2/11/2014

யாமிருக்க பயம் ஏன் என்றவனும் நீயல்லவோஎண்ணம்   எல்லாம்  நீயானாய் 
எதுகை மோனை போலானாய் 
வண்ணம் என்றும் குறையாத 
வடி வேலா முருகா மால் மருகா 
கிண்ணம் தேன் கிண்ணமடா 
இனிக்கும் முகம் பால் வண்ணமடா 
திண்ணம் உயரிய திண்ணமடா 
உனை அறிந்தால் தமிழும் மின்னுமடா !!

பொன்னை நிகர்த்த மேனியனே 
பொற் தமிழின் உயிரே காவியமே 
உன்னை வணங்கித் துதி பாடும் 
உணர்வில் வந்து கலந்து விடு
என்னை அறிந்த பெருமானே
ஏழ் பிறப்பும் உனக்கே உனக்காக
தென்னை மரம் போல் நானிருந்து
தேனாய் பாலாய் கவி வடிக்க

உருகும் உருகும் உயிர் உருகும்
உருளும் உலகம் அதை வணங்கும்
கருகும் மலரும் சிரிக்குமடா
கருணை நிறைந்த வடிவேலா
பருகும் பா அது வெண்பாவாய்
பருகத் தந்த உனதருளால்
முருகும் அங்கே குறையாமல்
முடிப்பேன் வடிப்பேன் நயம்படவே

வளரும்     பயிராய்    நானிங்கே
வளர்க்கும் தாயாய் நீ அங்கே
தளரும் நிலையது வாராமல்
தருவாய்     ஞான   ஒளியிங்கே
உளரும் மன நிலை தவிர்த்திடவே
உதிக்கும் கவிதை வரி வடிவம்
கிளரும் இன்ப உணர்வுகளைக்
கீற்றில் சிறந்த கீற்றாக

முருகன் அருளே பேரருளாம்
ஞான முத்திக்குகந்த நல்லருளாம்
அழகன் அவனே தமிழ்க் கடவுள்
அறிந்தாள் பாட்டி ஔவையும் தான்
குமரன் பெயரைச் சொல்லாத
நாளும் உண்டோ சொல்லிங்கே ?..
பரமன் பதத்தைப் பற்றிடினும்
பாட்டில் முருகன்தான் எங்கும் !!தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

20 comments:

 1. இருமுறை படித்து மகிழ்ந்தேன்
  அருமையான போற்றித் திரு அகவல்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி ஐயா தங்கள் பொன்னான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி .தங்களின் கருத்தைக் கண்டு எனது உள்ளமும் மகிழ்ந்ததிங்கே .

   Delete
 2. மனதை உருக வைக்கும் சிறப்பான வரிகள் அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா பாராட்டிற்கும் மனமுவந்த நல் வாழ்த்திற்கும் .

   Delete
 3. குமரன் பெயரைச் சொல்லாத
  நாளும் உண்டோ சொல்லிங்கே ?..
  பரமன் பதத்தைப் பற்றிடினும்
  பாட்டில் முருகன்தான் எங்கும் !!//
  அருமையான முருகன் பாமாலை.
  குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் தீருமே! அவர் குடும்பம் தழைத்தோங்குமே!
  குமரன் பெயரை சொல்லி உயர்வோம்.
  அருமையான முருகன் பாமாலை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் சிறப்பான நல் வாழ்த்திற்கும் .

   Delete
 4. வளரும் பயிராய் நானிங்கே
  வளர்க்கும் தாயாய் நீ அங்கே
  தளரும் நிலையது வாராமல்
  தருவாய் ஞான ஒளியிங்கே
  உளரும் மன நிலை தவிர்த்திடவே
  உதிக்கும் கவிதை வரி வடிவம்
  கிளரும் இன்ப உணர்வுகளைக்
  கீற்றில் சிறந்த கீற்றாக

  பாக்கள் வடிக்க அன்பான வேண்டுதல்
  அருளிடுவான் அய்யன் உன் இஷ்டம் போல் என்றும்

  வார்த்தைகள் அடை மழை பொழிகிறதே.அருமை ரசித்தேன் ரசித்தேன் தோழி..!
  வாழ்க வளமுடன்....!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அன்புத் தோழியே வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .

   Delete
 5. அருமையான ஒரு முருகன் பாமாலையை அளித்ததற்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 6. பொற் தமிழின் உயிரே காவியமே

  என தங்கத்தமிழ் முருகனை கொண்டாடிய
  அருமையான கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 7. அட்டகாசமா சாந்த நயம் மிகுந்த அகவல்!
  அருமை மேடம்!

  ReplyDelete
 8. அழகன் அவனே தமிழ்க் கடவுள்
  அழகான சொல்லெடுத்து தொடுத்த சரம் வெகு சிறப்புங்க தோழி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க அன்புத் தோழியே தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிடா .

   Delete
 9. "பொன்னை நிகர்த்த மேனியனே
  பொற் தமிழின் உயிரே காவியமே" என
  முருகனை விழிப்பதை வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 10. சிறப்பான கவிதை.

  முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........