5/31/2011

தீராத சுமை.....

கதிர் அறுக்கக் குனிந்த தலை
கை அறுத்து நின்றதடா!
சிந்திய இரத்தத் துளிகளினால்
சிவந்த மண்ணும் அழுததடா!
களை எடுக்கும் கமக்காரன்
களங்கம் அற்ற உழைப்பாளி-அவன்  
நினைப்பு எங்கே போனதென்று
எமக்குமட்டும்தான்  தெரியுமடா!

சொல்ல வழி இல்லையடா!
எம் சொந்தங்களின் வலியதனை
அன்னை என நினைத்த பூமி
நல் அறுவடையைத் தந்த பூமி 
எம் வம்சமதை வளர்த்த பூமி 
வறுமை  நிலை துடைத்த பூமி 
நல் உறவுதனை துலைத்து விட்டு
உருக்குலைந்து நிற்பதனை

நெஞ்சமதில் நினைத்துவிட்டால்
இந்த நினைப்பு எங்கே போகுமடா!
கணக்கற்ற உயிர்ப்பலிகள் இங்கே
கருணையற்று நிகழ்ந்ததடா!
எமக்கென ஒரு வாழ்வு அது இன்றும்                                                           இருட்டிநிலேதான்  இருக்குதடா!
இந்தக் கவலைமட்டும் இல்லையென்றால்
கண்களுக்கு ஏது தொல்லையடா !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/28/2011

காத்திருந்த விழிகள்....

முற்றத்து வெண்ணிலவே எம்மை
முதுகில் சுமந்தவள் எங்கே!
பத்துமாதம் சுமந்தவள்
பாதியிலே உயிர்துறந்தாள்!

எம் மொத்த உறவுகளையும்
தன் முதுகின்மேல் சுமந்தவள் அன்று
முள் வேலிக்குள் அகப்பட்டாள்
இன்றும் கத்திக் கத்தியே எம்
காலங்களும் வீணானதே!

கலங்குகின்றோம் வருந்துகின்றோம்..
கண்ணீரில் தினம் குளித்தும்  
தணியாத உயர் வெப்பத்தால் இதயம் 
கருகியே உருகிடும் இந்நிலை மாறுமோ!

கிட்டிப்புல்லு விளையாடும்போது 
எட்டி எட்டி அளந்த கரம் உன்னை 
விட்டுப் பிரிந்த நாள்முதலாய் 
தொட்டுத் தழுவத் துடிக்கிறதே!

ஏக்கம் கொண்ட நெஞ்சத்தில் 
தூக்கம் கெட்டுப் போனதே!
மாற்றமின்றி எம் வாழ்க்கை
மயாணம் நோக்கிச் செல்லுதே!

பட்டி தொட்டி எங்கேயும் நாம் 
பாடித்திரிந்த காலங்கள்
நித்தம் மனதை வாட்டுதே!
நீதி செத்துப் போனதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/13/2011

தரைமீது நானுறுண்டேன்

தரைமீது நானுறுண்டேன்
தலைமீது தீச்சட்டி
பாற்குடமும் நான் எடுத்தேன் 
மாரியம்மா... என்னைப் பார்க்காமல்
ஏனிருந்தாய் மாரியம்மா                                                                                                       
உலகெங்கும் உன் புகழை
ஓயாமல் நான் கேட்டும்
உனக்காக ஏங்கி நின்றேன்
மாரியம்மா.....உந்தன்                                                                                            உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா.......உந்தன்                                                                                          உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா........

ஒருகோடி ஜென்மங்கள்
உலகத்தில் நான் ஜெனித்தாலும் 
உன் நாமம் ஓத வேண்டும் 
மாரியம்மா.........நான் உனக்காக                                                                       வாழ வேண்டும் மாரியம்மா...........

கருமாரி அம்மா உன் 
கால் தொட்டு நான் பெற்ற 
பேரின்பம் பெற வேண்டும் 
மாரியம்மா......அன்பு குறையாத 
தாயே நீ வாடியம்மா... அன்பு
குறையாத தாயே நீ வாடியம்மா.... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.