்பிக்கையான நண்பர்களிடம் உங்கள் வேதனையைப் பகிருங்கள்.

  எந்த இன்பமும் ப்கிரும்போது இரட்டிப்பாகும்.துன்பமோ பாதியாய்க் குறையும்.

  நம்பிக்கையுடன் இருங்கள்.சுழலும் தன்மையுடையதுதான் வாழ்க்கை.எந்தச் சூழலிலும் நேர்மையான உண்மையான பாதையைக் கைவிடாதீர்கள்.

  விரைவில் உங்கள் மனவலி குணமடைய என் ப்ரார்த்தனைகளும் உண்டு சகோதரி.
  இந்த ஆறுதல் வார்த்தை என் தமிழ்த்தாய் உறவுகளைச் சென்றடைய
  பிரார்த்திக்கின்றேன்..........

  ReplyDelete
 33. இராஜராஜேஸ்வரி கூறியது...
  //வீழ்ந்த விதைகள்
  விருட்சமாகும் நாளை
  எண்ணியிருப்போம்
  எண்ணத்தில்......//

  இதையே நானும் வழிமொழிகிறேன்.

  நன்றி உறவுகளே...........

  ReplyDelete
 34. மருந்தொன்று ஒருநாள் கிடைக்கும்
  மனவலியும் நிச்சயம் தீரும்
  காலம் விரைவில் மாறும்
  கதிர்காமக் கந்தா அருள் தாரும்!

  நன்றி ஐயா!.........

  ReplyDelete
 35. //உலகமும் எம் துயர் கேட்க்கவில்லை //

  இது உண்மையென்று தோன்றவில்லை.தவறு செய்தவர்களை உலகம் கவனிக்கத்துவங்கியிருக்கிறது.ஆனால் மனவலி என்பது நாம் வாழும்வரை இருந்துகொண்டே இருக்கும்.இழப்பு பெரிது.

  இந்தக் கவனமும் இன்னொரு காற்றால் திசைதிரும்பாமல்
  இருக்க வேண்டும்.ஒருசிலரது கவனம்மட்டும் அல்ல
  ஒட்டுமொத்த நாடுகளின் கவனமும் ஒருநிலைப்பட வேண்டும்.இருக்கும் துன்பம் போதும் மென்மேலும்
  துன்பம் பெருகக்கூடாது.தீர்வு விரைவில்க் கிட்ட வேண்டும்......
  எம் உறவுகளின் எண்ணம்போல் வாழ்வு அமைய வேண்டும்.
  நன்றி பகிர்வுக்கு...........

  ReplyDelete
 36. வேதனைகள் தீரும் நாள் சீக்கிரமே வரட்டும்...

  நிட்சயமாக விரைந்துவர வேண்டும்............

  ReplyDelete
 37. வணக்கம் சகோ,

  எல்லோராலும் கைவிடப்பட்டவர்களாக இருக்கும், எங்களின் துயர நிலையினை, உணர்ச்சிப் பெருக்கோடு உங்களின் கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.

  நன்றி சகோ நான் என் கடமையைத்தான் செய்தேன்............

  ReplyDelete
 38. கவலை வேண்டாம் தமிழீழ போராட்டம் மீண்டும் காட்டி அமைக்கப்படும் தமிழகத்தில் இருந்து ஆறு அரை கோடி மக்கள் ஒருநாள் வீறு கொண்டு எழுவார்கள் சிங்கள தேசம் அழித்து பழிதீர்ப்பார்கள். முதலில் இந்தியாவில் இருந்து தமிழகம் பிரியும் இலங்கையுடன் சேர்ந்து சுதந்திர தமிழ் நாடு அமையும். பொறுத்திருங்கள் தோழர்களே. வரலாறுகள் மாற்றி எழுதப்படும்.

