5/19/2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா !


மலரிலும் மெல்லிய
மனமிது தழைத்திட
நற் குணநலன் பெற்றிங்கு என்
குலமகள் வாழ்ந்திட
கலைகளைப் பயின்றிட நற்
கடமைகள் புரிந்திட
அறிவுசார் செல்வமும்
அன்பொடு தன்னடக்கமும்
தெளிவுறப் பெற்ற ஞானமும்
சிந்தையில் நல்லுணர்வும்
தித்திக்கும் வாழ்வதனில்
திசை எட்டும் போற்றும் வண்ணம்
எத்திக்கிலும் இடரின்றி


இவள் வாழ்வு நலன் பெறவே
வாழ்த்துங்கள் உறவுகளே
அந்த வாழ்த்தொன்றே போதுமிங்கே !!தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

32 comments:

 1. சகானாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அனைத்து வளமும்
  குறையில்லா நலமும் பெற்று
  இன்றுபோல் என்றும்
  சிறந்து வாழ
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 4. இசைத்தமிழ் பெயரேந்தி வந்த
  இன்னிசைக் காரிகையே..
  இச்சக வாழ்வுதனில்
  இன்புற்று மகிழ்ந்து
  இயைபுடன் வளமும் நலமும்
  இனிமையுடன் அகம்கொண்டு
  நீடூழி வாழ்க...
  ==
  அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  வாழ்க வளமுடன்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 5. தித்திக்கும் வாழ்வதனில்
  திசை எட்டும் போற்றும் வண்ணம்
  எத்திக்கிலும் இடரின்றி
  பல்லாண்டுகள் வாழ சகானாவுக்கு
  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. மாமாவின் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 7. சில்லென்ற சிறுமலரே! சகானா!
  கொல்லாமல் கொல்லும் உன்அழகே!
  பல்கலையும் பயின்று நலம்பலபெற்று
  வல்லவளாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்!!!

  குட்டித்தேவதைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி!

  த ம 5

  ReplyDelete
 8. செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் சுகமுடன்....!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 9. அருமையான கவிதை அன்பு மகளுக்கு.
  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!
  வாழ்க வளமுடன் சகானா .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் நல் வாழ்த்திற்கும் !

   Delete
  2. உங்கள் நன்றியை அன்புடன் வரவேற்கிறேன் அம்பாளடியாள்

   Delete
 10. சகானாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  வாழ்வில் எல்லா நலனும், வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் நல் வாழ்த்திற்கும் !

   Delete
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் நல் வாழ்த்திற்கும் !

   Delete

 12. சகானாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் நல் வாழ்த்திற்கும் !

   Delete
 13. என்றும் இன்பமோடு, நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்ம்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் நல் வாழ்த்திற்கும் !

   Delete
 14. எத்தனை இனிப்புகள்!
  வாழ்த்துகிறேன் நானும் வாழ்க பல்லாண்டெனவே!

  ReplyDelete
  Replies
  1. இவைகள் யாவுமே உங்களுக்குத் தான் வடிவாக சாப்பிடுங்கள் சகோ :)
   மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 15. சகானாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்திற்கும் !

   Delete
 16. பல்கலையும் கற்று பல்லாண்டு நலமுடன் வாழ இனிய வாழ்த்துகள் சகானா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 17. குன்றா வளமும் குறைவற்ற கல்வியும் பெற்று என்றும் வாழ்க இனிது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் ¨!

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........