  ReplyDelete
 39. இன்றுதான் முதல் முறையாக உங்கள் இணையதளத்திற்கு வருகை தருகிறேன். ரொம்ப அழகா கவிதை எழுதுறீங்கள். வாழ்த்துக்கள். உங்கள் இணையதளத்தை தொடர்ந்து படித்தால் காக்கையும் குயில் போல கூவ ஆரம்பித்து விடும். நல்ல கருத்துகள் அடங்கிய அழகான கவிதைகள். வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகளை படித்ததும் எனக்கும் கவிதை மூலம் செய்திகளை சொல்லவேண்டும் என்று ஆசை வந்துள்ளது. நிச்சயமாக ஒரு பத்து பக்கத்தில் சொல்லவரும் ஒரு செய்தியை அழகாக பத்து வரியில் கவிதையாக சொல்லிவிடலாம் என்பது உங்கள் கவிதைகளை படித்ததும் தோன்றுகிறது. நன்றி! தொடர்ந்து சமூக சிந்தனை படைக்கும் அறிய கவிதைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்குதாருங்கள் என்று நட்போடு கேட்டு கொள்கிறேன். நட்புடன் - புதியதென்றல். சிந்திக்கவும்.நெட்.

  ReplyDelete
 40. இரத்தம் இன்றி ஒரு யுத்தம் வேண்டும் நாம் பட்டதுயர் இவர்கள் அறியவேண்டும்.மொத்தத்தில் எம் இனத்துக்கு சுதந்திரம் வேண்டும்.
  மக்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த நாள் விரைந்து வரவேண்டும். ஒருவரை ஒருவர் அழிப்பதனால்
  இன்பன் ஏது.இவர்களின் அரக்கத்தனம் அழியவேண்டும்.
  மனிதநேயம் மலரவேண்டும்.மனதில் இந்த எண்ணம் திடமாய் இருக்க வேண்டும்.ஆதங்கம் வேண்டாம்
  அறிவுக்கு அதி உச்ச வேலைகொடுங்கள்.அநியாயம்
  செய்பவர்களை அடையாளம் காட்டிவிடுங்கள்.
  நீதியின் கண்களுக்கு நிகழ்ந்த அநீதியைக் தெளிவுபடுத்துங்கள்.

  ReplyDelete
 41. இன்றுதான் முதல் முறையாக உங்கள் இணையதளத்திற்கு வருகை தருகிறேன். ரொம்ப அழகா கவிதை எழுதுறீங்கள். வாழ்த்துக்கள். உங்கள் இணையதளத்தை தொடர்ந்து படித்தால் காக்கையும் குயில் போல கூவ ஆரம்பித்து விடும். நல்ல கருத்துகள் அடங்கிய அழகான கவிதைகள். வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகளை படித்ததும் எனக்கும் கவிதை மூலம் செய்திகளை சொல்லவேண்டும் என்று ஆசை வந்துள்ளது. நிச்சயமாக ஒரு பத்து பக்கத்தில் சொல்லவரும் ஒரு செய்தியை அழகாக பத்து வரியில் கவிதையாக சொல்லிவிடலாம் என்பது உங்கள் கவிதைகளை படித்ததும் தோன்றுகிறது. நன்றி! தொடர்ந்து சமூக சிந்தனை படைக்கும் அறிய கவிதைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்குதாருங்கள் என்று நட்போடு கேட்டு கொள்கிறேன். நட்புடன் - புதியதென்றல். சிந்திக்கவும்.நெட்.

  நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.மனநிறைவாகக்
  கருத்திட்டு என் மனத்தைக் குளிரவைத்தீர்கள்.என்
  கடமை எதுவோ அதைநான் செய்யக்கடமைப்பட்டுள்ளேன்.
  என்னால் முடிந்தவரை என் ஆக்கங்கள் தொடரும்
  உங்கள் அனைவரினதும் நல் ஆசியுடன்.நன்றி உங்கள்
  வரவு தொடரட்டும்............

  ReplyDelete
 42. உங்கள் மனவலி புரிகிறது.
  காலம் வரும். மாற்றங்கள் மட்டுமே மாறாதது.
  சென்ற வருடம் நான் எழுதிய இந்தக் கவிதையும் பாருங்கள்.
  http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/blog-post_24.html

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........